நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை
நூலகம் ஒரு தலைசிறந்த நண்பன் என்ற கருத்தை தெளிவுற விளக்கும் சிறுகவிதை
நூலகமே சிறந்த நண்பன்
நாடுவோரை நற்பண்புகளால் நிறைப்பவன். 
தரணியாளும் தலைவர்களை உருவாக்கும் திறமைசாலி. 
தன்னிடம் வருபவர்களை ஆக்கிடுவான் புத்திசாலி. 
அகம் மகிழ அற்புதக் கதைகள் சொல்வான். 
அகம் சிறக்க அன்பாக அறிவுரைகள் தருவான். 
சிக்கலான வாழ்வையும் சிறப்பாக்க உதவி புரிவான். 
வாழ்வின் வேதனைகளை வளமாக்க வழி தருவான். 
உதவி நாடி வருபவரை, 
உள்ளத்தால் மகிழ்ந்து வரவேற்பான். 
தன்னுடைய சிறந்த புத்தகங்களால், 
உலகம் சிறக்க போராடும் போராளி!! 
தோல்வியிலும் துணை நிற்பான். 
வெற்றிக்கு வழி வகுப்பான். 
நட்பின் இலக்கணம் சொல்லும்
உலகின் சிறந்த நண்பன்! 
நன்னெறியில் நம்மை வழிநடத்துவான். 
புத்தகங்களால் மனிதனை புனிதனாக்குவான். 
எனவே, அகத்தை அழகாக்கும், 
புத்தகசாலை புகுவோம் எந்நாளும்!! 
(கவிதையை எழுதியவர் மு.சுபஶ்ரீ)
தங்கள் உள்ளங்களுக்கு எங்கள் கவிதைகள் பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளை வாசிப்பதற்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள்.
கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள் மற்றும் கவிதை பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄

புத்தக நண்பனை பற்றிய பாடல் மிகவும் அருமையாக இருந்தது 😇😇😇😇
ReplyDeleteநன்று
ReplyDelete