மூளைக்கு வேலை தரும் நீங்கள் விரும்பும் விடுகதைகள்

விடுகதைகளை விறுவிறுப்பான பதில்களுடன் வாசித்து மகிழுங்கள்👇👇


(1) கண் இமைக்காமல் பார்ப்பேன். கண் மூடாமல் தூங்குவேன். நான் யார்?______.

விடை: மீன்.


(2) இரண்டு எழுத்து கொண்டவன். போருக்கு செல்லாமலே, கவசத்தை அணிந்திருப்பான். அவன் யார்?_____.

விடை: ஆமை.


(3) கையில் பிடிக்க முடியாதவன். கண்ணுக்குத் தெரியாதவன். தொலைத்தால் மீண்டும் பெற இயலாதவன். அவன் யார்?_____.

விடை: காலம்.


(4) அனைவரும் விரும்பி தேடும் மதி நான். நான் யார்?_____.

விடை: நிம்மதி.


(5) விலைமதிப்பற்ற இந்த நகையை அணிந்தால், உடலுக்கு நல்லது. அது என்ன?_____.

விடை: புன்னகை.


(6) வார்த்தைகளை கோர்த்து உருவாக்கும் விதை. மக்கள் மனதில் மாற்றம் ஏற்படுத்தவல்ல விதை. அது என்ன?_____.

விடை: கவிதை.


(7) உள்ளத்தை விளக்கும் வேறு சொல். "உள்ளே" என்றும் பொருள் தருவேன். நான் யார்?_____.

விடை: அகம்.


(8) உங்கள் அகத்தை நல்வழிப்படுத்தும் தகுதி கொண்ட உயிரற்றவன். அவன் யார்?_____. 

விடை: புத்தகம்.


(9) இரவில் உறங்கும் பழக்கம் அற்றவன். இரவில், சிறந்த பார்வை திறன் கொண்டவன். இவனது ஒலியை அலறல் என்பர். இவன் யார்?_____.

விடை: ஆந்தை.


(10) பல இதயங்கள் உண்டு. ஆனால், ஒரு இதயத்திலும் துடிப்பு இல்லை. அது என்ன?_____.

விடை: சீட்டுக்கட்டு.


எங்கள் விடுகதைகள் தங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் விடுகதைகளுக்கு, விடுகதை நேரம் என்ற லேபிலை பயன்படுத்துங்கள். பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄

Comments

Post a Comment

Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Let everyone celebrate this special day with our patriotic poem

Followers of Our Blog