விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்
விலங்குகளைப் பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள் தரும் விடுகதை நேரம் விடைகளுடன்👇👇
(1) இது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் விலங்காகும். பின்னோக்கி நடக்க இயலாத விலங்குகளுள் இதுவும் ஒன்று. அது என்ன விலங்கு?______.
விடை: கங்காரு.
(2) இது நிலத்தில் வாழும் விலங்களுள் பெரிய விலங்காகும். மிகச்சிறந்த ஞாபகசக்தி கொண்ட விலங்குகளுள் இதுவும் ஒன்று. அது என்ன விலங்கு?______.
விடை: யானை.
(3) நன்றிக்கு சான்றாக கூறப்படும் விலங்கு நாய். மனித கைரேகையைப் போல, நாயின் எந்த உடலுருப்பு தனித்துவமானது?_______.
விடை: மூக்கின் ரேகை.
(4) தனது வாழ்வின் ஏறத்தாழ 70 சதவீதத்தை தூக்கத்தில் கழிக்கும் விலங்கு இது. இந்த விலங்கு, மனிதர்களை விட ஐந்து மடங்கு கூர்மையாக கேட்கும் திறன் கொண்டது. அது என்ன விலங்கு?______.
விடை: பூனை.
(5) இவை, உலகிலுள்ள விலங்குகளுள் உயரமான விலங்கினமாக கருதப்படுவன. இவை ஒலி எழுப்பவதை மனிதர்கள் இதுவரை கேட்டதில்லை. எனவே, ஆராய்ச்சியாளர்கள் இவற்றின் ஒலி மனிதர்களின் காதுகளால் கேட்க இயலாத வண்ணம் மிகவும் மெதுவாக இருப்பதாய் கருதுகின்றனர். அது என்ன விலங்கு?_______.
விடை: ஒட்டகச்சிவிங்கி.
(6) மூன்று அடுக்கு கண் இமைகளுக்கும், கரடுமுரடான தோலுக்கும் உரிமையான விலங்கு. "பாலைவனத்தின் கப்பல்" எனவும் அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த விலங்கு. அது என்ன?_______.
விடை: ஒட்டகம்.
(7) நாய்கள் குடும்பத்தைச் சேர்ந்த மிகப்பெரிய நாயினம் இதுவே. கூட்டமாக வாழும் புத்திசாலி விலங்களுள் இவையும் ஒன்று. அது என்ன விலங்கு?________.
விடை: ஓநாய்.
(8) இவை நாய்கள் இனத்தை சார்ந்தவை. எனினும், பூனைகளின் குணங்களுடன் இவற்றின் குணம் ஒன்றிவரும். தந்திரத்துக்கு பெயர் பெற்ற விலங்கு இது. அது என்ன?_______.
விடை: நரி.
(9) உருவத்தில் குண்டாகவும் பெரியதாகவும் இருப்பினும், சிறப்பாக ஓடும் திறன் கொண்டவை இவ்விலங்கு. பெரும்பாலான இவ்விலங்குகளுக்கு நாற்பத்து இரண்டு பற்கள் உண்டு. அது என்ன?______.
விடை: கரடி.
(10) இது மிகச்சிறந்த கேட்கும் திறன் மற்றும் மோப்ப சக்தி உடைய விலங்கு. மேலும், அமைதிக்கு சான்றாகச் சொல்லப்படும் இவ்விலங்கு நீந்துவதிலும் வல்லமை பெற்றது. அது என்ன?______.
விடை: மான்.
விடுகதைகள் வாயிலாக பல சுவாரசியமான தகவல்களை அறிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறோம். மேலும், பல தகவல்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிடுங்கள். பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்.
விடுகதைகள் வாயிலாக பல சுவாரசியமான தகவல்களை அறிந்து கொண்டேன்.
ReplyDeleteஅருமை!!
Super ma
ReplyDeleteவியப்பான விடுகதை😲
ReplyDeleteதகவல்கள் மிகவும் சிறப்பு
ReplyDeleteAdmirable riddles💯
ReplyDelete