உங்கள் உள்ளத்திற்கு உற்சாகம் தரும் விடுகதை நேரம்
உங்கள் அனைவரது மனம் கவர்ந்திடும் விடுகதை நேரம் உற்சாகமூட்டும் பதில்களுடன்👇👇
(1) எவர் படுத்தாலும் அந்த பாயை எடுத்துச் சுருட்ட முடியாது. அது என்ன?_____.
விடை: தரை.
(2) வெளியே சென்றால் பயன்படுத்தும் என்னை வீட்டுக்குள்ளே அனுமதிக்க மாட்டீர். நான் யார்?_____.
விடை: செருப்பு.
(3) தன்னையே அர்ப்பணம் செய்து சுற்றுச்சூழலை ஒளி மயமாக்குவாள். அவள் யார்?_____.
விடை: மெழுகுவர்த்தி.
(4) குடை போன்று காட்சி தருவேன். ஆனால், குடை அல்ல. மழை வந்தால் வரும் நான் வெயிலிலே உயிர் விடுவேன். நான் யார்?_____.
விடை: காளான்.
(5) சுத்தமாக இருக்கும் போது கருப்பாக இருக்கும் நான் அழுக்கானால் வெள்ளையாய் இருப்பேன். நான் யார்?_____.
விடை: கரும்பலகை.
(6) நான்கு கால்கள் உடையவன். ஆனால், நடக்க முடியாதவன். நான் யார்?_____.
விடை: நாற்காலி.
(7) பற்கள் பல இருந்தும் யாரையும் கடிக்க மாட்டான். அவன் யார்?_____.
விடை: சீப்பு.
(8) எனக்கு விரல்கள் உண்டு. ஆனால், ஒருபொருளையும் என்னால் பிடிக்க முடியாது. நான் யார்?_____.
விடை: கையுறை.
(9) கை வைக்காமல் உடைக்க முடிவது எது?_____.
விடை: அமைதி.
(10) என்னை உங்களால் கேட்க முடியும். ஆனால், பார்க்கவோ தொடவோ முடியாது. நான் யார்?______.
விடை: சத்தம்.
மேலும் விடுகதைகளுக்கு, "விடுகதை நேரம்" என்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள்.
எங்களது விடுகதைகள் உங்கள் மனம் கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். விடுகதைகள் பற்றிய கருத்துக்களை கமண்ட் செய்வதோடு தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😊
Semma
ReplyDelete