அனைவருக்கும் பிடித்த எளிய விடுகதைகள் பதிலுடன்
மன அழுத்தத்தை குறைக்கும் வேடிக்கையான விடுகதைகளை பதில்களுடன் வாசித்து மகிழுங்கள்👇👇
(1) வைரம் போல் பளிச்சிடுபவை. வரிசையாய் அமைந்திருப்பவை. ஆனால், அடிபட்டால் தன்னைத்தானே குணப்படுத்தும் தகுதி அற்றவை. அது என்ன?_____.
விடை: பல்.
(2) புத்தகம் உருவாக்க உதவுபவன் நான்; ஆனால், மனிதனல்ல. மனிதன் வாழ உதவி புரிபவன் நான்; ஆனால், கடவுள் அல்ல. நான் யார்?_____.
விடை: மரம்.
(3) கயிற்றைச் சுற்றி கீழே எறிந்தால் கவலையின்றி வட்டம் அடிப்பான். அவன் யார்?_____.
விடை: பம்பரம்.
(4) மழையைக் கண்டு, ஆனந்தக் கூத்தாடும். அனைவரையும் கவர்ந்திழுக்கும்அழகிய நீண்ட தோகை கொண்ட பறவை. அது என்ன?______.
விடை: மயில்.
(5) கிழமையை குறிக்கும் சொல். அதே நேரத்தில், அழகிய நிலவையும் குறிக்கும் சொல். அது என்ன?______.
விடை: திங்கள்.
(6) அழிவையும் தர வல்லவன். ஆக்கத்தையும் தர வல்லவன். ஆனால், நரம்பு இல்லாதவன். அவன் யார்?_____.
விடை: நாக்கு.
(7) உடலோடு ஒட்டிய தனது வீட்டை எங்கு சென்றாலும் இழுத்து நகர்கிறான். அவன் யார்?_____.
விடை: நத்தை.
(8) மாதத்தை குறிக்கும் ஒரு எழுத்து; தைப்பவரை கட்டளையிடவும் பயன்படும். அது என்ன?_____.
விடை: தை.
(9) கிழமையை குறிக்கும் சொல்; மேலும், காலையில் ஒளிதரும் கதிரவனையும் குறிக்கும். அது என்ன?_____.
விடை: ஞாயிறு.
(10) உடை, ஆபரணங்கள் மற்றும் குழு போன்றவற்றை குறிக்கும் ஒரே சொல். அது என்ன?_____.
விடை: அணி.
மேலும் விடுகதைகளை வாசிக்க, கீழே இருக்கும் "விடுகதை நேரம்" என்ற லேபிலை பயன்படுத்துங்கள்.
எங்களது விடுகதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். தங்கள் கருத்துக்களை கமண்ட் செய்வதோடு, எங்கள் விடுகதைகளை தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
Super
ReplyDelete