மூளைக்கு வேலை தரும் விடுகதைகள் விடைகளுடன்
எளிய விடுகதைகள் விடைகளுடன்
(1) ஆடச் சொல்லி சட்டை போடுவான். ஆடும் முன்னே அவிழ்த்து விடுவான். அவன் யார்? ________.
விடை: பம்பரம்.
(2) கண்கள் இல்லாதவன் கண்ணீர் வடிக்கிறான்.அவன் யார்? ________.
விடை: மெழுகுவர்த்தி.
(3) என்னைப் பார்த்தால் உன்னைக் காட்டுவேன். நான் யார்? _________.
விடை: கண்ணாடி.
(4) விதை இல்லாமல் முளைக்கும். வேர் இல்லாமல் காய்க்கும். அது என்ன? __________.
விடை: உப்பு.
(5) கால் இல்லாமல் தாவுவான். வாய் இல்லாமல் கத்துவான். அவன் யார்? ________.
விடை: கடல்.
(6) உயிர் இல்லாத நீதிபதி ஒழுங்காக நியாயம் சொல்கிறார். அவன் யார்? _______.
விடை: தராசு.
(7) ஓட்டைக் காதுக்காரி, வீட்டுக்குச் காவல்காரி. அவள் யார்?________.
விடை: பூட்டு.
(8) கடல் நீரால் வளர்வான். மழை நீரால் மடிவான். அவன் யார்? _______.
விடை: உப்பு.
(9) லட்சம் முறை மூடித்திறப்பினும் ஓசை வராத கதவுகள். அது என்ன?_________.
விடை: கண் இமைகள்.
(10) மழைக்காலத்தில் குடை பிடிப்பான், மனிதனல்ல. அவன் யார்? _______.
விடை: காளான்.
(11) மாடிகளற்ற வீட்டில் எல்லாப் பொருட்களுக்கும் பச்சை நிற பூச்சு பூசப்பட்டிருப்பின் அதன் படிகள் எந்த நிறத்தில் இருக்கும்? _________.
விடை: மாடி இல்லாததால் படிகள் இருக்காது.
(12) எவராலும் விற்க முடியாத கல். கண்ணுக்குத் தெரியாத கல். அது என்ன?_______.
விடை: விக்கல்.
மேலும், விடுகதைகளை விடைகளோடு வாசிக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். விடுகதைகள் பற்றி கமண்ட் செய்வதோடு, பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
Comments
Post a Comment
Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.