தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாத் தலம் பற்றிய விடுகதைகள்
தமிழகத்தில் உள்ள கட்டிடக்கலைச் சிறப்பு மற்றும் சுற்றுலாத் தளங்களைப் பற்றி விளக்கும் விடுகதை நேரம் விடைகளுடன்👇👇
1) தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ள வித்தியாசமான விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்று. கூத்தனூரில் உள்ள முக்தீஸ்வரர் ஆலயத்தில் அமையப்பெற்றுள்ள சிறப்புப் பெற்ற விநாயகர் கோவில் இது. உலகிலேயே மனித முகம் கொண்ட விநாயகர் கோவில் இது மட்டும் தான். இக்கோவிலின் பெயர் என்ன? ______.
விடை: ஆதி விநாயகர் கோவில்.
(2) தமிழ்நாட்டில் உள்ள பண்டைக் கால சோழர்களின் நேர்த்தியான கட்டிடக்கலையை எடுத்துக்காட்டும் சிறப்பு வாய்ந்த கோவில். பல சிறப்புகள் மற்றும் மர்மங்களுக்கு பெயர் பெற்ற இக்கோவிலை அதிகார பதவியில் இருப்போர் நெருங்க அஞ்சுவர். அது என்ன கோவில்?_______.
விடை: தஞ்சை பெரிய கோவில்.
(3) விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த கோவில் இது. இரண்டைத் தலையுடைய கற்சிற்பம் (காளை மற்றும் யானையின் தலை கொண்ட கற்சிற்பம்) இக்கோவிலின் தனித்துவமாக உள்ளது. இக்கோவில் வேலூரில் அமைந்துள்ளது. அது என்ன?______.
விடை: ஜலகண்டேசுவரர் கோவில்.
(4) சோழ மன்னர்களது தலைசிறந்த கட்டிடக்கலையை விளக்கும் அரியலூரில் இடம்பெற்றுள்ளது இக்கோவில். மேலும், இக்கோவில் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் ஒன்றாகவும் உள்ளது. அது என்ன?_______.
விடை: கங்கை கொண்ட சோழபுரம்.
(5) நாயக்க மன்னர்களின் கட்டிடக்கலையை சிறப்பாக எடுத்துக்காட்டும் பழமையான கோவில். இது மதுரைக்கு பெருமை சேர்க்கும் பிரம்மாண்டமான கோவிலாகும். அது என்ன?________.
விடை: மீனாட்சி அம்மன் கோவில்.
(6) நூற்றெட்டு திவ்ய தேசங்களுள் இக்கோவிலும் ஒன்று. அழகிய தூண்களுடன் கூடிய சிறப்பான கட்டிடக்கலை உடைய இக்கோவில், காஞ்சிபுரத்தில் உள்ள பெரிய கோவிலாகும். அது என்ன?_______.
விடை: அத்திவரதர் கோவில்.
(7) மிகவும் பழமை வாய்ந்த குடைவரைக் கோவில்களுள் இக்கோவில் ஒன்றாகும். சிவகங்கையில் அமைந்துள்ள இக்கோவிலானது பாண்டியர்களின் தனித்துவமான கட்டிடக்கலையை இன்றளவும் எடுத்துக்காட்டுகிறது. அது என்ன?________.
விடை: பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில்.
(8) சிற்பிகளின் கனவு என சிறப்பிக்கப்படும் கோவில் இது. அழியாத சோழர் பெருங்கோவில்கள் பட்டியலில் இக்கோவிலும் ஒன்று. தேரின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட மண்டபம் இக்கோவிலில் மிகவும் சிறப்பாகும். அது என்ன கோவில்?_______.
விடை: ஐராவதேசுவரர் கோவில்.
(9) திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பாண்டிய நாட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். இசை தரும் தூண்கள் கொண்ட மணிமண்டபம் இக்கோவிலில் உள்ள தனித்துவ சிறப்பாகும். அது என்ன?_______.
விடை: நெல்லையப்பர் கோவில்.
(10) பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவிலாக நம்பம்படும் கோவில் இது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையப்பெற்ற இக்கோவில் திரு ஊரகம் என அழைக்கப்படும் சிறப்பு உடையது ஆகும். அது என்ன?_______.
விடை: உலகளந்த பெருமாள் கோயில்.
எங்கள் விடுகதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் விடுகதைகளுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள லேபிலை அணுகவும். பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடன் பகிரவும் மற்றும் தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிடவும்...😄
🤩 super 👌👌👌
ReplyDeleteமிகவும் சிறப்பு வாய்ந்த தகவல்கள்🤚🤚
ReplyDeleteதமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் விடுகதைகள் 👍
ReplyDeleteOsum
ReplyDeleteஅடடா!! என்ன அற்புதமான விடுகதைகள்!!
ReplyDelete