மனிதனை ஆளும் பணம் பற்றிய சுவாரசியமான கவிதை

மனங்களை சிறை பிடிக்கும் காகிதத்தாள்,
உன்னைத் தேடி அலையுது மனம்.
நீ இல்லாமல் இயங்காது வாழ்வு,
என்று பதறுகிறது மனம்.
நீ இழுக்கும் இழுப்புக்கோ,
ஆடுகிறது மனிதக்கூட்டம்.
உன்னை பெற்றிட அப்பாவி மனிதர்கள்,
செய்கிறார்கள் ஆயிரம் குற்றங்கள்.
உன் மேல் இருக்கும் மோகத்தால்,
தன்னையும் தன் சொந்தங்களையும் மறக்கிறார்கள் பலர்.
நீயோ நாளைய செல்லாக்காசு,
ஆனால், நீ இல்லாது இன்று மனிதர்களோ செல்லாக்காசு.
(கவிதையை எழுதியவர் அனிதா)
மேலும் கவிதைகளை வாசித்து மகிழ, கீழ் கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். எங்கள் கவிதைகள் பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட் செய்திடுங்கள். பிடித்திருந்தால், நண்பர்களுடனும் பகிர்ந்து மகிழுங்கள்...😊
����
ReplyDelete