சர்வதேச அளவில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள்
அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சர்வதேச தினக் கொண்டாட்டங்களை பற்றிய சிறப்பு விடுகதைகள்👇👇
(1) நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் கொண்டாடப்படும் சர்வதேச நடன தினம் என்று கொண்டாடப்படுகிறது?______.
(2) தேநீர் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நோக்கில் வருடம்தோறும் கொண்டாடப்படும் சர்வதேச தேநீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது? _______.
(3) சர்வதேச பெண்கள் தினம் என்று கொண்டாடப்படுகின்றது? ______.
(4) வாழ்வை சிறந்த முறையில் வாழ வழிகாட்டியாக திகழும் புத்தகங்களைச் சிறப்பித்து கொண்டாடப்படும் சர்வதேச புத்தக தினம் என்று கொண்டாடப்படுகிறது? ______.
(5) உயிர் வாழ மிகவும் அவசியமானதான உணவை மையப்படுத்தி கொண்டாடப்படும் சர்வதேச உணவு தினம் என்று கொண்டாடப்படுகிறது?_______.
(6) யோகா பயிற்சி செய்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருடந்தோறும் கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம் என்று கொண்டாடப்படுகிறது?_______.
(7) சர்வதேச அளவில் நாய்கள் வளர்ப்பு தினம் என்று கொண்டாடப்படுகிறது?_______.
(8) உலகின் மிக உயர்ந்த நகையான புன்னகையை சிறப்பித்து கொண்டாடப்படும் உலக புன்னகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?______.
(9) நமது பூமியின் மீது நேரடியாக சூரிய ஒளிக்கதிர் வீச்சுக்கள் விழாமல் இருப்பதற்கு பாதுகாப்பு அரணாக இருந்து வரும் ஓசோன் மண்டலத்தின் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் என்று கொண்டாடப்படுகிறது?_______.
(10) மகிழ்ச்சியின் சிறப்பை உலகம் முழுவதும் ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சர்வதேச மகிழ்ச்சி தினம் என்று கொண்டாடப்படுகின்றது?_______.
விடைகள்:
(1) ஏப்ரல் 29.
(2) டிசம்பர் 15.
(3) மார்ச் 8.
(4) ஏப்ரல் 23.
(5) அக்டோபர் 16.
(6) ஜூன் 21.
(7) ஆகஸ்ட் 26.
(8) அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை.
(9) செப்டம்பர் 16.
(10) மார்ச் 30.
எங்கள் விடுகதைத் தொகுப்பு தங்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் விடுகதைகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். விடுகதைகள் பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள். பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்😊
சிறப்பான விடுகதைகள் 💯
ReplyDeleteWonderful questions 😃 and amezing answers 🤩🤓👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ReplyDeleteநன்று
ReplyDelete