நெல்லையின் சிறப்புகள் கூறும் சிறப்பான விடுகதைகள்
நெல்லையின் சிறப்புகளை நயம்பட கூறும் சுவாரசியமான விடுகதைகள் நேரம் 👇👇
(1) நாயக்க மன்னர்களின் கட்டிடக்கலைச் சிறப்பைத் திறம்பட எடுத்துக்காட்டும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில். இக்கோவில் அமைந்திருக்கும் கிராமத்தின் முன்னாள் பெயர் திருவேங்கடபுரம் ஆகும். அது என்ன கோவில்?______.
விடை: கிருஷ்ணாபுரம் வேங்கட பெருமாள் கோவில்.
(2) நின்றசீர் நெடுமாறனால் கட்டப்பட்ட இரட்டை கோபுரம் உடைய பிரசித்தி பெற்ற சிவன் கோயில் இது. இக்கோவில் திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலாகும். அது என்ன கோவில்?_______.
விடை: நெல்லையப்பர் கோயில்.
(3) திருநெல்வேலியின் பிரசித்தி பெற்ற சைவ உணவு வகை எது?______.
விடை: சொதி குழம்பு.
(4) நெல்லையின் பெயரைக் கேட்டாலே அனைவரின் நினைவிற்கும் வரும் இனிப்பு வகை என்ன?_______.
விடை: அல்வா.
(5) பாபநாசம் அருவி என அழைக்கப்படும் இந்த அருவி திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அருவியில் தான் அகத்திய முனிவர் சிவனின் திருக்கல்யாண காட்சியைக் கண்டார். அந்த அருவியின் மறு பெயர் என்ன?_______.
விடை: அகத்தியர் அருவி.
(6) பலப்பல கல்வி நிறுவனங்கள் உடையது பாளையங்கோட்டை. திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பாளையம்கோட்டை தாலுகா எவ்வாறு அழைக்கப்படுகிறது?_______.
விடை: தென்னிந்தியாவின் ஆஸ்போர்ட்டு பல்கலைக்கழகம்.
(7) சுமார் ஆயிரம் சதுர கிலோமீட்டர் தூரம் உடைய இக்காப்பகத்தில் பல வனவிலங்கு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. புலிகளின் வாழ்விடமாக இருக்கும் இக்காப்பகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இக்காப்பகத்தின் பெயர் என்ன?______.
விடை: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்.
(8) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தின் பெயர் என்ன?________.
விடை: கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்.
(9) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையம் தமிழகத்தின் தலைசிறந்த அருங்காட்சியகங்களுள் ஒன்றாகும். அந்த மையம் எந்த ஆண்டு திறக்கப்பட்டது?_________.
விடை: 1987.
(10) நெல்லைக்கு சென்று மணிமுத்தாறு ஆற்றின் அழகை கண்டு மனமகிழலாம். இந்த ஆறானது அகத்தியர் மலையின் வழியாக வழிந்தோடுகிறது. அகத்திய மலையின் மறுபெயர் என்ன?_______.
விடை: பொதிகை மலை.
எங்கள் விடுகதைகள் வாயிலாக பல சுவாரசியமான தகவல்கள் தெரிய வந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் பல விடுகதைகளுக்கு, கீழ்காணும் லேபிலை பயன்படுத்தி வாசியுங்கள். பிடித்திருந்தால், நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் உங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவு செய்ய தயக்கம் கொள்ளாதீர்கள்...😄
Wow super 😀👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ReplyDeleteபொதிகை மலயை தன்னுள் கொண்ட நெல்லை மாவட்ட சிறப்பு விடுகதைகள் அருமை👌👌👌
ReplyDeleteபல சுவாரசியமான தகவல்கள் தெரிய வந்துள்ளது!!
ReplyDelete