அனைவரையும் கவர்ந்திடும் அருமையான விடுகதைகள்
அனைவரையும் கவர்ந்திடும் விடுகதைகள் விடைகளுடன்👇👇
(1) குருடர்க்கு வழிகாட்டிடும் கண் இல்லாதவன். அவன் யார்?_____.
விடை: கைத்தடி.
(2) கம்பி வழியே வீட்டுக்குள் வந்திடுவான். ஆனால், காண முடியாது. அவன் யார்?______.
விடை: மின்சாரம்.
(3) இணை பிரிந்திடமாட்டோம், நண்பர்கள் அல்ல. ஒன்றுசேர மாட்டோம், பகைவர்கள் அல்ல. நாங்கள் யார்?_____.
விடை: இரயில் தண்டவாளம்.
(4) ஒரே ஒரு காது உடைய ஒல்லியான மனிதன். அவன் யார்?______.
விடை: ஊசி.
(5) கண்ணை மறைப்பவன் கண்ணுக்குத் தெரியமாட்டான். அவன் யார்?_____.
விடை: கண் இமைகள்.
(6) தண்ணீரிலே கிடப்பேன். எனினும், தலை குளிக்க மாட்டேன். நான் யார்?_____.
விடை: தாமரை.
(7) சூடு பட்டு சிவந்திருப்பான். வீடு கட்ட உதவிடுவான். அவன் யார்?_____.
விடை: செங்கல்.
(8) ஒளியிலே உனக்குத் துணை வருவேன். ஆனால், இருளைக் கண்டால் ஓடி ஒழிந்திடுவேன். நான் யார்?_____.
விடை: நிழல்.
(9) நீண்ட உடம்பு உடையவன் நெடுந்தொலைவு பயணம் செய்திடுவான். அவன் யார்?_____.
விடை: இரயில்.
(10) ஓடத் தெரியாதவனுக்கு ஆடத் தெரியும். அவன் யார்?_____.
விடை: பம்பரம்.
மேலும் இதுபோன்ற விடுகதைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள்.
விடுகதைகள் தங்களது மனங்களை கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள். விடுகதைகள் பற்றிய தங்கள் கருத்துக்களையும் கமண்ட்டாக பதிவு செய்திடுங்கள்...😄
Comments
Post a Comment
Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.