சிந்திக்க வைத்திடும் விடுகதை நேரம் விடைகளுடன்
சிந்திக்க வைக்கும் விடுகதைகள் விடைகளுடன் :
(1) ஓடுவான், மூடுவான், ஆனால் ஒற்றைக்காலில் நிற்பான். அவன் யார்?🤔🤔
விடை: கதவு.
(2) உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு, பூ உண்டு, நான் யார்?🤔🤔
விடை: நாணயம்.
(3)அழகிய பெண்ணுக்கு ஒரு அதிசயமான வியாதி. பாதி நாள் வளர்வாள். பாதி நாள் குறைவாள். அவள் யார்?🤔🤔
விடை: நிலா.
(4) கையும் காலும் இல்லை. ஓடிக்கொண்டே இருப்பான். அவன் யார்?🤔🤔
விடை: நேரம்.
(5) கையை வெட்டுவார். கழுத்தை வெட்டுவார். ஆனால் நல்லவர். அவர் யார்?🤔🤔
விடை: தையல்காரர்.
(6) இவன் வலை விரித்து வைப்பான். ஆனால் வலையை மீன்பிடிக்க பயன்படுத்த மாட்டான். அவன் யார்?🤔🤔
விடை: சிலந்தி.
(7) இரவில் வருகை புரிவாள். பகலில் சொல்லாமல் கொள்ளாமல் மறைந்து விடுவாள்.அவள் யார்?🤔🤔
விடை: நிலவு.
(8) பஞ்சினை விட மென்மையானது. எனினும், உலகின் மிகப்பெரிய பலசாலிகளாலும் இதனை பிடித்து வைத்திருக்க முடியாது. அது என்ன?🤔🤔
விடை: உயிர்மூச்சு, காற்று.
(9) கண்ணை மூடிக்கொண்டு காணும் வகைவகையான படம். அது என்ன?🤔🤔
விடை: கனவு.
(10) மருத்துவக் குணம் கொண்ட பூ. மங்கையர் தலையில் சூடாத பூ. அது என்ன பூ?🤔🤔
விடை: வாழைப்பூ.
மேலும் இதுபோன்ற விடுகதைகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள்.
விடுகதைகளை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட் செய்வதோடு, தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
Comments
Post a Comment
Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.