அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை
தந்தையர் தின சிறப்பு கவிதை:-
அன்பான மனதுடன் ஆதரிப்பார்.
ஆர்வமாக அக்கறையுடன் வழிநடத்துவார்.
தன்னலமற்ற தூய மனதுடன்,
தன் குழந்தையைப் பற்றியே சிந்தித்திடுவார்.
வியர்வை சிந்தி உழைத்த பணத்தை,
கணக்குப் பார்க்காமல் செலவிடுவார்.
உழைப்பை எல்லாம் உவந்தே அளிப்பார்.
அதை ஒருபோதும் சொல்லிக்காட்ட மாட்டார்.
குழந்தையின் கள்ளமற்ற புன்னகையில்,
தன் வெற்றி உள்ளது என்பார்.
தன் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக,
தளர்ச்சியின்றி வழி காட்டுவார்.
தன்னிகரற்ற தூய நேசமுடைய
பாசமான உறவு தந்தை!
இறைவனின் அதிசயப் படைப்பில்
அற்புத உறவு அப்பா!!
(கவிதையை எழுதியவர் சுபஸ்ரீ)
கவிதை பிடித்திருந்தால், அதிகம் பகிருங்கள். கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள். மேலும் பல கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள்.
😍😍😍
ReplyDeleteஅருமை அருமை 😍👍👍
ReplyDelete