மூளைக்கு வேலை தரும் விடுகதை நேரம் பதில்களுடன்
அனைவரையும் கவரும் சுவாரசியமான விடுகதைகள் விடைகளுடன் இதோ👇👇
விடுகதை நேரம் விடைகளுடன்
(1) முதலில் நெட்டையன் முடிவில் குட்டையனாவான். அவன் யார்?_____.
விடை: மெழுகுவர்த்தி.
(2) வெள்ளத்தில் இருமுறையும் பவளத்தில் ஒருமுறையும் வருவேன். ஆனால் இனிப்பில் வரமாட்டேன். நான் யார்?_____.
விடை: எழுத்து "ள".
(3) உலகம் முழுவதும் சுற்றும் நான் ஓரத்தில் தான் எப்போதும் இருப்பேன். நான் யார்?_____.
விடை: தபால்தலை.
(4) நான் பலப்பல கதைகள் கொண்ட கட்டிடம். நான் யார்?_____.
விடை: புத்தகச்சாலை.
(5) ஆயிரம் பேர் சேர்ந்து வந்தாலும் சத்தம் கேட்காது. நாங்கள் சென்ற பின்னும் வந்த சுவடு தெரியாது. நாங்கள் யார்?_____.
விடை: எறும்புகள்.
(6) காது இருக்கும் எங்கள் வீட்டு காவல்காரிக்கு காது கேட்காது. அவள் யார்?_____.
விடை: பூட்டு.
(7) உன்னை என்னுள் காட்டும் நான் எளிதில் உடைவேன். நான் யார்?_____.
விடை: கண்ணாடி.
(8) உரசினால் எரிந்துவிடும் கோபக்காரன் தலையில் அழகாய் தொப்பி அணிந்திருப்பான். அவன் யார்?_____.
விடை: தீக்குச்சி.
(9) என்னிடம் முட்கள் உண்டு. ஆனால் நான் குத்த மாட்டேன். நான் யார்?_____.
விடை: கடிகாரம்.
(10) நாம் நின்றாலும் துடிப்போடு செயல்படுவான். ஆனால் அவன் ஓய்ந்தால் நம்மால் செயல்படவே முடியாது. அவன் யார்?_____.
விடை: இதயம்.
மேலும் இது போன்ற விடுகதைகளை வாசிக்க, கீழே உள்ள லேபிலை பயன்படுத்துங்கள்.
எங்கள் விடுகதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். விடுகதை பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள் மற்றும் விடுகதையை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட் செய்திடுங்கள்...😊
Comments
Post a Comment
Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.