மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்
மனித உடலைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை, எங்கள் அற்புதமான விடுகதைகள் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்👇👇
(1) பிறப்பு முதல் வாழ்நாள் முழுவதும் ஒரே அளவில் இருக்கும் உறுப்பு நான். என்னை திறந்து வைத்துக் கொண்டு எவராலும் தும்ம இயலாது. நான் யார்?_____
விடை: கண்.
(2) நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போதும் எனது வேலையை சரியாக செய்வேன். உடலின் மிகச்சிறிய ஆறு எலும்புகளைக் கொண்டவன். நான் யார்?_____.
விடை: காது.
(3) உடலில், நீரில் மிதக்கக் கூடிய தகுதி உடைய ஒரே உறுப்பு நான். பலூன் போன்று செயல்படுவேன். நான் யார்?______.
விடை: நுரையீரல்.
(4) நான் உலகின் மிகச்சிறந்த வடிகட்டும் பணியைச் செய்பவன். உங்கள் நினைவு மையத்திற்கும் எனக்கும் மிக முக்கிய தொடர்பு உண்டு. நான் யார்?_____.
விடை: மூக்கு.
(5) ஏறக்குறைய 45 மைல் தூர நீளம் காணப்படுவேன். மூளையின் வளர்ச்சியையும் செயல்பாட்டையும் கட்டுப்படுத்துவேன். நான் யார்?_____.
விடை: நரம்புகள்.
(6) உங்கள் உடலின் பலம்வாய்ந்த திசு நானல்ல. எலும்பின் உதவி இன்றி செயல்படும் உறுப்பாவேன். நான் யார்?_____.
விடை: நாக்கு.
(7) உடலில் பதினைந்து சதவீத எடைக்கு காரணமாய் இருப்பவன். உடலின் மிகவும் பெரிய உறுப்பு நான். நான் யார்?_____.
விடை: தோல்.
(8) என்னால் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்ய இயலாது. ஏறக்குறைய 1.5 கிலோ எடை கொண்டவன். நான் யார்?_____.
விடை: மூளை.
(9) உடலில் இரத்த ஓட்டம் இல்லாத ஒரே இடம் என்ன?_____.
விடை: கண்விழியின் வெள்ளைப்படலம்.
(10) உடலின் மிகுந்த கடினமான தசை கொண்ட உறுப்பு. பச்சிளம் குழந்தைகளின் உடலில் அதிவிரைவாக செயல்படுவேன். நான் யார்?_____.
விடை: இதயம்.
எங்கள் விடுகதைகள், தங்களுக்கு பயனளித்திருக்கும் என நம்புகிறோம். விடுகதைகளை பற்றிய தங்கள் கருத்துக்களை கமெண்ட்டாக பதிவிடுவதோடு, பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
மேலும் விடுகதைகளை வாசிக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள்.
இத்தகைய புதிர்கள் நம் உடலைப் பற்றி அறிய எனக்கு மிகவும் உதவுகின்றன.
ReplyDelete👌👌
🤔
ReplyDelete😲 zoology teacher ke ithu la theriyathunu ninaikuren 🤔😜
ReplyDeleteSemmaya irrukku ma👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
😮I Really liked this 👌👌. Here I read many different unknown facts of our body.
ReplyDelete