வாசிக்க வேண்டிய சிறப்பு வாய்ந்த சிந்தனை துளிகள்
அவசியம் வாசிக்க வேண்டிய சிறந்த சிந்தனை துளிகள்👇👇
(1) வாழ்வில் எவரையும் பகைத்துக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பு பாராட்டுங்கள். ஏனெனில், அன்பு அனைத்தைக் காட்டிலும் அதிக சிறப்பு வாய்ந்ததாகும்.
(2) வருங்கால வாழ்வு நம் கையில் இல்லை என்பதை நன்கறிந்தும், வருங்காலத்தை எண்ணி வருந்தி நேரத்தை வீணாக்குவதில் சிறிதும் பலனில்லை.
(3) மன ஈடுபாட்டுடன் கனவினை நனவாக்க தினந்தோறும் பாடுபட்டு உழைத்து வந்தால், நிச்சயம் கனவு ஈடேறும் விரைவில்.
(4) அனைவரும் பயணிக்கும் பாதைகளிலே நாமும் பயணிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், பயணிக்கும் பாதை சரியானதாக இருக்க வேண்டும்.
(5) குறை கூறுதல் மிக எளிய காரியமாகும். ஆனால், குறை கூறும் முன் அவரது சூழலில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என சிந்தனை செய்து பாருங்கள்.
(6) உங்கள் வாழ்வு வளமாக அமைய உள்ளம் உருகி உதவும் எவரும் எளிதில் கிடைப்பது மிக மிக அரிது.
(7) நீங்கள் வேடிக்கையாக பயன்படுத்தும் சில சொற்களும் சில நேரங்களில் சிலருக்கு வேதனையும் தரக்கூடும். எனவே, தேர்வு செய்து சொற்களை பயன்படுத்துங்கள்.
(8) சமூகத்தில் உள்ள மக்களின் கண்களுக்கு சிறந்த மனிதனாக காட்சி தருவதற்காக வாழ்வதை விட, மனதிருப்திக்காக வாழ்வதே சிறந்ததாகும்.
(9) கையில் இருக்கும் காலம் வரை மட்டுமே சமுதாயத்தில் மதிப்பு தரும் வல்லமை படைத்தது பணம்.
(10) வேலை நேரத்தில் வேலை செய்வது எவ்வாறு அவசியமோ, அதே போல, ஓய்வு சமயத்தில் ஓய்வு எடுத்தலும் மிக அவசியமாகும்.
சிந்தனை துளிகள் அனைத்தும் தங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் சிந்தனை துளிகளுக்கு, கீழ் இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். சிந்தனை துளிகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பகிர தயங்காதீர்கள்.
🤓👍முற்றிலும் சரியான 👍மற்றும் பின்பற்றவேண்டிய சிந்தனை-துளிகள் அருமையாக இருந்தது👌🏻👌🏻👌🏻👌🏻
ReplyDelete