திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்
'உலக பொதுமறை' என சிறப்பித்து, உலக மக்கள் அனைவராலும் போற்றி புகழப்படும் நூல் திருக்குறள். வள்ளுவன் வாய்மொழியாம் திருக்குறள், ஒன்றே முக்கால் அடிகளில் உலக வாழ்வை அறத்துடன் வாழ்வதற்கான வழிகளை வாசிப்போருக்கு வழிகாட்டுகிறது. முப்பாலின் வழிநின்று வாழ்வை வாழ்பவர் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்பார் என்பதில் ஐயமில்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறள் பற்றி சில சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ள கீழுள்ள விடுகதைகளை வாசியுங்கள்👇👇 (1) திருக்குறள் நூலில் இரண்டு முறை வரும் ஒரே அதிகாரத்தின் பெயர் என்ன?_________. விடை : குறிப்பறிதல் அதிகாரம் . (பொருட்பால்- அதிகாரம் 71, இன்பத்துப்பால்- அதிகாரம் 110) (2) திருக்குறள் நூல் முழுவதிலும் பயன்படுத்தப்படாத ஒரே எண் எது? _________. விடை : எண் 9. (3) பல புலவர்களால் 'முப்பால்' என அழைக்கப்படும் திருக்குறளில் உள்ள முதல் பாடலின் முதலெழுத்தும் இறுதிப் பாடலின் இறுதி எழுத்தும் என்ன? _________. விடை : முதலெழுத்து- அ இறுதி எழுத்து- ன். 'அ' என்ற முதல் உயிரெழுத்தால் தொடங்கி, 'ன்' என்ற இறுதி மெய்யெழுத்தைக் கொண்டு முடிவது இந்நூல...