பறவைகளைப் பற்றிய சுவாரசியமான விடுகதை நேரம்
தெரிந்த பறவைகளைப் பற்றிய தெரியாத சுவாரசிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்👇👇
(1) உலகில் அனைத்து இடத்திலும் பரவலாக காணப்படும் பறவை. மிகவும் புத்திசாலியான மற்றும் அதிகமான ஞாபகசக்தி உடைய பறவை. அது என்ன?____.
விடை: காகம்.
(2) கூட்டிலிருந்து ஆயிரத்து முந்நூறு மைல்கள் கடந்து சென்றாலும், கூட்டிற்குத் திரும்பும் வழியை நினைவில் வைத்திருக்கும் பறவை. அமைதியின் அம்சமாக திகழும் பறவை. அது என்ன?_____.
விடை: புறா.
(3) உணவை காலில் பிடித்துச் சாப்பிடும் பழக்கம் கொண்ட பறவை. கண்ணுக்கு வண்ணம் சேர்க்கும் இப்பறவைக்கு, குரல்கள் கற்பதில் விருப்பம் அதிகம். அது என்ன?_____.
விடை: கிளி.
(4) நீரையும் பாலையும் பக்குவமாய் பிரிக்கும் அசாத்திய திறமையுடைய பறவை. பல இடங்களில், அழகிய நடைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படும் பறவை. அது என்ன?_____.
விடை: அன்னம்.
(5) உலகிலேயே மிகப்பெரிய பறவையினம் இதுதான். ஆனால், பறக்கும் திறனற்ற பறவை. அது என்ன?_____.
விடை: தீக்கோழி (ஆஸ்ட்ரிச்)
(6) பின்நோக்கி பறக்கும் தன்மை கொண்ட உலகின் மிகச்சிறிய பறவை. அது என்ன?_____.
விடை: ஓசனிச்சிட்டு (ஹம்மிங் பறவை).
(7) வாழ்நாள் முழுவதும் தலைவலி பெறாத பறவை. அது என்ன?_____.
விடை: மரங்கொத்தி.
(8) சிக்கலில் இருக்கும் போது வேகமாக நீந்தும் திறன் கொண்ட சிறிய பறவை. அது என்ன?______.
விடை: குருவி.
(9) உப்பு நீர் குடிக்கும் திறன் கொண்ட பறவை. பறக்கும் திறனற்ற நீர்ப்பறவை. அது என்ன?_____.
விடை: பென்குயின்.
(10) தனது பெரிய கண்களை உருட்டிப் பார்க்க இயலாத இப்பறவையால், 360 டிகிரிக்கு தலையை திருப்பி பார்க்க இயலும். அது என்ன?_____.
விடை: ஆந்தை.
மேலும் விடுகதைகளுக்கு, கீழே இருக்கும் லேபிலை பயன்படுத்துங்கள். விடுகதைகள் பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் கமண்ட்டாக தங்கள் கருத்தை பதிவு செய்திடுங்கள்...😄
Nice 💯💯💯
ReplyDeleteஅறிவார்ந்த விடுகதைக்கு எனது வாழ்த்துக்கள்!
ReplyDelete