சிறப்பான விடுகதைகள் விறுவிறுப்பான விடைகளுடன்
சிந்தைக்கு வேலை தரும் சின்னஞ்சிறு விடுகதைகள் விறுவிறுப்பாக விடைகளுடன்👇👇
(1) மூன்று கண்கள் இருக்கும். ஆனால் எதையும் பார்க்க முடியாது. அவன் யார்?_____.
விடை: தேங்காய்.
(2) பற்கள் நிறைய உண்டு. ஆனால் உண்ண முடியாது. அது என்ன?_____.
விடை: சீப்பு.
(3) நீ சிரித்தால் சிரிப்பேன். நான் விழுந்தால் விரைவில் உடைவேன். நான் யார்?_____.
விடை: கண்ணாடி.
(4) நிறத்தில் பெயர் இருக்கும். குணத்தில் சுவை இருக்கும். நான் யார்?_____.
விடை: ஆரஞ்சு.
(5) இருக்கும் போது என் மதிப்பை அறியாதவர் கடந்த பின் தேடிக்கொண்டு இருப்பர். நான் யார்?_____.
விடை: நேரம்.
(6) உயர்ந்து கொண்டே செல்லும் என்னை எவராலும் குறைக்க முடியாது. நான் யார்?_____.
விடை: வயது.
(7) ஒற்றைக் காது உடைய காவல்காரிக்கு காது கேட்காது. அவள் யார்?_____.
விடை: பூட்டு.
(8) ஜோடியாக இருக்கும் நாங்கள் பிரிந்தால் பயன்படுத்துபவர்க்கு பலன் இருக்காது. நாங்கள் யார்? _____.
விடை: செருப்பு.
(9) கண்ணாடிக் கூண்டுக்குள் இருக்கும் நாங்கள் கடமை தவறாதவர்கள். நாங்கள் யார்?_____.
விடை: கடிகார முட்கள்.
(10) கொடுப்பதிலும் வள்ளல்; கெடுப்பதிலும் வள்ளல். அவன் யார்?_____.
விடை: மழை.
மேலும் விடுகதைகளை வாசிக்க, "மூளைக்கு வேளை" என்ற லேபிலை பயன்படுத்துங்கள்.
விடுகதைகளும் அவற்றின் விறுவிறுப்பான விடைகளும் உங்கள் மனம் கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். விடுகதைகள் பற்றிய தங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்வதோடு, பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😊
Nice
ReplyDeleteWonderful riddles.
ReplyDelete