Posts

Showing posts with the label Kavithaigal

Best Diwali Wishes for Relatives and Friends in Tamil.

Image
  அன்பான உறவுகளுக்கும் அற்புதமான நண்பர்களுக்கும் மகிழ்வுடன் பகிர்ந்திடுங்கள், "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். " கஷ்டங்கள் அனைத்தும் பட்டாசுகளாக வெடித்து சிதற,  இன்பங்கள் அனைத்தும் தீபங்களாக ஜொலிக்க,  அழகான எதிர்காலம் வாசலில் வண்ண கோலங்களாய் நிற்க,  இனிப்பான தீபாவளி அனைவர் வாழ்விலும் தித்திக்கட்டும்!!     (கவிதையை எழுதியவர் அனிதா)  கவிதை அனைவரையும் கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். கவிதைகள் பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள் .

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Image
தந்தையர் தின சிறப்பு கவிதை:- அன்பான மனதுடன் ஆதரிப்பார். ஆர்வமாக அக்கறையுடன் வழிநடத்துவார். தன்னலமற்ற தூய மனதுடன், தன் குழந்தையைப் பற்றியே சிந்தித்திடுவார். வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, கணக்குப் பார்க்காமல் செலவிடுவார். உழைப்பை எல்லாம் உவந்தே அளிப்பார். அதை ஒருபோதும் சொல்லிக்காட்ட மாட்டார். குழந்தையின் கள்ளமற்ற புன்னகையில், தன் வெற்றி உள்ளது என்பார். தன் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக, தளர்ச்சியின்றி வழி காட்டுவார். தன்னிகரற்ற தூய நேசமுடைய பாசமான உறவு தந்தை! இறைவனின் அதிசயப் படைப்பில் அற்புத உறவு அப்பா!! (கவிதையை எழுதியவர் சுபஸ்ரீ)  கவிதை பிடித்திருந்தால், அதிகம் பகிருங்கள். கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள். மேலும் பல கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். 

அனைவரும் வாசிக்க வேண்டிய குறுங்கவிதை

Image
கொரோனா என்ற கொடிய நோயின் தீவிரத்தை விளக்கும் சிறுகவிதை குழந்தைகளின் குமுறல் காற்று மாசு அடைந்தது பாப்பா, முகத்தை முகக்கவசத்தால் மூடிடு பாப்பா. வீட்டில் ஒலிந்துகொள் பாப்பா, அல்லது கொரோனா பிடித்திடும் பாப்பா. பாடங்கள் கற்க முடியாது பாப்பா, பள்ளிகள் இப்போது திறக்காது பாப்பா. இயற்கையை அழித்தோம் பாப்பா, இன்று நாமும் அழிகிறோம் பாப்பா. இடைவெளி விட்டு நின்றிடு பாப்பா, அல்லது ஆபத்து வந்துசேரும் பாப்பா. நோய் பயம் வளர்ந்தது பாப்பா, குழந்தை பருவம் சோகத்தில் மூழ்கியது பாப்பா. (கவிதையை எழுதியவர் அனிதா) கவிதை பிடித்திருந்தால், அதிகம் பகிருங்கள். கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள். மேலும் பல கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். 

'ஆசை' என்ற தலைப்பில் அருமையான சிறுகவிதை

Image
ஆசை என்ற தலைப்பில் அற்புதமான சிறுகவிதை👇👇 ஆசை இல்லை, அசைவும் இல்லை. பக்தன் இல்லை, பூசையும் இல்லை. பசி இல்லை, புசிக்கவும் இல்லை. பழத்தேவை இல்லை, பழத்திற்காக உழைப்பும் இல்லை.  உழைப்பு இல்லை, ஜனனமும் இல்லை. ஜனனம் இல்லை, சிருஷ்டி இல்லை.  (கவிதையை எழுதியவர் அனிதா) கவிதை அனைவரையும் கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். கவிதைகளை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள்.

இன்றைய நவீன டிஜிட்டல் உலகை பற்றிய சிறுகவிதை

Image
டிஜிட்டல் மயமான நமது உலகில் ஏற்பட்டு வருபவற்றை வெளிப்படுத்தும் சிறுகவிதை👇👇 நவீன டிஜிட்டல் உலகம் டிஜிட்டல் காலம் வந்தது, சோம்பல் நம்மைத் தொற்றியது. ஆடல் பாடல் மறந்தனர், குழந்தைகள் கைபேசிக்குள் மூழ்கினர். ஆன்லைன் வியாபாரம் வந்தது, மக்கள் கடைகளுக்கு செல்ல மறந்தனர். கைபேசியில் ஆர்டர் செய்தனர், தரம் பாராமல் செலவு செய்தனர். சோம்பலினால் ஆரோக்கியம் குன்றியது, ஆன்லைனால் இணையவழி குற்றங்கள் வளர்ந்தது. (கவிதையை எழுதியவர் அனிதா) கவிதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். கவிதைகளை வாசித்துவிட்டு, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள்.

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

Image
நூலகம் ஒரு தலைசிறந்த நண்பன் என்ற கருத்தை தெளிவுற விளக்கும் சிறுகவிதை நூலகமே சிறந்த நண்பன் தனிமையை இனிமையாக்கும் இனியவன்.  நாடுவோரை நற்பண்புகளால் நிறைப்பவன்.  தரணியாளும் தலைவர்களை உருவாக்கும் திறமைசாலி.  தன்னிடம் வருபவர்களை ஆக்கிடுவான் புத்திசாலி.  அகம் மகிழ அற்புதக் கதைகள் சொல்வான்.  அகம் சிறக்க அன்பாக அறிவுரைகள் தருவான்.  சிக்கலான வாழ்வையும் சிறப்பாக்க உதவி புரிவான்.  வாழ்வின் வேதனைகளை வளமாக்க வழி தருவான்.  உதவி நாடி வருபவரை,  உள்ளத்தால் மகிழ்ந்து வரவேற்பான்.  தன்னுடைய சிறந்த புத்தகங்களால்,  உலகம் சிறக்க போராடும் போராளி!!  தோல்வியிலும் துணை நிற்பான்.  வெற்றிக்கு வழி வகுப்பான்.  நட்பின் இலக்கணம் சொல்லும் உலகின் சிறந்த நண்பன்!  நன்னெறியில் நம்மை வழிநடத்துவான்.  புத்தகங்களால் மனிதனை புனிதனாக்குவான்.  எனவே, அகத்தை அழகாக்கும்,  புத்தகசாலை புகுவோம் எந்நாளும்!!  (கவிதையை எழுதியவர் மு.சுபஶ்ரீ) தங்கள் உள்ளங்களுக்கு எங்கள் கவிதைகள் பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளை வாசிப்பதற்கு, கீழே இணை...

மாயை என்ற தலைப்பில் சின்னஞ்சிறு கவிதை

Image
மாயை பற்றிய சிந்திக்க வைக்கும் சிறுகவிதை👇👇   மாயை அழகான மாயை மனதுக்கு இனிமை தரும்.  தன்னையே மறக்க செய்து,  மகிழ்ச்சியில் மூழ்கிட செய்யும்.  தற்காலிகமான மாயை உன்னை தன்னந்தனியாக விட்டிடும்.  மாயை விலகிச் சென்றால்,  உண்மையின் கசப்புகள் முன்னே வரும்.  மாயை விலகாமல் இருக்க,  மனமோ ஏங்கி தவத்திடும்.  உண்மையை விட்டுவிட்டு மாயையை தேடி அலையும்.  (கவிதையை எழுதியவர் அனிதா) எங்கள் கவிதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பகிர தயக்கம் கொள்ளாதீர்கள். கவிதைகளை தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்... 😊

முளைவிட்ட விதையின் பார்வையில் உலகம் பற்றிய கவிதை

Image
முதன்முதலில் உலகைக் காணும் துளிர்த்த விதையின் அனுபவத்தை விளக்கும் கற்பனைக் கவிதை👇👇 வித்து நீண்ட நாள் பசி, அடங்காத தாகம். தனிமையில் நான், உறங்கிக் கொண்டிருந்தேன். மழை பொழிந்தது, தண்ணீர் துளியில் நனைந்தேன். உறக்கம் களைந்தது, உயிர் துளிர்த்தது என்னுள். உழகை காண, ஆவலுடன் விழித்து பார்த்தேன். ஊரெங்கும் பசுமை, மகிழ்ச்சியில் பறவைகள். கண்காணாக் காட்சி கண்டேன், மனமோ ஆனந்தத்தில் மூழ்கியது!! (கவிதையை எழுதியவர் அனிதா) எங்கள் கவிதைகள் தங்கள் மனதுக்கு பிடித்த வண்ணம் இருந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை எங்களுக்கு கமண்ட் செய்ய தயங்காதீர்கள் மற்றும் தங்கள் நண்பர்களுடனும் கவிதைகளை பகிர்ந்து மகிழுங்கள்...😄

அச்சம் தவிர் என்ற தலைப்பில் ஊக்கம் தரும் அற்புத கவிதை

Image
வாழ்வில் வெற்றி பெற வழிநடத்தும் சிறந்த கவிதை. சிறந்த கருத்துக்களுடன் உங்களை ஊக்கப்படுத்தும் "அச்சம் தவிர்" என்ற தலைப்புடைய எளிமையான கவிதையை வாசித்து பயன் பெறுங்கள்👇👇   கார் இருள் உன்னை சூழ்ந்தாலும், மார்க்கம் அறியாமல் நீ தவித்தாலும், அச்சத்தை மட்டும் நெருங்க விடாதே. நம்பிக்கை என்ற ஒளியை வைத்து, முயற்சியை செயலாய் செய்து, நல்ல மார்க்கத்தை நீ தேடிவிடலாம். மார்க்கத்தை ஒரு முறை கண்டுவிட்டால், இலட்சியத்தை நீயோ எளிதில் பெற்றிடலாம். அச்சத்தை தவிர்த்து, நம்பிக்கையை வளர்த்து, வாழ்க்கையில் நீயோ ஜெய்த்திடு!! (கவிதையை எழுதியவர் அனிதா) எங்கள் விடுகதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் விடுகதைகளுக்கு, கீழ் கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். பிடித்திருந்தால் பகிரவும் மற்றும் தங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிரவும்...😄

கார்த்திகை தீபத்திருநாளை மகிழ்வுடன் கொண்டாடுங்கள்

Image
நாளை கார்த்திகைத் தீப திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபத்தை பற்றிய சிறப்புக் கவிதை👇👇 வருகிற கார்த்திகை நன்னிலாளில், அனைத்து சுபமான வளங்களும் அனைவரையும் அடையட்டும், " இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள் ." சூரியனும் சந்திரனும் சோதியாய் நின்று, தன் ஒளியால் தீபங்களை ஒளிர வைத்தது. மனதில் சூழ்ந்துள்ள காரிருளை அகற்றி, மனம் மகிழ வைத்தது கார்த்திகை தீபங்கள். கார்த்திகை மாத பௌர்ணமியில் ஜொலித்த ஒளி, நாடு எங்கும் புத்துணர்சியை தந்த ஒளி, கார்த்திகை தீப ஒளி, கண்களைக் கவர்ந்த ஒளி, நம்பிக்கையை ஊட்டி மார்க்கத்தை காட்டிய ஒளி. (கவிதையை எழுதியவர் அனிதா) தங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் பரிமாறிடுங்கள். மேலும், பல சிறப்புக் கவிதைகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை அணுகவும். கவிதையைப் பற்றிய கருத்துக்களையும் கமண்ட்டாக பகிர்ந்திடுங்கள்...😄

அனைவரின் மனதையும் கவரும் "மழை" பற்றிய கவிதை

Image
மழையின் வளமையை விளக்கும் சின்னஞ்சிறு சிறப்புக் கவிதை👇👇 மழை மேளதாளங்கள் முழங்க, வானிலிருந்து விழுந்த பன்னீர்த்துளி. நீ பொழிந்தால் உயிர்த்துளி, நீ இல்லாவிடில் கண்ணீர்த்துளி. பசுமையின் கடவுள் நீ, விவசாயியின் உயிர் நீ. நீ செழித்தால் பூமி செழிக்கும், நீ கோபித்தால் அனைத்தும் அழியும். உயிர்கள் மீது கோபம் கொள்ளாதே! அனைவரையும் காத்து அருளிடு!! (கவிதையை எழுதியவர் அனிதா) கவிதைகளை பற்றிய கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயக்கம் கொள்ளாதீர்கள் மற்றும் மேலும் கவிதைகளுக்கு, கீழ்காணும் லேபிலை பயன்படுத்துங்கள். கவிதை பிடித்திருந்தால், நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄

மன அமைதியின் மார்க்கத்தை விளக்கும் குறுங்கவிதை

Image
உன்னதமான வாழ்வுக்கு வழிகாட்டும் சின்னஞ்சிறு கவிதை👇👇 பழிவாங்கும் குணம் இல்லாமல் அமைதியாக வாழ்வை வாழ்பவரை சிறப்பிக்கும் சிறுகவிதை.  அமைதியின் பாதை இரவின் மடியிலே, உறங்க வைத்திடு. அன்றைய கசப்புகளை, இருளில் தொலைத்திடு.   மனதின் காயங்களை, நச்சு படாமல் காத்திடு. காலைப் பொழுதை, இனிதே வரவேற்றிடு. நஞ்சு இல்லாத மனம்,  கதிரவன் போல் ஜொலித்திடும். மன காயங்களை ஆறவைத்து, மகிழ்ச்சியைக் கொடுத்திடும். (கவிதையை எழுதியவர் அனிதா) கவிதைகள் தங்கள்  மனங்களை கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். கவிதைகளை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄

வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கிக் கூறும் சிறுகவிதை

Image
வாழ்வின் தத்துவத்தையும் உண்மை நிலையையும் விளக்கும் சிறுகவிதையை வாசியுங்கள்👇👇   முடிவு உங்கள் கைகளில்... ஆயிரம் கோடிகள் குவித்தாலும், ஒருநாள் வீதியில்தான் விட்டுச் செல்ல வேண்டும் கோடிகள் குவித்தாலும் சரி, தெருக்கோடியில் நின்றாலும் சரி, ஒரு நாள் கைப்பிடி மண்ணாகத்தான் மாற வேண்டும். தோல்வியோ, வெற்றியோ, எது கிடைத்தாலும் சரி, வாழ்க்கையை வாழப் போராடத்தான் வேண்டும். ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும், நீ சேமித்த பாவ புண்ணியங்கள் மட்டுமே வரும் உன்னோடு (கடைசி மூச்சு வரை). புண்ணியம் தேடுவதும் பாவம் தேடுவதும், முடிவு உங்கள் கைகளில் மட்டுமே... (கவிதையை எழுதியவர் அனிதா)  நல்லதொரு முடிவை எடுத்துக்கொண்டு வாழ்வில் உயர்வைப் பெற எங்களது உளமார்ந்த வாழ்த்துக்கள்.  மேலும் கவிதைகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். கவிதைகளை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட் செய்திடுங்கள் மற்றும் பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄

நம்பிக்கை இல்லாதவரிடம் நீரூபிக்க, அழிந்து போய்விடாதீர்!

Image
நம்பிக்கை என்ற தலைப்பில் எங்கள் நயமான சிறுகவிதையை வாசியுங்கள்👇👇 நம்பிக்கை நீயோ தங்கமாக இருக்கலாம், ஆனால், உன் அருமை அறியாத மூடர், உன்னை பித்தளை என்றே எண்ணுவர். உன்னை உரசிப் பார்ப்பார், மனவலிமையை உடையச் செய்வர், குறை கூறி கொண்டே இருப்பர், சுட்டெரிக்கும் வார்த்தைகளால் பொசுக்கிவிடுவர், உன்னை உருகுலைத்து விடுவர், பொக்கிசமான உன்னை தொலைத்து விடுவர், ஆனால், உனது அருமையை உணர மாட்டர். நம்பிக்கை இல்லாதவர் கையில் சிக்கினால், தங்கமே, நீயோ தூசிக்கு சமம். (கவிதையை எழுதியவர் அனிதா) மேலும் கவிதைகளை வாசித்து மகிழ, கீழ் இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோடு, பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் கவிதைகளை பகிர்ந்திடுங்கள்...😄

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

Image
உயர்ந்து கொண்டு வருகின்ற விலைவாசியை விளக்கும் காலத்திற்கு ஏற்ற கவிதை👇👇 விலைவாசி உயர்வு ஆயிரம் வல்லுநர்கள் வந்தாலும், உன்னைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை. போக்குவரத்து தடைகள் வரலாம், ஆனால், நீ வளர தடைகள் இல்லை. பஞ்சம் வந்து பலர் அழிந்தாலும், உனக்கோ ஒருநாளும் அழிவு இல்லை. புயல்கள் அனைத்தையும் அழித்து சென்றாலும், உனக்கு மட்டும் அழிவு வரவில்லை. சாமானியனை நீயோ மிரட்டுகிறாய். அவனையும், அவன் நிம்மதியையும் கொலை செய்கிறாய். நீ ஆயிரம் கொலைகள் செய்தாலும், உன்னை தண்டிக்க எவரும் இல்லை!! (கவிதையை எழுதியவர் அனிதா) விலைவாசி உயர்வை விளக்கும் இக்கவிதை தங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம்.  மேலும் கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். கருத்துக்களை கமண்ட்டாக பகிர்வதோடு, கவிதையை தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄

மொழிகளுக்கு ஏற்பட்டு வரும் பின்னடைவு பற்றிய கவிதை

Image
  மொழிக்கலப்பு காரணமாக மொழிகளுக்கு ஏற்படும் அவல நிலையையும் பின்னடைவையும் விளக்கும் கவிதை👇👇 மொழிகளின் அழிவு மொழிகள் தெரியாமல், பேசத் தெரியாமல் தவித்தாய் அன்று, குரங்குகள், பறவைகள்  போல் கூச்சலிட்டாய் அன்று. இன்று, மொழிகள் ஆயிரம் தெரிந்தாலும் எதைக் கற்க என்று தெரியாதவன் நீ. ஆங்கிலமோ உலகை ஆட்டிவைக்கும் உலக மொழி என்கிறோம் பக்கத்து நாடுகளில் பேசும் மொழியை அண்டைநாட்டு மொழி என்கிறோம். இந்தியை நம் நாட்டில் தேசிய மொழி என்கிறோம். தாயின் கருவில் கேட்ட மொழி தாய்மொழி என்கிறோம். அண்டை மாநிலங்களில் பேசும் மொழி சகோதர, சகோதரி மொழி என்கிறோம். இத்துணை மொழிகள் தெரிந்தும், எதைப்பேச என்ற குழப்பத்தில் நீயோ, ஆங்கிலம் பாதி, தாய்மொழி பாதி, மற்ற மொழிகள் கலந்து பேசுகிறாயே நீயோ குழப்பத்தின் உச்சியிலே, மொழிகளை வதம் செய்கிறாய். (கவிதையை இயற்றியவர் அனிதா) மேலும் கவிதைகளுக்கு, கீழே உள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். கவிதையை பற்றி கமண்ட் செய்வதோடு தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄

மனிதனை ஆளும் பணம் பற்றிய சுவாரசியமான கவிதை

Image
இந்த நவீன வாழ்க்கை சூழலில், மனிதன் உருவாக்கிய பணமே மனிதனை அடிமையாக வைத்துள்ளது என்பதை விளக்கும் குறுங்கவிதை👇👇 பணம் மனங்களை   சிறை பிடிக்கும் காகிதத்தாள், உன்னைத் தேடி அலையுது மனம். நீ இல்லாமல் இயங்காது வாழ்வு, என்று பதறுகிறது மனம். நீ இழுக்கும் இழுப்புக்கோ, ஆடுகிறது மனிதக்கூட்டம். உன்னை பெற்றிட அப்பாவி மனிதர்கள், செய்கிறார்கள் ஆயிரம் குற்றங்கள். உன் மேல் இருக்கும் மோகத்தால், தன்னையும் தன் சொந்தங்களையும் மறக்கிறார்கள் பலர். நீயோ நாளைய செல்லாக்காசு, ஆனால், நீ இல்லாது இன்று மனிதர்களோ செல்லாக்காசு. (கவிதையை எழுதியவர் அனிதா) மேலும் கவிதைகளை வாசித்து மகிழ, கீழ் கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். எங்கள் கவிதைகள் பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட் செய்திடுங்கள். பிடித்திருந்தால், நண்பர்களுடனும் பகிர்ந்து மகிழுங்கள்...😊

மன வலிமையை வலியுறுத்தும் விழிப்புணர்வு கவிதை

Image
"தொட்டிலை ஆட்டும் கை; தொல்லுலகையும் ஆளும் கை" என்பதை பல பெண்கள் நீருபித்துக் கொண்டிருக்கும் நிலையில், சிலரோ, வாழ்வை வாழ மனமின்றி தன்னைத் தானே மாய்த்து வருகின்றனர். துயரங்கள் பல வருத்தினாலும், துணிவான மனதோடு அதை எதிர்த்து நின்றிடுங்கள் எங்களது எளிய கவிதையோடு👇👇 பெண்ணே, துணிந்து நில்!! பூமிக்கு உயிர் ஊட்டிய அம்மையடி, உயிர் ஜோதியை சுமக்கும் சக்தியடி, நாட்டைக் காக்கும் ஜான்சி நீதானடி, விண்ணுக்குச் சென்ற கல்பனாவும் நீதானடி, அற்ப பிரச்சனையையோ, அற்ப மனிதர்களையோ கண்டு அஞ்சாதேயடி, தோல்வியை கண்டு உயிரை மாய்க்காதடி, பெண்ணே! உன்னுள் இருக்கும் துணிச்சலை உலகிற்கு காட்டிவிடடி. வருங்கால சந்ததியை காக்கும் பொறுப்பு உள்ளதடி, உலகமே உன்னை மிரட்டினாலும், நீ எதிர்த்து நில்லடி. உயர உயர நீ பறந்து உலகத்தையே கைக்குள் பூட்டிவிடடி. (கவிதையை எழுதியவர் அனிதா) எங்கள் கவிதைகள் தங்கள் மனம் கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்வதோடு தங்கள் நண்பர்களுடனும் கவிதைகளை பகிர்ந்திடுங்கள்...😊

ஆசிரியர் பணிக்கு சிறப்பு சேர்த்தோரை பற்றிய கவிதை

Image
தற்போதைய சூழ்நிலையிலும், தன்னையே அர்ப்பணம் செய்து ஆசிரிய சமூகத்தினருக்கு பெருமை சேர்த்து வரும் ஆசான்களை பாராட்டும் சிறுகவிதை👇👇 ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் கொரோனாவால் ஊரடங்கு வந்தது, கல்வி கூடங்களுக்கோ விடுப்பு ஆனது, கல்வியின் நிலையோ கேள்விக்குறியில், ஆசிரியர்களோ கவலையிலே... அரசாங்க உத்தரவு வந்தது, நிகழ்நிலை கல்வி என்றது, மாணாக்கர் நிலையோ கேள்விக்குறியில், ஆசிரியர்களோ வேதனையிலே... ஒன்று கூடினார்கள் ஆசிரியர்கள், தங்கள் சேமிப்பை வாரி வழங்கினார்கள். மாணாக்கருக்கு அலைபேசி வழங்கி உதவினார்கள், மாணவ சமூகத்திற்கு கல்வியை கற்பித்து மகிழ்ந்தார்கள், கல்விசோதியை ஒளிரவைத்தனர்,  ஆசான்கள் . (கவிதையை எழுதியவர் அனிதா) " ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்" மேலும் கவிதைகளுக்கு, இங்கே தொடவும்... இன்றைய தினத்தில், ஆசிரியராய் அர்ப்பணிப்போடு பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை பகிர்வதில் பெருமகிழ்வு அடைகிறோம். எங்கள் கவிதைகளை பற்றிய கருத்துக்களை பகிர்வதோடு தங்கள் ஆசிரியர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😊

இறைவன் அளித்த வரத்தை இணைந்தே காத்திடுவோம்

Image
  இன்பத்தை வழங்கும் இனிய இயற்கையை இணைந்து காக்க வேண்டிய விழிப்புணர்வு கவிதை👇👇 இயற்கை இயற்கையை காப்போம் வானும் மண்ணும் பூமிக்கு சொந்தம்; பூமி நமக்கே சொந்தம். காற்றும் நீரும் நெருப்பும் இயற்கைக்கு சொந்தம்;  இயற்கை நமக்கே சொந்தம்.   கிளிகளும் குயில்களும் வானிற்கு அழகு,  செடிகளும் கொடிகளும் மண்ணிற்கு அழகு, இவற்றைக் காப்பது நமக்கு அழகு; இயற்கையின் தூய்மை உலகுக்கு அழகு!! வெண்மையான மனது, தூய்மையான காற்று, பசுமையான சுற்றம், அழகான இயற்கை நமக்கு சொர்க்கம்!! காப்போம் காப்போம்; இயற்கையை காப்போம்! இன்பம் பெறுவோம்!!! (கவிதையை இயற்றியவர் அனிதா) மேலும் கவிதைகளுக்கு, இங்கே தொடவும்... எங்களது கவிதைகள் தங்கள் மனதை கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். கவிதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்வதோடு மறக்காது கமண்ட் செய்திடுங்கள்...😊

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Let everyone celebrate this special day with our patriotic poem

Followers of Our Blog