கன்னியாகுமரி பற்றிய வியக்க வைக்கும் விடுகதை நேரம்
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடுகதைகள்👇👇
(1) வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் 133 குறள்களை உடைய உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் சிலை கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ளது. அச்சிலையின் உயரம் எத்தனை அடி கொண்டது?________.
விடை: 133 அடி உயரம்.
(2) கல்வி கற்றோர் எண்ணிக்கை அதிகம் உடைய தமிழக மாவட்டம் எது?_______.
விடை: கன்னியாகுமரி.
(3) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரமான நாகர்கோவிலின் பெயர்க்காரணம் என்ன?______.
விடை: பழமையான நாகராஜா கோவில் இங்கு அமையப்பெற்றுள்ளது. எனவே நாகங்களின் கோவில் என்ற அடிப்படையில் நாகர்கோவில் என அழைக்கப்படுகிறது.
(4) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உணவு வகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது என்ன?______.
விடை: வாழைக்காய் சிப்ஸ்.
(5) நாகர்கோவில் எவ்வாறு அழைக்கப்படும் சிறப்பு உடையது?_______.
விடை: திருவிதாங்கூர் களஞ்சியம்.
(6) கன்னியாகுமரி மாவட்டத்தின் பெயர்காரணமாக அமைந்திருக்கும் கோவில் எது?______.
விடை: கன்னியாகுமரி தேவி கோவில்.
(7) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலோடு எத்தனை கடல்கள் கலக்கின்றன?_______.
விடை: மூன்று.
(8) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எந்த நகரத்தில் கிராம்பு மிகவும் பிரசித்தி பெற்றது?_______.
விடை: நாகர்கோவில்.
(9) பௌர்ணமி நன்னாளில் சூரிய அஸ்தமனத்தையும் சத்திர உதயத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க இயலும் இடம். இந்தியாவிலேயே இந்த அதிசயம் இங்கு மட்டுமே நிகழ்கிறது. அது என்ன இடம்?_______.
விடை: கன்னியாகுமரி கடற்கரை.
(10) இந்திய விடுதலைக்காக போராடிய எந்த தலைவருக்கு கன்னியாகுமரி கடற்கரையில் மணிமண்டபம் எழுப்பப்பட்டுள்ளது?______.
விடை: மகாத்மா காந்தி.
எங்கள் விடுகதைகள் உங்களுக்கு பிடித்துருக்கும் என நம்புகிறோம். மேலும் விடுகதைகளை வாசிக்க கீழ்காணும் லேபிளை பயன்படுத்தி கொள்ளலாம். விடுகதைகள் பிடித்திருப்பின், நண்பர்களுடன் பகிரவும் மற்றும் உங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள்...😃
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி சிறப்பை உணர்த்தும் விடுகதை சிறப்பு👍
ReplyDeleteஅறிவுபூர்வமான கேள்விகள் மற்றும் ஆக்கப்பூர்வமான பதில்களுடன் வினா-விடை மிகவும் அருமையாக இருந்தது👏👏👏👏 இந்த எழுத்துப்பணியை மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🤝🤝🤝🤝🤝🤝
ReplyDeleteஅருமையான விடுகதைகள்!!
ReplyDelete👌
Useful riddles🔥
ReplyDelete