திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்
'உலக பொதுமறை' என சிறப்பித்து, உலக மக்கள் அனைவராலும் போற்றி புகழப்படும் நூல் திருக்குறள். வள்ளுவன் வாய்மொழியாம் திருக்குறள், ஒன்றே முக்கால் அடிகளில் உலக வாழ்வை அறத்துடன் வாழ்வதற்கான வழிகளை வாசிப்போருக்கு வழிகாட்டுகிறது. முப்பாலின் வழிநின்று வாழ்வை வாழ்பவர் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்பார் என்பதில் ஐயமில்லை.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறள் பற்றி சில சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ள கீழுள்ள விடுகதைகளை வாசியுங்கள்👇👇
விடை: குறிப்பறிதல் அதிகாரம்.
(பொருட்பால்- அதிகாரம் 71, இன்பத்துப்பால்- அதிகாரம் 110)
(2) திருக்குறள் நூல் முழுவதிலும் பயன்படுத்தப்படாத ஒரே எண் எது? _________.
விடை: எண் 9.
(3) பல புலவர்களால் 'முப்பால்' என அழைக்கப்படும் திருக்குறளில் உள்ள முதல் பாடலின் முதலெழுத்தும் இறுதிப் பாடலின் இறுதி எழுத்தும் என்ன? _________.
விடை: முதலெழுத்து- அ
இறுதி எழுத்து- ன்.
'அ' என்ற முதல் உயிரெழுத்தால் தொடங்கி, 'ன்' என்ற இறுதி மெய்யெழுத்தைக் கொண்டு முடிவது இந்நூலின் சிறப்பம்சம் ஆகும்.
(4) திருக்குறள் நூலில் உள்ள மூவகைப் பால் பிரிவுகள் 'அறம், பொருள், இன்பம்' என்பதாகும். அறம், பொருள், இன்பம் ஆகிய பிரிவுகளில் எத்தனை எத்தனை அதிகாரங்கள் இடம்பெற்றுள்ளன? _________.
விடை:
- அறத்துப்பால்- 38 அதிகாரங்கள்.
- பொருட்பால்- 70 அதிகாரங்கள்.
- இன்பத்துப்பால்- 25 அதிகாரங்கள்.
(5) திருக்குறள் நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார்? _______.
விடை: மணக்குடவர்.
(6) 'கோடி' என்ற சொல்லும் 'எழுபது கோடி' என்ற சொல்லும் திருக்குறள் நூலில் எத்தனை முறை இடம்பெற்றுள்ளது? ______.
விடை:
'கோடி' என்ற சொல் ஏழு முறையும், 'எழுபது கோடி' என்ற சொல் ஒரு முறையும் திருக்குறள் நூலில் இடம்பெற்றுள்ளது.
(7) குமரிக்கடலின் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலையின் மொத்த உயரம் என்ன? ________.
விடை: 133 அடி
(குறிப்பு: திருக்குறள் நூலிலுள்ள மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கை 133).
(8) 'கடவுள் வாழ்த்து' என்ற அதிகாரத்தை முதலாக வைத்து தமிழ் மொழியில் படைக்கப்பட்ட முப்பாலில் இடம்பெறாத குறிப்பிடத்தக்க சொற்கள் எவையெவை? ______.
விடை: 'கடவுள்' மற்றும் 'தமிழ்'.
(9) திருக்குறளை முதன்முதலில் ஓலைச்சுவடிகளில் இருந்து
அச்சிட்டு வெளியிட்ட ஆண்டு எது? _______.
விடை: 1812.
(10) திருவள்ளுவரைச் சிறப்பிக்க கட்டப்பட்ட மணிமண்டபம் எவ்வாறு அழைக்கப்பட்டு வருகிறது?______.
விடை: வள்ளுவர் கோட்டம்.
மேலும், விடுகதைகளை வாசிக்க, இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள்.
திருக்குறள் பற்றிய நீங்கள் தெரிந்து கொண்டதை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள்.
திருக்குறளின் சிறப்பை தங்கள் நண்பர்களும் அறியுமாறு அதிகம் பகிர்ந்திடுங்கள்.
திருக்குறள் பற்றி யாம் அறிந்திடாத செய்திகளை தந்தமைக்கு நன்றிகள் 🙏♥️💥
ReplyDelete🤩👌👌👌👌👏 👏👏👏👏👏 அருமை அருமை 👍
ReplyDelete