Posts

Showing posts with the label Tamil Quotes

வாசிக்க வேண்டிய சிறப்பு வாய்ந்த சிந்தனை துளிகள்

Image
அவசியம் வாசிக்க வேண்டிய சிறந்த சிந்தனை துளிகள்👇👇 (1) வாழ்வில் எவரையும் பகைத்துக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பு பாராட்டுங்கள். ஏனெனில், அன்பு அனைத்தைக் காட்டிலும் அதிக சிறப்பு வாய்ந்ததாகும். (2) வருங்கால வாழ்வு நம் கையில் இல்லை என்பதை நன்கறிந்தும், வருங்காலத்தை  எண்ணி வருந்தி நேரத்தை வீணாக்குவதில் சிறிதும் பலனில்லை. (3) மன ஈடுபாட்டுடன் கனவினை நனவாக்க தினந்தோறும் பாடுபட்டு உழைத்து வந்தால், நிச்சயம் கனவு ஈடேறும் விரைவில். (4) அனைவரும் பயணிக்கும் பாதைகளிலே நாமும் பயணிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், பயணிக்கும் பாதை சரியானதாக இருக்க வேண்டும். (5) குறை கூறுதல் மிக எளிய காரியமாகும். ஆனால், குறை கூறும் முன் அவரது சூழலில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என சிந்தனை செய்து பாருங்கள். (6) உங்கள் வாழ்வு வளமாக அமைய உள்ளம் உருகி உதவும் எவரும் எளிதில் கிடைப்பது மிக மிக அரிது.  (7) நீங்கள் வேடிக்கையாக பயன்படுத்தும் சில சொற்களும் சில நேரங்களில் சிலருக்கு வேதனையும் தரக்கூடும். எனவே, தேர்வு செய்து சொற்களை பயன்படுத்துங்கள். (8) சமூகத்தில் உள்ள மக்களின் கண்களுக்கு சிறந்த மனிதனாக காட்சி தருவ...

அனைவரும் பின்பற்ற வேண்டிய சிந்தனை துளிகள்

Image
வாழ்வை சிறந்த முறையில் வாழ வழிகாட்டும் மிக உயர்ந்த சிந்தனை துளிகள்👇👇 (1) அறம் நிறைந்த வாழ்வை வாழ ஒருவருக்கு அறிவுரை கொடுத்து உதவுவது தவறில்லை. ஆனால், அறத்தை நாமும் கடைப்பிடிக்க தவறுதல் கூடாது. (2) இதயத்தில் இரக்கம் இல்லையெனில் இறைவன் என்றும் உதவ முன்வர மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (3) நீங்கள் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து நன்மையையும் தீமையையும் பலன்களாக தருபவை சொற்கள். (4) உங்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டும் நபரை என்றுமே பகைத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில், பொறாமையின்றி ஊக்கம் தரும் உள்ளம் உள்ளவர் உலகில் மிக குறைவு. (5) உழைப்பு என்ற விதையை விதைக்காமல் வெற்றி என்ற பழத்தை சுவைக்கச் சிந்திப்பது என்றென்றும் சாத்தியமற்றது. (6) வாழ்க்கையின் அடுத்த நொடி நிரந்தரமற்றது. எனவே, காலங்கள் கடந்த பின் காத்திருக்கும் கவலைகளை எண்ணி கவலைப்படுவது பயனற்றது. (7) வசந்தம் வாழ்வில் வேண்டும் என்றால் மனதிலிருந்து வஞ்சகத்தை அகற்றுதல் மிக அவசியமாகும். (8) எவரது குணத்தையும் அவர் தோற்றத்தை வைத்து கணக்கிடாதீர்கள். ஏனெனில், பார்ப்பதற்கு அழகாக இருப்பவர்கள் பலரது சிந்தை அழகாக இருப்பது இல்லை. (9) தனக்கு கிட...

வளமிக்க வாழ்வுக்கு வழிகாட்டும் சிந்தனை துளிகள்

Image
சிறப்பான வாழ்விற்கு வழிகாட்டும் சிறந்த சிந்தனை துளிகள்👇👇 (1) ஆயிரம் வார்த்தைகளால் சாதிக்க முடியாதவற்றைக் கூட மௌனம் சில நேரம் சாத்தியமாக்கிவிடும். (2) உங்கள் வாழ்க்கையின் நிலையை எண்ணி வருந்தும் முன், 'உங்கள் வாழ்வின் நிலையை மாற்ற நீங்கள் செய்த முயற்சி போதுமானதா?' என சிந்தித்து பாருங்கள். (3) கடின உழைப்பும் கலங்காத மன உறுதியும் இருப்பவருக்கு எக்காரியமும் எளிதில் கைகூடும். (4) நமக்கு கிடைக்கும் வெற்றிகளுக்கு நமது கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் காரணமாக கூறுகிறோம். ஆனால், நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு நமது தவறுகளைக் காரணமாக கூறும் தைரியம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை. (5) வறுமை நிலையிலும் வஞ்சகம் இல்லாத மனம் எவரிடத்தில் இருக்கிறதோ,  அவரிடத்தில் இறைவன் என்றும் வாசஞ் செய்வார். (6) தேர்வு செய்து பயன்படுத்தினால் வாழ்வு என்ற பரீட்சையில் தேர்ச்சி பெற்றுத்தரும் தகுதியுடையவை சொற்கள். (7) வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் வெற்றி பெற துடிப்பவரை விட, கிடைக்கும் இடத்தில் வெற்றிக்கான வாய்ப்பை ஏற்படுத்துவரே சாமர்த்தியசாலி. (8) இன்றைய நவீன யுகத்தில், வாழ்வை வளமையாக வாழ்வதற்கு பணத்தை சேர்க்கும் ம...

வாழ்வுக்கு வளமை சேர்க்க உதவும் சிந்தனை துளிகள்

Image
உயர்ந்த வாழ்வை வாழ பின்பற்ற வேண்டிய சிந்தனை துளிகள்👇👇 (1) நீங்கள் செல்வச் செழிப்பான வாழ்வை வாழ விரும்பினால், ஆரோக்கியமான வாழ்வை முதலில் தேடி கொள்ளுங்கள். ஏனெனில், ஆரோக்கியத்தை விட உயர்ந்த செல்வம் இவ்வுலகில் இல்லை. (2) அடுத்தவருடன் அனாவசியமான வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கு முன்பு உங்களின் பொன்னான நேரம் வீணாவதை சிந்தனையில் வைத்து கொள்ளுங்கள். (3) பிறருடைய குணத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு முன் அவரைப் பற்றி புகழோ பழியோ சொல்லாதீர்கள். ஏனெனில், அது எந்நேரத்திலும் உங்களுக்கு ஆபத்தை தேடி தரலாம். (4) யாரேனும் உங்கள் மீது குறைகள் பல கூறி உங்களை திருந்த வலியுறுத்தினால் அதை எண்ணி மனம் கலங்க வேண்டாம். ஆனால், அவர் கூறிய குறைகள் எவருக்கேனும் இடையூறுகள் ஏற்படுத்துவதாக இருப்பின், அறிவுரையை ஏற்று தங்கள் குணங்களை மாற்றிக்கொள்வதே சிறந்ததாகும். (5) நீங்கள் அடுத்தவருக்கு நன்மை செய்தால், இறைவன் உங்கள் வாழ்வை நிச்சயமாக உயர்த்துவார். (6) உள்ளத்தால் எவருக்கும் துயரம் தராமல் வாழ்ந்து வருபவனின் வாழ்க்கையில் தோல்விகளுக்கு என்றென்றும் இடமில்லை. (7) எவருடைய மனதையும் காயப்படுத்தி வாழ்வை வாழாதீர். ஏனெனில்...

வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் சிந்தனை துளிகள்

Image
வாழ்வில் வளமை பெற வழிகாட்டும் சிந்தனை துளிகள் நேரம்👇👇 (1) எவரேனும் உங்கள் தூய்மையான மனதை புரிந்து கொள்ளவில்லை என்றால் அதை எண்ணி மனம் தளராதீர்கள். ஏனெனில், இழப்பு உங்களுக்கு அல்ல, அவருக்குத் தான்.  (2) உங்களை அவமதித்த நபரிடத்தில் உங்களை நிரூபிக்க நேரத்தை வீண் செய்யாதீர்கள். ஏனெனில், நேரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது.  (3) உதவி புரிய இயலும் தகுதியில் இருந்தால், கண் முன்னே துயரத்தில் தவிப்பவர்க்கு உதவ முன்வாருங்கள். ஏனெனில், ஒருவரின் துயரத்தை தீர்ப்பது இறைத்தொண்டுக்கு சமமாகும். (4) உயர்ந்த கனவுகள் காண்பதர்க்கு தகுதி ஒரு தடையில்லை. ஆனால், கனவுகளை கரம்பிடிக்க உங்கள் மனதை தகுதிப்படுத்துதல் அவசியமாகும்.  (5) எழுச்சி மிகுந்த எண்ணங்கள் உங்கள் வாழ்வை ஒளிமயமாக்கும் சிறப்பு கொண்டவை ஆகும். எனவே, வீழ்ச்சியை தழுவினாலும் எண்ணத்தால் எழுச்சியை சிந்திப்பது சிறப்பாகும். (6) வாழ்வில் வீழ்ச்சியே இல்லையென்றால், உயர்ச்சியின் சிறப்பை அறிந்துகொள்ள நமக்கு தகுந்த சந்தர்ப்பமே கிடைக்காமல் போய்விடும்.  (7) வாழ்வை வளமாக வாழ்வதற்கு வாழ்வு கற்றுத்தரும் பாடங்களை கற்றுக்கொள்வதே போதும். நம் வாழ்வில் ஏற்...

வளமையான வாழ்வை வசமாக்க உதவும் சிந்தனை துளிகள்

Image
வாழ்வில் உயர்ச்சியை அடைய ஊக்கம் தரும் சிறப்பு வாய்ந்த சிந்தனை துளிகள்👇👇 (1) உங்கள் நற்குணங்களை உங்களது சுற்றத்தார் அங்கீகரிக்காவிட்டாலும் அக்குணத்தை கைவிட்டுவிடாதீர். நினைவில் கொள்ளுங்கள்- இறைவன் உங்கள் நற்குணங்களை நிச்சயம் அங்கீகரிப்பார். (2) ஓய்வு எடுத்து கொண்டு பணியாற்றலாம் என எண்ணுவதில் தவறில்லை. ஆனால், ஓய்வு மட்டுமே எடுத்துக்கொண்டு வாழ்வை கழிப்பதால் பணி தானாக நிறைவு பெற்றுவிடாது.  (3) முயற்சி செய்து உயர்ச்சியை அடைந்த பின்னும் அந்த உயர்ச்சியின் சிறப்பை உணர இயலாவிட்டால் முயற்சியின் பலன் கிடைத்தும் பலனற்று போய்விடும். (4) துயரத்தில் துணையாக வரும் நண்பர்களை பெற இயலாவிட்டாலும், துயரத்தை ஏற்படுத்துபவரை நண்பராக ஏற்படுத்தாமல் இருப்பதே சாலச்சிறந்த செயலாகும். (5) உங்கள் வாழ்க்கையை விட உயர்ந்த ஆசிரியரை நீங்கள் எங்கு தேடினாலும் பெற இயலாது. (6) தோல்வி அடைந்தால் துயரத்துடன் இருப்பதை நிறுத்துங்கள். ஏனெனில், ஏற்றமும் இறக்கமும் அனைவரின் வாழ்விலும் ஏற்படுவது மிகவும் இயல்பாகும்.  (7) உள்ளமறிந்து ஒருவருக்கும் துயரம் இழைக்காதீர். ஏனெனில், உங்கள் கர்மவினை உங்களை எப்போதும் பின்தொடர்ந்தே வரும்...

சிறப்பான வாழ்வினை வாழ சிறந்த சிந்தனை துளிகள்

Image
வாழ்வை சிறந்த முறையில் வாழ உதவும் சிறப்பான சிந்தனை துளிகள்👇👇 (1) தோல்வியில் முடிவெடுக்கவும் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ளவும் மனதில் துணிவு வேண்டும். ஏனெனில், மனதில் துணிவு இருந்தால் கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் கையாள இயலும். (2) கடந்து சென்ற கடுமையான காலங்களை எண்ணி மனமுடைந்து போவதில் பயனில்லை. எனவே, நிகழ்காலத்தை மகிழ்ச்சியுடன் சிரித்தபடி வாழுங்கள். (3) உறுதியற்ற எதிர்கால வாழ்வை எண்ணியெண்ணி, இன்று உங்கள் கையில் இருக்கும் நேரத்தையும் நிகழ்கால வாழ்வையும் வீணாக்கி விடாதீர்கள்.  (4) உலகில் வாழும் அனைத்து உயிர்களிடத்திலும் பேதமின்றி அன்பு காட்டுங்கள். இதைச் செய்தாலே உங்களுக்கு இறையருள் எளிதில் கிட்டும்.  (5) ஒருவரிடம் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை ஏட்டில் எழுதி அழிப்பது போன்று எளிதில் அழிக்க இயலாது. எனவே, அனைவரிடமும் வார்த்தைகளை எப்போதும் சிந்தித்து பயன்படுத்துங்கள். (6) நீங்கள் எவரது மனதையும் புண்படுத்தாமல் வாழ விரும்பினால், நாவை நல்வழிப்படுத்த பழகுங்கள். ஏனெனில், நாவை விட எந்த கொடிய ஆயுதத்தாலும் மனதை கொடூரமாக காயப்படுத்த இயலாது. (7) நீங்கள் நினைப்பது போல, அனைவரும் உங்களி...

வாழ்வை வளமாக மாற்ற வழிகாட்டும் சிந்தனை துளிகள்

Image
  வாழ்வை வளமாக வாழ வழிகள் விளக்கிடும் சிறந்த சிந்தனை துளிகள்👇👇 (1) நீங்கள் உங்களை அழகாக்க விரும்புகிறீர்களா? அப்படியெனில், உள்ளத்தை அழகாக்குங்கள். ஏனெனில், அகத்தின் அழகு முகத்தில் தெரியும். (2) காலத்தை சிறந்த முறையில் கையாள பழகிவிட்டால், வாழ்வின் பல நேரத்தை வளமாக மாற்ற காலமே பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துவிடும். (3) வாழ்வை வீணாக்க விரும்பவில்லை என்றால், அனைவரிடமும் வார்த்தைகளை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள். ஏனெனில், பலருடைய வாழ்வை வார்த்தைகளே பாழாக்கிவிடுகிறது. (4) வெற்றிக்கான வாய்ப்புகள் கண்ணெதிரே இருந்தாலும், முயற்சி செய்து தேடாவிட்டால் ஒருபோதும் வெற்றி கிடைக்காது. எனவே, முயற்சியின்றி வெற்றியை எதிர்பார்ப்பதில் துளியும் பலனில்லை. (5) சிரிப்பதற்கு நீங்கள் விரும்பினால் மட்டுமே, சிரிக்க இயலும். நினைவில் கொள்ளுங்கள், சிரிக்கும் அனைவரது வாழ்விலும் கவலை இருக்கிறது.  (6) தினமும் சிறிது நேரம் வாசிப்பதற்கு செலவிடுங்கள். ஏனெனில், வயிற்றுப்பசி தீர்ப்பது போல, அறிவுப்பசியையும் தீர்ப்பது மிகவும் அவசியம். (7) அனைவரது திறமைகளும் வித்தியாசமாக இருக்கும் போது, ஒருவரின் பாதையை மட்டுமே பின்பற்றி...

அவசியம் வாசிக்க வேண்டிய அற்புதமான சிந்தனைகள்

Image
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய அற்புதமான சிந்தனை துளிகள்👇👇 (1)அடுத்தவருடைய வாழ்வை பின்பற்றுவதை விட, உங்கள் திறமைகளை பின்பற்றுங்கள். இதுவே வெற்றிக்கான இரகசியம்! (2) நமது வாழ்வில் வருகை தரும் துன்பங்கள் தான், நம்மை பக்குவப்படுத்தி எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் தைரியத்தைத் தரும். (3) விடாமுயற்சியுடன் தொடர்ச்சியாக உழைக்க மனதைரியம் இருந்தால், மலையளவு துயரம் வந்தாலும், உங்களிடம் தோல்வியை சந்திக்கும். (4) உருவத்தை வைத்து, எவருடைய குணத்தையும் முடிவு செய்யாதீர்கள். நினைவில் கொள்ளுங்கள், உருவத்தில் மிகச்சிறிய அச்சாணி தான், பிரம்மாண்டமான தேரை இயக்கக் காரணமாக உள்ளது. (5) உயர்ச்சியை அடைய நீங்கள் முயற்சி செய்யவில்லை என்றால் கனவுகள் காண்பதில் துளியும் பலனின்றி போகும். (6) தளராத முயற்சியும் தவறாத பயிற்சியும் இருந்தால், தவறிய வாய்ப்புகளும் தானே தேடி வரும். (7) வெற்றிக்கான வாய்ப்புகள் உங்களிடம் தேடி வராவிட்டால், நீங்களே வாய்ப்பை ஏற்படுத்துங்கள். இதுவே, வெற்றியை நோக்கிய பயணத்தில் நமது முதல் முயற்சி ஆகும். (8) வெற்றியை நீங்கள் தேடிச் செல்லாதவரை வெற்றி உங்களைத் தேடி வராது.  (9) எந்த செயலையும் கால...

சிறப்பான கருத்துக்கள் பகிரும் மிகச்சிறந்த சிந்தனைகள்

Image
  அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்👇👇 (1) மனம் கவரும் வகையில் பேசும் அன்னியர் அனைவரிடமும் மனம்விட்டு பேசிவிடாதீர்கள். ஏனெனில், உலகில், நற்செயல்களை விட குற்றங்களே மிக எளிதாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. (2)  கடினமான சூழ்நிலையை அனைவரும் வாழ்வில் கடந்து வருவது வழக்கம். ஆனால், அதை எதிர்கொள்ளும் விதத்தில் தான் உங்கள் சாமர்த்தியம் உள்ளது. (3) ஆபத்தான நிலையில் உதவும் நண்பரைப் பெற இயலாவிட்டாலும், ஆபத்தை விளைவிப்பரை  நண்பராய் நிச்சயம் வைத்துக் கொள்ளாதீர்கள். (4) தொலைவான தூரத்தில் இருந்தாலும், தொலைத்த கடந்த காலத்தை மீண்டும் நினைத்து பார்க்க  வைப்பதில்தான் தனித்துவமான நட்பின் தன்னேரில்லாத ஆழம் உள்ளது. (5) ஊதியம் எதிர்ப்பாராது, உதவிக்கரம் நீட்டுவோரிடம் நன்றி தெரிவித்தல், அனைத்து நற்செயல்களைக் காட்டிலும் மிகச்சிறந்த செயலாகும். (6) தன் வெற்றிக்குக் காரணமாக தன்னுடைய விடாமுயற்சியை மட்டுமே சுட்டிக்காட்டும் சிலர், தோல்விக்குக் காரணமாக மற்றவரின் செயல்களையே சுட்டிக்காட்டுவது ஏற்றுக்கொள்ள தகுந்த செயலன்று. (7) கடுமையான வார்த்தைகளால் ஆலோசனை வழங்குவதை வி...

அனைவரையும் நல்வழிப்படுத்தும் சிந்தனைத் துளிகள்

Image
அனைவரையும் சிந்திக்க வைக்கும் மிகச்சிறந்த சிந்தனை துளிகள்👇👇 (1) நன்னெறியை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தால், நன்மைகளை இறைவன் நிச்சயம் அருளுவார். (2) நீங்கள் உறுதியான மனதோடு உழைக்கத் தயாராக இருந்தால், உங்களைத் தழுவிய தோல்வியே உங்களிடம் தோற்றுவிடும். (3) இனிமையான வாழ்வை அமைக்க இன்றியமையாதது, அனைவரிடமும் வஞ்சகமின்றி அன்போடு நடந்துக் கொள்வதே ஆகும். (4) உண்மையான தோல்வி என்பது நீங்கள் முயற்சிக்க தயங்கும் போதுதான் ஏற்படுகிறது. (5) பார்வையாளராக விமர்சிப்பவரை விட  பங்கேற்பாளராக இருப்பவருக்குத்தான் அனுபவம் அதிகம். எனவே, வெற்றி மற்றும் தோல்வி பற்றி வருந்தாமல் வாழ்க்கைத் தரும் போட்டிகளில் பங்கேற்று அனுபவச்சாலியாக மாறிடுங்கள். (6) உங்கள் மனதளவில், எவரையும் உங்களுக்கு இணையாக வைத்து ஒப்பிடாதீர்கள். அடுத்தவரோடு ஒப்பிட்டு உங்களுடைய தனித்தன்மையை நீங்களே மறந்துவிடாதீர்கள். (7) அனைவருடைய மனதையும் கட்டுப்படுத்த வல்ல வலிமையான ஆயுதம் அன்பு. எனவே, அன்பை சிறந்த முறையில் பயன்படுத்தி உங்களைச் சுற்றி இருப்பவரை நல்வழிப்படுத்துங்கள். (8) சில நேரங்களில் சிலரிடம் மௌனம் காப்பதே பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்...

வாழ்வில் உயர வழிகாட்டும் சிறந்த சிந்தனை துளிகள்

Image
  சிறந்த சிந்தனைகளை விளக்கும் தலைச்சிறந்த சிந்தனை துளிகள்👇👇  (1) "நீங்கள் நம்பியவர் உங்களை ஏமாற்றினால், தவறு உங்களுடையதே. யாரையும் நம்புவதற்கு முன், அவரது குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்." (2) "கடினமான நேரத்தில், விதி என கூறிக்கொண்டு கவலையில் ஆழ்ந்து இருப்பதை விட, அடுத்து செய்ய வேண்டியதை எண்ணிப் பார்ப்பதே சிறந்த செயலாகும்." (3) "உதவும் பண்பு அனைவருக்கும் இருக்க வேண்டியது மிக அவசியம். அதிலும், உதவி தேடுபவரைத் தேடிச்சென்று உதவி செய்வது உன்னதமான செயலாகும்." (4) "நீங்கள் நம்பியவர் செய்த தீங்கை மறக்க முயற்சி செய்யுங்கள். ஆனால், மீண்டும் எவரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள்." (5) "தங்களை தாங்களே நம்பவில்லை என்றால், அதைவிட மிகப்பெரிய தோல்வி வேரெதுவும் இல்லை." (6) "நீங்கள் எதைச் செய்தாலும் சிலர் உங்களிடம் தவறு கண்டுபிடித்துக் கொண்டே இருப்பவர். அத்தகையோரிடம் நற்பெயர் பெற நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்." (7) "வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் செல்ல விரும்பினால், உங்களைத் தாழ்த்தி பேசுபவர்களை தங்கள் அருகில...

சிறந்த கருத்துக்களை சொல்லும் சிறந்த சிந்தனைகள்

Image
சிந்திக்க வைக்கும் சின்னஞ்சிறு சிந்தனை துளிகளை வாசித்திடுங்கள்👇👇 (1) "வாழ்வில் வளர்ச்சி வேண்டுமாயின், வாய் பேசுவதை விட வளர்ச்சிக்கான முயற்சி மேற்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்." (2) "ஒருவருடைய பொறுமையை நிர்ணயப்பதில் இந்த சமூகம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. பொறுமை கடைப்பிடிப்பவர், சமூகத்தின் தூண்டலால், கடுமையாக மாறுகின்றனர்." (3) "அமைதியான முறையில் வாழ்வை வாழ, அனுசரித்து வாழ்வது அவசியம். ஆனால், அனுசரித்து செல்வது மட்டுமே வாழ்வாகிப் போனால், வாழ்வில் அமைதிக்கு வழி இருக்காது." (4) "வார்த்தைகளை தேர்வு செய்து பயன்படுத்தும் பண்பு இல்லாதவர், தன் வாழ்வை தானே சிக்கலாக்கிக் கொள்வர்." (5) "எதிரியைப் போல் இருப்பவர்களை விட, ஆபத்தில் உதவாது நண்பனைப் போல் இருப்பவருடன் பழக்கம் கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்." (6) "உங்கள் மன நிறைவுக்காக, இயன்றவரை அனைவருக்கும் உதவி செய்யுங்கள். ஆனால், அடுத்தவர் குறை கண்டுபிடித்தால், அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்." (7) "உலகில் உள்ள அனைவரிடமும் எவராலும் நற்பெயர் பெற இயலாது. ஏனெனில், நீங்கள் செய்யும் நன்மைகளை...

சிந்தனை துளிகளோடு அன்றாட தினத்தை சிறப்பாக்குங்கள்

Image
எங்களது   சிந்தனை துளிகளோடு உங்கள் தினத்தை சிறப்பாக மாற்றுங்கள்👇👇 (1) "உங்களைப் பற்றி குறை கூறுபவரிடம்,  நீங்களும் குறை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை." (2) "விரும்புவது போல் வாழ்வு அமையவில்லை என அனுதினமும் வாழ்வை கண்ணீரில் தொலைப்பதை விட, கிடைத்த வாழ்வில், சின்னஞ்சிறு தருணங்களையும் மகிழ்வாகக் கொண்டாடுவதே சிறந்தது." (3) "தவறு செய்ய முயற்சிப்போரை தடுக்க தவறாதீர்கள். உங்கள் அறிவுரையை ஏற்க தவறுபவரை திருத்த முயற்சிக்காதீர்." (4)"உதவி செய்வதற்கு முன், நீங்கள் உதவுபவர்,  உங்கள் உதவியை பெற தகுதியானவரா என  ஆராய்ந்து கொள்வது அவசியம்."  (5) "அடுத்தவருடைய நம்பிக்கையை ஒருபோதும் உடைத்து விடாதீர்கள். ஏனெனில், ஒருமுறை உடைத்த நம்பிக்கையை,  முன்பு போல் வலிமையாய் ஒருபோதும் மாற்ற இயலாது." (6) "உங்கள் பெருமையை புகழ்ந்து பாடுபவரை விட, உங்கள் தவறை சுட்டிக்காட்டத் தயாராக இருப்பவரை நண்பராக வைத்துக் கொள்ளுங்கள்." (7) "லட்சியத்தை அடைய வேண்டும் என சொல்வது மிகவும் எளிமை; ஆனால், நேரத்தை அலட்சியம் செய்யாமல் இருப்பவரால் மட்டுமே லட்சியத்தை அடைய முட...

அற்புதமான வாழ்வுக்கு வழிகாட்டும் சிந்தனை துளிகள்

Image
அற்புதமான வாழ்வுக்கு வழிகாட்டும் சிந்தனை  துளிகள்:- (1) "ஆரோக்கியமான சிந்தனை; ஆரோக்கியமான வாழ்க்கை. (2) "முயன்றால் மண்ணும் பொன்னாகும், முயற்சியே மேன்மை." (3) "உழைப்பை மறந்தவன் ஜெயத்தை மறக்கிறான்!!" (4) "காலம் கடந்துவிட்டால் காரியம் சிதறிவிடும்." (5) "வெளுத்ததெல்லாம் பால் அல்ல." (6) "கத்தியை தீட்டாதே; புத்தியை தீட்டு." (7) "பொறுத்தார் பூமி ஆள்வார்." (8) "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு." (9) "யோசிக்காமல் முடிவு எடுப்பதும், நீந்த தெரியாமல் கிணற்றுக்குள் குதிப்பதும் ஒன்று." (10) "கண்ணால் காண்பது எல்லாம் மெய்யல்ல.தீவிர விசாரிப்பதே மெய்." (11) "பதறிய காரியம் சிதறிப் போகும்." (12) "பயம் அகம்பாவத்தைத் தரும்; அகம்பாவம் அழிவைத் தரும்." (13) "தீதும் நன்றும் பிறர் தருவதால் வராது." (14) "பொய் மெய்யாகாது, மெய் வலிமையானது, பொய் எளிதாக தோற்றுவிடும்." (15) "தன் கையே தனக்கு உதவி." (16) "கடின உழைப்புக்கு இணை ஏதுமில்லை." (17) "தன் வினை தன்னைச் சுட...

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Let everyone celebrate this special day with our patriotic poem

Followers of Our Blog