அனைவரையும் கவரும் விடுகதை நேரம் விடைகளுடன்
அனைவரையும் கவிர்ந்திடும் அற்புதமான விடுகதைகளை அருமையான விடைகளுடன் வாசித்து மகிழுங்கள்👇👇
(1) அறிவையும் அழகையும் விளக்க அவளை பயன்படுத்துவர். அவள் யார்?_____.
விடை: நிலவு ( மதி)
(2) கறுப்பு நிறம் கொண்டவன். கூவி அழைத்தால் தன் உறவுக்காரர்களை அழைத்து வந்திடுவான். அவன் யார்?_____.
விடை: காகம்.
(3) என் பெயரைச் சொல்லி அழைத்தால் கூட நான் அந்த இடத்தில் இருந்து மறைந்து விடுவேன். நான் யார்?_____.
விடை: அமைதி.
(4) என்னை யாரிடம் பகிர்ந்தாலும் நான் நிச்சயம் இறந்து விடுவேன். நான் யார்?______.
விடை: இரகசியம்.
(5) என்னிடம் இருக்கும் நாடுகளில் மனிதர்கள் இருக்கமாட்டர். மேலும், என்னிடம் இருக்கும் கடலிலும் பெருங்கடலிலும் நீர் இருக்காது. நான் யார்?_____.
விடை: வரைபடம் (மேப்).
(6) மனம் இல்லாதவள் அழுதுகொண்டே ஒளி தருவாள். தன்னையே அர்ப்பணித்திடுவாள்; ஆனால், தியாகியும் அல்ல. அவள் யார்?______.
விடை: மெழுகுவர்த்தி.
(7) பல லட்சம் அடுக்குகளை கொண்டிருந்தாலும் மாளிகையின் அளவோ மிகவும் சிறிதாக தான் இருக்கும். அது என்ன?_____.
விடை: தேன்கூடு.
(8) சமையலுக்கு உதவிடும் அவனை அளவறிந்து பயன்படுத்தினால் அனைவருக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். அவன் யார்?_____.
விடை: உப்பு.
(9) நான்கு கால்கள் உடையவன்; நாற்காலி அல்ல. நன்றிக்கு உவமையாய் சொல்லப்படுபவன். அவன் யார்?_____.
விடை: நாய்.
(10) கண்ணுக்குத் தெரியாத மாய தேவதை தினமும் தாவிக்கொண்டே இருப்பாள் பலப்பல இடங்களை நோக்கி. அவள் யார்?_____.
விடை: மனித மனம்.
மேலும் பல விடுகதைகளுக்கு, "விடுகதை நேரம்" என்ற லேபிலை பயன்படுத்துங்கள்
உங்கள் மனதைக் கவர்ந்த சிறந்த விடுகதையை கமண்ட்டாக பதிவிடுங்கள். மேலும் எங்களது விடுகதைகளை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து மகிழுங்கள்...😊
Comments
Post a Comment
Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.