Posts

Showing posts with the label விடுகதை நேரம்

நெல்லையின் சிறப்புகள் கூறும் சிறப்பான விடுகதைகள்

Image
நெல்லையின் சிறப்புகளை நயம்பட கூறும் சுவாரசியமான விடுகதைகள் நேரம் 👇👇 (1) நாயக்க மன்னர்களின் கட்டிடக்கலைச் சிறப்பைத் திறம்பட எடுத்துக்காட்டும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில். இக்கோவில் அமைந்திருக்கும் கிராமத்தின் முன்னாள் பெயர் திருவேங்கடபுரம் ஆகும். அது என்ன கோவில்?______. விடை: கிருஷ்ணாபுரம் வேங்கட பெருமாள் கோவில். (2) நின்றசீர் நெடுமாறனால் கட்டப்பட்ட இரட்டை கோபுரம் உடைய பிரசித்தி பெற்ற சிவன் கோயில் இது. இக்கோவில் திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலாகும். அது என்ன கோவில்?_______. விடை: நெல்லையப்பர் கோயில். (3) திருநெல்வேலியின் பிரசித்தி பெற்ற சைவ உணவு வகை எது?______. விடை: சொதி குழம்பு. (4) நெல்லையின் பெயரைக் கேட்டாலே அனைவரின் நினைவிற்கும் வரும் இனிப்பு வகை என்ன?_______. விடை: அல்வா. (5) பாபநாசம் அருவி என அழைக்கப்படும் இந்த அருவி திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அருவியில் தான் அகத்திய முனிவர் சிவனின் திருக்கல்யாண காட்சியைக் கண்டார். அந்த அருவியின் மறு பெயர் என்ன?_______. விடை: அகத்தியர் அருவி. (6) பலப்பல கல்வி நிறுவனங்கள் உடையது பாளையங்கோட்டை. தி...

தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாத் தலம் பற்றிய விடுகதைகள்

Image
தமிழகத்தில் உள்ள கட்டிடக்கலைச் சிறப்பு மற்றும் சுற்றுலாத் தளங்களைப் பற்றி விளக்கும் விடுகதை நேரம் விடைகளுடன்👇👇 1) தமிழ்நாட்டில்  இடம்பெற்றுள்ள வித்தியாசமான விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்று.  கூத்தனூரில் உள்ள முக்தீஸ்வரர் ஆலயத்தில் அமையப்பெற்றுள்ள சிறப்புப் பெற்ற  விநாயகர் கோவில் இது. உலகிலேயே மனித முகம் கொண்ட விநாயகர் கோவில் இது மட்டும் தான். இக்கோவிலின் பெயர் என்ன? ______. விடை: ஆதி விநாயகர் கோவில். (2) தமிழ்நாட்டில் உள்ள பண்டைக் கால சோழர்களின் நேர்த்தியான கட்டிடக்கலையை எடுத்துக்காட்டும் சிறப்பு வாய்ந்த கோவில். பல சிறப்புகள் மற்றும் மர்மங்களுக்கு பெயர் பெற்ற இக்கோவிலை அதிகார பதவியில் இருப்போர் நெருங்க அஞ்சுவர். அது என்ன கோவில்?_______. விடை: தஞ்சை பெரிய கோவில். (3) விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த கோவில் இது. இரண்டைத் தலையுடைய கற்சிற்பம் (காளை மற்றும் யானையின் தலை கொண்ட கற்சிற்பம்) இக்கோவிலின் தனித்துவமாக உள்ளது. இக்கோவில் வேலூரில் அமைந்துள்ளது. அது என்ன?______. விடை: ஜலகண்டேசுவரர் கோவில். (4) சோழ மன்னர்களது தலைசிறந்த கட்டிடக்கலையை விளக்கும் அரியலூரில் இட...

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

Image
விலங்குகளைப் பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள் தரும் விடுகதை நேரம் விடைகளுடன்👇👇 (1) இது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் விலங்காகும். பின்னோக்கி நடக்க இயலாத விலங்குகளுள் இதுவும் ஒன்று. அது என்ன விலங்கு?______. விடை: கங்காரு. (2) இது நிலத்தில் வாழும் விலங்களுள் பெரிய விலங்காகும். மிகச்சிறந்த ஞாபகசக்தி கொண்ட விலங்குகளுள் இதுவும் ஒன்று. அது என்ன விலங்கு?______. விடை: யானை. (3) நன்றிக்கு சான்றாக கூறப்படும் விலங்கு நாய். மனித கைரேகையைப் போல, நாயின் எந்த உடலுருப்பு தனித்துவமானது?_______. விடை: மூக்கின் ரேகை. (4) தனது வாழ்வின் ஏறத்தாழ 70 சதவீதத்தை தூக்கத்தில் கழிக்கும் விலங்கு இது. இந்த விலங்கு, மனிதர்களை விட ஐந்து மடங்கு கூர்மையாக கேட்கும் திறன் கொண்டது. அது என்ன விலங்கு?______. விடை: பூனை. (5) இவை, உலகிலுள்ள விலங்குகளுள் உயரமான விலங்கினமாக கருதப்படுவன. இவை ஒலி எழுப்பவதை மனிதர்கள் இதுவரை கேட்டதில்லை. எனவே, ஆராய்ச்சியாளர்கள் இவற்றின் ஒலி மனிதர்களின் காதுகளால் கேட்க இயலாத வண்ணம் மிகவும் மெதுவாக இருப்பதாய் கருதுகின்றனர். அது என்ன விலங்கு?_______. விடை: ஒட்டகச்சிவிங்கி. (6) மூன்று அடுக்கு கண் ...

தூத்துக்குடியின் சிறப்புகள் விளக்கும் சிறந்த விடுகதைகள்

Image
தூத்துக்குடியின் சிறப்புக்களை விளக்கும் விடுகதை நேரம்👇👇 (1) தமிழக அரசால், நாட்டு விடுதலைக்காகப் போராடிய கட்டபொம்மனை கௌரவிக்கும் வகையில், அவர் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்ட இடத்திலே நிறுவப்பட்டுள்ளது இந்த நினைவுக் கோட்டை. தூத்துக்குடியில் உள்ள இச்சின்னம், எந்த கிராமத்தில் அமைந்துள்ளது? _____. விடை: பாஞ்சாலங்குறிச்சி.  (2) பல்வேறு நாடுகளையும் ஈர்க்கும் உலகப் புகழ்வாய்ந்த சுற்றுலாத்தலம். மேலும், உலகிலேயே மதியமும் மறையுறை நடைபெறும் சிறப்புடைய கிறித்தவ ஆலயம். அது என்ன? _____. விடை: பனிமய மாதா திருத்தலம்.  (3) தூத்துக்குடிக்கு புகழ் சேர்க்கும் தனித்துவமான இனிப்புவகை என்ன? ______. விடை: மக்ரூன்.  (4) தூத்துக்குடியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் தான் மஸ்கோத் அல்வா முதன்மையாக செய்யப்பட்டது. அந்த கிராமத்தின் பெயர் என்ன? _____. விடை: முதலூர்.  (5) தூத்துக்குடியின் அருகே அமைந்துள்ளது இந்த வனவிலங்கு சரணாலயம். தமிழ்நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய வனவிலங்கு சரணாலயம் இது. அது என்ன? _____. விடை: களக்காடு வனவிலங்கு சரணாலயம்.  (6) தூத்துக்குடியில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த மு...

வளர்ப்பு பிராணிகள் மற்றும் பறவைகள் பற்றிய புதிர்கள்

விடுகதைகளை வாசித்து செல்லப் பிராணிகள் மற்றும் பறவைகளை பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்களை அறிந்து கொள்ளுங்கள் 👇👇 (1) மனிதர்களை விட பத்தாயிரம் மடங்கு சிறப்பான மோப்ப சக்தி கொண்ட இந்த வளர்ப்புப் பிராணியால் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தை மட்டுமே எளிதில் கண்டறிந்து கொள்ள இயலும். அது என்ன?_____. விடை: நாய். (2) மனிதர்களை விட ஐந்து மடங்கு கூர்மையான கேட்கும் திறன் கொண்ட இந்த செல்லப் பிராணியால் இனிப்பு சுவையைச் சுவைக்க முடியாது. அது என்ன?_____. விடை: பூனை. (3) ஒரு நாளில் சுமார் எட்டு மணி நேரத்தைச் சாப்பிடுவதில் செலவழிக்கும் இந்த வளர்ப்பு பிராணியால் ஆறு மைல்கள் தூரம் வரை சத்தத்தைக் கேட்க முடியும். அது என்ன?_____. விடை: பசு. (4) தனது உதடுகளால் உணவைப் பற்றிக்கொள்ளும் பண்பு கொண்ட இந்த வளர்ப்புப் பிராணியின் கண்ணின் மணி (பியூப்பிள்) செவ்வக வடிவில் இருக்கும். அது என்ன?_____. விடை: ஆடு. (5) மிகச்சிறந்த ஞாபகச் சக்தி கொண்ட இந்த வளர்ப்பு பிராணியானது, தன்னுடைய தோற்ற அமைப்பு கொண்ட குதிரையை விட பலம் பொருந்தியதாய் இருக்கும். அது என்ன?_____. விடை: கழுதை. (6) மனிதர்களின் முகங்களை நினைவில் வைத்துக் கொள்ளும் வளர்ப்...

பறவைகளைப் பற்றிய சுவாரசியமான விடுகதை நேரம்

தெரிந்த பறவைகளைப் பற்றிய தெரியாத சுவாரசிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்👇👇 (1) உலகில் அனைத்து இடத்திலும் பரவலாக காணப்படும் பறவை. மிகவும் புத்திசாலியான மற்றும் அதிகமான ஞாபகசக்தி உடைய பறவை. அது என்ன?____. விடை: காகம். (2) கூட்டிலிருந்து ஆயிரத்து முந்நூறு மைல்கள் கடந்து சென்றாலும், கூட்டிற்குத் திரும்பும் வழியை நினைவில் வைத்திருக்கும் பறவை. அமைதியின் அம்சமாக திகழும் பறவை. அது என்ன?_____. விடை: புறா. (3) உணவை காலில் பிடித்துச் சாப்பிடும் பழக்கம் கொண்ட பறவை. கண்ணுக்கு வண்ணம் சேர்க்கும் இப்பறவைக்கு, குரல்கள் கற்பதில் விருப்பம் அதிகம். அது என்ன?_____. விடை: கிளி. (4) நீரையும் பாலையும் பக்குவமாய் பிரிக்கும் அசாத்திய திறமையுடைய பறவை. பல இடங்களில், அழகிய நடைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படும் பறவை. அது என்ன?_____. விடை: அன்னம். (5) உலகிலேயே மிகப்பெரிய பறவையினம் இதுதான். ஆனால், பறக்கும் திறனற்ற பறவை. அது என்ன?_____. விடை: தீக்கோழி (ஆஸ்ட்ரிச்) (6) பின்நோக்கி பறக்கும் தன்மை கொண்ட உலகின் மிகச்சிறிய பறவை. அது என்ன?_____. விடை: ஓசனிச்சிட்டு (ஹம்மிங் பறவை). (7) வாழ்நாள் முழுவதும் தலைவலி பெறாத பறவை. அது ...

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

மனித உடலைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை, எங்கள் அற்புதமான விடுகதைகள் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்👇👇 (1) பிறப்பு முதல் வாழ்நாள் முழுவதும் ஒரே அளவில் இருக்கும் உறுப்பு நான். என்னை திறந்து வைத்துக் கொண்டு எவராலும் தும்ம இயலாது. நான் யார்?_____ விடை: கண். (2) நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போதும் எனது வேலையை சரியாக செய்வேன். உடலின் மிகச்சிறிய ஆறு எலும்புகளைக் கொண்டவன். நான் யார்?_____. விடை: காது. (3) உடலில், நீரில் மிதக்கக் கூடிய தகுதி உடைய ஒரே உறுப்பு நான். பலூன் போன்று செயல்படுவேன். நான் யார்?______. விடை: நுரையீரல். (4) நான் உலகின் மிகச்சிறந்த வடிகட்டும் பணியைச் செய்பவன். உங்கள் நினைவு மையத்திற்கும் எனக்கும் மிக முக்கிய தொடர்பு உண்டு. நான் யார்?_____. விடை: மூக்கு. (5) ஏறக்குறைய 45 மைல் தூர நீளம் காணப்படுவேன். மூளையின் வளர்ச்சியையும்  செயல்பாட்டையும் கட்டுப்படுத்துவேன். நான் யார்?_____. விடை: நரம்புகள். (6) உங்கள் உடலின் பலம்வாய்ந்த திசு நானல்ல. எலும்பின் உதவி இன்றி செயல்படும் உறுப்பாவேன். நான் யார்?_____. விடை: நாக்கு. (7) உடலில் பதினைந்து சதவீத எடைக்கு கா...

மூளைக்கு வேலை தரும் நீங்கள் விரும்பும் விடுகதைகள்

விடுகதைகளை விறுவிறுப்பான பதில்களுடன் வாசித்து மகிழுங்கள்👇👇 (1) கண் இமைக்காமல் பார்ப்பேன். கண் மூடாமல் தூங்குவேன். நான் யார்?______. விடை: மீன். (2) இரண்டு எழுத்து கொண்டவன். போருக்கு செல்லாமலே, கவசத்தை அணிந்திருப்பான். அவன் யார்?_____. விடை: ஆமை. (3) கையில் பிடிக்க முடியாதவன். கண்ணுக்குத் தெரியாதவன். தொலைத்தால் மீண்டும் பெற இயலாதவன். அவன் யார்?_____. விடை: காலம். (4) அனைவரும் விரும்பி தேடும் மதி நான். நான் யார்?_____. விடை: நிம்மதி. (5) விலைமதிப்பற்ற இந்த நகையை அணிந்தால், உடலுக்கு நல்லது. அது என்ன?_____. விடை: புன்னகை. (6) வார்த்தைகளை கோர்த்து உருவாக்கும் விதை. மக்கள் மனதில் மாற்றம் ஏற்படுத்தவல்ல விதை. அது என்ன?_____. விடை: கவிதை. (7) உள்ளத்தை விளக்கும் வேறு சொல். "உள்ளே" என்றும் பொருள் தருவேன். நான் யார்?_____. விடை: அகம். (8) உங்கள் அகத்தை நல்வழிப்படுத்தும் தகுதி கொண்ட உயிரற்றவன். அவன் யார்?_____.  விடை: புத்தகம். (9) இரவில் உறங்கும் பழக்கம் அற்றவன். இரவில், சிறந்த பார்வை திறன் கொண்டவன். இவனது ஒலியை அலறல் என்பர். இவன் யார்?_____. விடை: ஆந்தை. (10) பல இதயங்கள் உண்டு. ஆனால்,...

மனம் கவரும் விடைகளோடு அற்புதமான விடுகதைகள்

  நூறுக்கும் அதிகமான எங்களது அனைத்து விடுகதைகளையும் விடைகளோடு வாசித்து மகிழ, கீழே கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். மனம் கவர்ந்திடும் விடுகதைகள் விடைகளுடன்👇👇 (1) பாறையில் ஒருமுறை வருவேன். பாப்பாவில் இருமுறை வருவேன். ஆனால், பள்ளியில் ஒருமுறையும் வரமாட்டேன். நான் யார்?_____. விடை: எழுத்து "பா." (2) தொட்டால் சுடுவதை சுட்டிடும் ஓரெழுத்து என்ன?_____. விடை: தீ. (3) அரசனையும் பசுவையும் குறிக்கும் ஓரெழுத்து என்ன?_____. விடை: கோ. (4) என்னிடம் முட்கள் உண்டு. ஆனால், அதை வைத்து நான் எவரையும் குத்த மாட்டேன். நான் யார்?_____. விடை: கடிகாரம். (5) பயன்படுத்துவதற்கு, முதலில் அதை உடைத்தாக வேண்டும். அது என்ன?_____. விடை: முட்டை. (6) என்னுடைய முதலெழுத்து வீதியில் உண்டு, ஆனால், விதியில் இல்லை. என்னுடைய இரண்டாம் எழுத்து சுத்தத்தில் உண்டு, ஆனால், பித்தத்தில் இல்லை. இரு எழுத்துக்கள் கொண்ட நான், ஒரு கட்டளைச் சொல் ஆவேன். நான் யார்?_____. விடை: வீசு. (7) நின்று கொண்டே தூங்கும் திறன் கொண்டவன், காலணிகளையும் கழட்டாமல் உறங்கும் பழக்கம் கொண்டவன். அவன் யார்?_____. விடை: குதிரை. (8) உங்கள் வாழ்வுக்...

அனைவருக்கும் பிடித்த எளிய விடுகதைகள் பதிலுடன்

  மன அழுத்தத்தை குறைக்கும் வேடிக்கையான விடுகதைகளை பதில்களுடன் வாசித்து மகிழுங்கள்👇👇 (1) வைரம் போல் பளிச்சிடுபவை. வரிசையாய் அமைந்திருப்பவை. ஆனால், அடிபட்டால்   தன்னைத்தானே குணப்படுத்தும் தகுதி அற்றவை. அது என்ன?_____. விடை: பல். (2) புத்தகம் உருவாக்க உதவுபவன் நான்; ஆனால், மனிதனல்ல. மனிதன் வாழ உதவி புரிபவன் நான்; ஆனால், கடவுள் அல்ல. நான் யார்?_____. விடை: மரம். (3) கயிற்றைச் சுற்றி கீழே எறிந்தால் கவலையின்றி வட்டம் அடிப்பான். அவன் யார்?_____. விடை: பம்பரம். (4) மழையைக் கண்டு, ஆனந்தக் கூத்தாடும். அனைவரையும் கவர்ந்திழுக்கும்அழகிய  நீண்ட தோகை கொண்ட பறவை. அது என்ன?______. விடை: மயில். (5) கிழமையை குறிக்கும் சொல். அதே நேரத்தில், அழகிய நிலவையும் குறிக்கும் சொல். அது என்ன?______. விடை: திங்கள். (6) அழிவையும் தர வல்லவன். ஆக்கத்தையும் தர வல்லவன். ஆனால், நரம்பு இல்லாதவன். அவன் யார்?_____. விடை: நாக்கு. (7) உடலோடு ஒட்டிய தனது  வீட்டை எங்கு சென்றாலும் இழுத்து நகர்கிறான். அவன் யார்?_____. விடை: நத்தை. (8) மாதத்தை குறிக்கும் ஒரு எழுத்து; தைப்பவரை கட்டளையிடவும் பயன்படும். அ...

அனைவரையும் கவரும் விடுகதை நேரம் விடைகளுடன்

  அனைவரையும் கவிர்ந்திடும் அற்புதமான விடுகதைகளை அருமையான விடைகளுடன் வாசித்து மகிழுங்கள்👇👇 (1) அறிவையும் அழகையும் விளக்க அவளை பயன்படுத்துவர். அவள் யார்?_____. விடை: நிலவு ( மதி) (2) கறுப்பு நிறம் கொண்டவன். கூவி அழைத்தால் தன் உறவுக்காரர்களை அழைத்து வந்திடுவான். அவன் யார்?_____. விடை: காகம். (3) என் பெயரைச் சொல்லி அழைத்தால் கூட நான் அந்த இடத்தில் இருந்து மறைந்து விடுவேன். நான் யார்?_____. விடை: அமைதி. (4) என்னை யாரிடம் பகிர்ந்தாலும் நான் நிச்சயம் இறந்து விடுவேன். நான் யார்?______. விடை: இரகசியம். (5) என்னிடம் இருக்கும் நாடுகளில் மனிதர்கள் இருக்கமாட்டர். மேலும், என்னிடம் இருக்கும் கடலிலும் பெருங்கடலிலும் நீர் இருக்காது. நான் யார்?_____. விடை: வரைபடம் (மேப்). (6) மனம் இல்லாதவள் அழுதுகொண்டே ஒளி தருவாள். தன்னையே அர்ப்பணித்திடுவாள்; ஆனால், தியாகியும் அல்ல. அவள் யார்?______. விடை: மெழுகுவர்த்தி. (7) பல லட்சம் அடுக்குகளை கொண்டிருந்தாலும் மாளிகையின் அளவோ மிகவும் சிறிதாக தான் இருக்கும். அது என்ன?_____. விடை: தேன்கூடு. (8) சமையலுக்கு உதவிடும் அவனை அளவறிந்து பயன்படுத்தினால் அனைவருக்கும் ஆரோக்க...

உங்கள் உள்ளத்திற்கு உற்சாகம் தரும் விடுகதை நேரம்

  உங்கள் அனைவரது மனம் கவர்ந்திடும் விடுகதை நேரம் உற்சாகமூட்டும் பதில்களுடன்👇👇 (1) எவர் படுத்தாலும் அந்த பாயை எடுத்துச்  சுருட்ட முடியாது. அது என்ன?_____. விடை: தரை. (2) வெளியே சென்றால் பயன்படுத்தும் என்னை வீட்டுக்குள்ளே அனுமதிக்க மாட்டீர். நான் யார்?_____. விடை: செருப்பு. (3) தன்னையே அர்ப்பணம் செய்து சுற்றுச்சூழலை ஒளி மயமாக்குவாள். அவள் யார்?_____. விடை: மெழுகுவர்த்தி. (4) குடை போன்று காட்சி தருவேன். ஆனால், குடை அல்ல. மழை வந்தால் வரும் நான் வெயிலிலே உயிர் விடுவேன். நான் யார்?_____. விடை: காளான். (5) சுத்தமாக இருக்கும் போது கருப்பாக இருக்கும் நான் அழுக்கானால் வெள்ளையாய் இருப்பேன். நான் யார்?_____. விடை: கரும்பலகை. (6) நான்கு கால்கள் உடையவன். ஆனால், நடக்க முடியாதவன். நான் யார்?_____. விடை: நாற்காலி. (7) பற்கள் பல இருந்தும் யாரையும் கடிக்க மாட்டான். அவன் யார்?_____. விடை: சீப்பு. (8) எனக்கு விரல்கள் உண்டு. ஆனால், ஒருபொருளையும் என்னால் பிடிக்க முடியாது. நான் யார்?_____. விடை: கையுறை. (9) கை வைக்காமல் உடைக்க முடிவது எது?_____. விடை: அமைதி. (10) என்னை உங்களால் கேட்க முடியும். ஆனால...

அனைவரும் விரும்பிடும் விடுகதைகள் விடைகளுடன்

அருமையான விடுகதைகள் அற்புதமான விடைகளுடன்👇👇 (1) மங்களத்தின் அடையாளம். மண்ணிற்கு அடியில் முளைத்திடும். அது என்ன?_____. விடை: மஞ்சள். (2) கடிவாளம் தரையில்  இருக்கும், ஆனால், வானத்தில் உயர உயர பறப்பேன். நான் யார்?_____. விடை: பட்டம். (3) படபட என பேசுவோரை வர்ணிக்க பயன்படுத்தும் எனக்கு உச்சியில் குடுமி இருக்கும். நான் யார்?_____. விடை: பட்டாசு. (4) நான் நியாயமாக எடை போடும் உயிரற்றவன். நான் யார்?_____. விடை: தராசு. (5) தூங்கும் போது வரும் நான் கண் விழித்தவுடன் ஓடி விடுவேன். நான் யார்?_____. விடை: கனவு. (6) வெளிச்சத்தில் எப்போதும் உடன் வரும் நான் இருட்டில் மறைந்து விடுவேன். நான் யார்?_____. விடை: நிழல். (7) தலைப்பாகை அணிந்தவன் உரசினால் எரிந்து விடுவான். அவன் யார்?_____. விடை: தீக்குச்சி. (8) அழகிய முத்துக்கள் உடைய அரைசாண் ராணி. அவள் யார்?_____. விடை: வெண்டைக்காய். (9) சலசல என சத்தமிடும்  வாய் இல்லாதவன். அவன் யார்?_____. விடை: கடல். (10) அழகான நடனத்துக்கு சொந்தக்காரன்; ஆபத்தான பாம்பையும் ஓட வைப்பான். அவன் யார்?_____. விடை: மயில். மேலும் விடுகதைகளுக்கு, விடுகதை நேரம் என்ற லேபிலை பயன்ப...

சிறப்பான விடுகதைகள் விறுவிறுப்பான விடைகளுடன்

  சிந்தைக்கு வேலை தரும் சின்னஞ்சிறு விடுகதைகள் விறுவிறுப்பாக விடைகளுடன்👇👇 (1) மூன்று கண்கள் இருக்கும். ஆனால் எதையும் பார்க்க முடியாது. அவன் யார்?_____. விடை: தேங்காய். (2) பற்கள் நிறைய உண்டு. ஆனால் உண்ண முடியாது. அது என்ன?_____. விடை: சீப்பு. (3) நீ சிரித்தால் சிரிப்பேன். நான் விழுந்தால் விரைவில் உடைவேன். நான் யார்?_____. விடை: கண்ணாடி. (4) நிறத்தில் பெயர் இருக்கும். குணத்தில் சுவை இருக்கும். நான் யார்?_____. விடை: ஆரஞ்சு. (5) இருக்கும் போது என் மதிப்பை அறியாதவர் கடந்த பின் தேடிக்கொண்டு இருப்பர். நான் யார்?_____. விடை: நேரம். (6) உயர்ந்து கொண்டே செல்லும் என்னை எவராலும் குறைக்க முடியாது. நான் யார்?_____. விடை: வயது. (7) ஒற்றைக் காது உடைய காவல்காரிக்கு காது கேட்காது. அவள் யார்?_____. விடை: பூட்டு. (8) ஜோடியாக இருக்கும் நாங்கள் பிரிந்தால் பயன்படுத்துபவர்க்கு பலன் இருக்காது. நாங்கள் யார்? _____. விடை: செருப்பு.  (9) கண்ணாடிக் கூண்டுக்குள் இருக்கும் நாங்கள் கடமை தவறாதவர்கள். நாங்கள் யார்?_____. விடை: கடிகார முட்கள். (10) கொடுப்பதிலும் வள்ளல்; கெடுப்பதிலும் வள்ளல். அவன் யார்?_____...

மூளைக்கு புதுமை தரும் விடுகதைகள் பதில்களுடன்

மூளைக்கு புத்துணர்வு அளிக்கும் விடுகதை நேரம் விடைகளுடன்👇👇 விடுகதைகள் விடைகளுடன் (1) நான் குருடனுக்கு வழிகாட்டும் கண் இல்லாதவன். நான் யார்?_____. விடை: கைத்தடி. (2) என்னைத் திறந்தால் மூட இயலாது. நான் யார்?_____. விடை: தேங்காய். (3) ஒளியில் உடன்வருவான். ஆனால், இருளில் மறைந்திடுவான். அவன் யார்?_____. விடை: நிழல். (4) கழுத்து இருக்கும். ஆனால் எனக்கு தலையும் இல்லை உடலும் இல்லை. நான் யார்?_____. விடை: பானை. (5) நான் காற்றில் பறக்கும் காற்று நிறைந்தவன். நான் யார்?_____. விடை: பலூன். (6) வானில் உயர்ந்து உயர்ந்து பறப்பேன். என்னை பறக்கவிடுவோரது உதவியோடு, சிறகுகளின்றி பறப்பேன். நான் யார்?_____. விடை: பட்டம். (7) காலிலும் குத்திடுவேன். காவலும் காத்திடுவேன். நான் யார்?_____. விடை: முள். (8) வீட்டின் வெளியே சென்றால் விரிவேன். ஆனால், உள்ளே சென்றால் சுருங்கிடுவேன். நான் யார்?_____. விடை: குடை. (9) என்னை உப்பை பயன்படுத்துவது போல் பயன்படுத்தினால் உயர்ந்திடலாம் வாழ்வில். நான் யார்?_____. விடை: கோபம். (10) நீரிலே ஓடித்திரிவான். வெளியிலே விரைவில் மடிவான். அவன் யார்?_____. விடை: மீன். மேலும் இதுபோன்ற விடு...

மூளைக்கு வேலை தரும் விடுகதை நேரம் பதில்களுடன்

அனைவரையும் கவரும் சுவாரசியமான விடுகதைகள் விடைகளுடன் இதோ👇👇 விடுகதை நேரம் விடைகளுடன் (1) முதலில் நெட்டையன் முடிவில் குட்டையனாவான். அவன் யார்?_____. விடை: மெழுகுவர்த்தி. (2) வெள்ளத்தில் இருமுறையும் பவளத்தில் ஒருமுறையும் வருவேன். ஆனால் இனிப்பில் வரமாட்டேன். நான் யார்?_____. விடை: எழுத்து "ள". (3) உலகம் முழுவதும் சுற்றும் நான் ஓரத்தில் தான் எப்போதும் இருப்பேன். நான் யார்?_____. விடை: தபால்தலை. (4) நான் பலப்பல கதைகள் கொண்ட கட்டிடம். நான் யார்?_____. விடை: புத்தகச்சாலை. (5) ஆயிரம் பேர் சேர்ந்து வந்தாலும் சத்தம் கேட்காது. நாங்கள் சென்ற பின்னும் வந்த சுவடு தெரியாது. நாங்கள் யார்?_____.  விடை: எறும்புகள். (6) காது இருக்கும் எங்கள் வீட்டு காவல்காரிக்கு காது கேட்காது. அவள் யார்?_____. விடை: பூட்டு. (7) உன்னை என்னுள் காட்டும் நான் எளிதில் உடைவேன். நான் யார்?_____. விடை: கண்ணாடி. (8) உரசினால் எரிந்துவிடும் கோபக்காரன்  தலையில் அழகாய் தொப்பி அணிந்திருப்பான். அவன் யார்?_____. விடை: தீக்குச்சி. (9) என்னிடம் முட்கள் உண்டு. ஆனால் நான் குத்த மாட்டேன். நான் யார்?_____. விடை: கடிகாரம். (10) நாம் ...

அனைவரையும் கவர்ந்திடும் அருமையான விடுகதைகள்

அனைவரையும் கவர்ந்திடும் விடுகதைகள் விடைகளுடன் 👇👇 (1) குருடர்க்கு வழிகாட்டிடும் கண் இல்லாதவன். அவன் யார்?_____. விடை: கைத்தடி. (2) கம்பி வழியே வீட்டுக்குள் வந்திடுவான். ஆனால், காண முடியாது. அவன் யார்?______. விடை: மின்சாரம். (3) இணை பிரிந்திடமாட்டோம், நண்பர்கள் அல்ல. ஒன்றுசேர மாட்டோம், பகைவர்கள் அல்ல. நாங்கள் யார்?_____. விடை: இரயில் தண்டவாளம். (4) ஒரே ஒரு காது உடைய ஒல்லியான மனிதன். அவன் யார்?______. விடை: ஊசி. (5) கண்ணை மறைப்பவன் கண்ணுக்குத் தெரியமாட்டான். அவன் யார்?_____. விடை: கண் இமைகள். (6) தண்ணீரிலே கிடப்பேன். எனினும், தலை குளிக்க மாட்டேன். நான் யார்?_____. விடை: தாமரை. (7) சூடு பட்டு சிவந்திருப்பான். வீடு கட்ட உதவிடுவான். அவன் யார்?_____. விடை: செங்கல். (8) ஒளியிலே உனக்குத் துணை வருவேன். ஆனால், இருளைக் கண்டால் ஓடி ஒழிந்திடுவேன். நான் யார்?_____. விடை: நிழல். (9) நீண்ட உடம்பு உடையவன் நெடுந்தொலைவு பயணம் செய்திடுவான். அவன் யார்?_____. விடை: இரயில். (10) ஓடத் தெரியாதவனுக்கு ஆடத் தெரியும். அவன் யார்?_____. விடை: பம்பரம். மேலும் இதுபோன்ற விடுகதைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லேபிலை ப...

சிந்திக்க வைத்திடும் விடுகதை நேரம் விடைகளுடன்

Image
சிந்திக்க வைக்கும் விடுகதைகள் விடைகளுடன் : (1) ஓடுவான், மூடுவான், ஆனால் ஒற்றைக்காலில் நிற்பான். அவன் யார்?🤔🤔 விடை: கதவு. (2) உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு, பூ உண்டு, நான் யார்?🤔🤔 விடை: நாணயம். (3)அழகிய பெண்ணுக்கு ஒரு அதிசயமான வியாதி. பாதி நாள் வளர்வாள். பாதி நாள் குறைவாள். அவள் யார்?🤔🤔 விடை: நிலா. (4) கையும் காலும் இல்லை. ஓடிக்கொண்டே இருப்பான்.  அவன் யார்?🤔🤔 விடை: நேரம். (5) கையை வெட்டுவார். கழுத்தை வெட்டுவார். ஆனால் நல்லவர். அவர் யார்?🤔🤔 விடை: தையல்காரர். (6) இவன் வலை விரித்து வைப்பான். ஆனால் வலையை மீன்பிடிக்க பயன்படுத்த மாட்டான். அவன் யார்?🤔🤔 விடை: சிலந்தி. (7) இரவில் வருகை புரிவாள். பகலில் சொல்லாமல் கொள்ளாமல் மறைந்து விடுவாள்.அவள் யார்?🤔🤔 விடை: நிலவு. (8) பஞ்சினை விட மென்மையானது. எனினும், உலகின் மிகப்பெரிய பலசாலிகளாலும் இதனை பிடித்து வைத்திருக்க முடியாது. அது என்ன?🤔🤔 விடை: உயிர்மூச்சு, காற்று. (9) கண்ணை மூடிக்கொண்டு காணும் வகைவகையான படம். அது என்ன?🤔🤔 விடை: கனவு. (10) மருத்துவக் குணம் கொண்ட பூ. மங்கையர் தலையில் சூடாத பூ. அது என்ன பூ?🤔🤔 விடை: வாழைப்பூ. மேலும் ...

மூளைக்கு வேலை தரும் விடுகதைகள் விடைகளுடன்

எளிய விடுகதைகள் விடைகளுடன் (1) ஆடச் சொல்லி சட்டை போடுவான். ஆடும் முன்னே அவிழ்த்து விடுவான். அவன் யார்? ________. விடை: பம்பரம்.  (2) கண்கள் இல்லாதவன் கண்ணீர் வடிக்கிறான்.அவன் யார்? ________. விடை: மெழுகுவர்த்தி.  (3) என்னைப் பார்த்தால் உன்னைக் காட்டுவேன். நான் யார்? _________. விடை: கண்ணாடி.  (4) விதை இல்லாமல் முளைக்கும். வேர் இல்லாமல் காய்க்கும். அது என்ன? __________. விடை: உப்பு.  (5) கால் இல்லாமல் தாவுவான். வாய் இல்லாமல் கத்துவான். அவன் யார்? ________. விடை: கடல். (6) உயிர் இல்லாத நீதிபதி ஒழுங்காக நியாயம் சொல்கிறார். அவன் யார்? _______. விடை: தராசு.  (7) ஓட்டைக் காதுக்காரி, வீட்டுக்குச் காவல்காரி. அவள் யார்?________. விடை: பூட்டு.  (8) கடல் நீரால் வளர்வான். மழை நீரால் மடிவான். அவன் யார்? _______. விடை: உப்பு.  (9) லட்சம் முறை மூடித்திறப்பினும் ஓசை வராத கதவுகள். அது என்ன?_________. விடை: கண் இமைகள்.  (10) மழைக்காலத்தில் குடை பிடிப்பான், மனிதனல்ல. அவன் யார்? _______. விடை: காளான்.  (11) மாடிகளற்ற வீட்டில்  எல்லாப் பொருட்களுக்கும் பச்சை ...

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Let everyone celebrate this special day with our patriotic poem

Followers of Our Blog