விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்
உயர்ந்து கொண்டு வருகின்ற விலைவாசியை விளக்கும் காலத்திற்கு ஏற்ற கவிதை👇👇
ஆயிரம் வல்லுநர்கள் வந்தாலும்,
உன்னைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை.
போக்குவரத்து தடைகள் வரலாம்,
ஆனால், நீ வளர தடைகள் இல்லை.
பஞ்சம் வந்து பலர் அழிந்தாலும்,
உனக்கோ ஒருநாளும் அழிவு இல்லை.
புயல்கள் அனைத்தையும் அழித்து சென்றாலும்,
உனக்கு மட்டும் அழிவு வரவில்லை.
சாமானியனை நீயோ மிரட்டுகிறாய்.
அவனையும், அவன் நிம்மதியையும் கொலை செய்கிறாய்.
நீ ஆயிரம் கொலைகள் செய்தாலும்,
உன்னை தண்டிக்க எவரும் இல்லை!!
(கவிதையை எழுதியவர் அனிதா)
விலைவாசி உயர்வை விளக்கும் இக்கவிதை தங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம்.
மேலும் கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள்.
கருத்துக்களை கமண்ட்டாக பகிர்வதோடு, கவிதையை தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
nice
ReplyDelete🥇
ReplyDeleteManithanai vilangakkum vilaivaasi uyarvooo
ReplyDelete