மூளைக்கு புதுமை தரும் விடுகதைகள் பதில்களுடன்
மூளைக்கு புத்துணர்வு அளிக்கும் விடுகதை நேரம் விடைகளுடன்👇👇
விடுகதைகள் விடைகளுடன்
(1) நான் குருடனுக்கு வழிகாட்டும் கண் இல்லாதவன். நான் யார்?_____.
விடை: கைத்தடி.
(2) என்னைத் திறந்தால் மூட இயலாது. நான் யார்?_____.
விடை: தேங்காய்.
(3) ஒளியில் உடன்வருவான். ஆனால், இருளில் மறைந்திடுவான். அவன் யார்?_____.
விடை: நிழல்.
(4) கழுத்து இருக்கும். ஆனால் எனக்கு தலையும் இல்லை உடலும் இல்லை. நான் யார்?_____.
விடை: பானை.
(5) நான் காற்றில் பறக்கும் காற்று நிறைந்தவன். நான் யார்?_____.
விடை: பலூன்.
(6) வானில் உயர்ந்து உயர்ந்து பறப்பேன். என்னை பறக்கவிடுவோரது உதவியோடு, சிறகுகளின்றி பறப்பேன். நான் யார்?_____.
விடை: பட்டம்.
(7) காலிலும் குத்திடுவேன். காவலும் காத்திடுவேன். நான் யார்?_____.
விடை: முள்.
(8) வீட்டின் வெளியே சென்றால் விரிவேன். ஆனால், உள்ளே சென்றால் சுருங்கிடுவேன். நான் யார்?_____.
விடை: குடை.
(9) என்னை உப்பை பயன்படுத்துவது போல் பயன்படுத்தினால் உயர்ந்திடலாம் வாழ்வில். நான் யார்?_____.
விடை: கோபம்.
(10) நீரிலே ஓடித்திரிவான். வெளியிலே விரைவில் மடிவான். அவன் யார்?_____.
விடை: மீன்.
மேலும் இதுபோன்ற விடுகதைகளுக்கு, விடுகதை நேரம் என்ற லேபிலை பயன்படுத்துங்கள்.
எங்கள் விடுகதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். விடுகதை பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள் மற்றும் விடுகதையை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட் செய்திடுங்கள்...😊
Comments
Post a Comment
Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.