அனைவரும் விரும்பிடும் விடுகதைகள் விடைகளுடன்
அருமையான விடுகதைகள் அற்புதமான விடைகளுடன்👇👇
விடை: மஞ்சள்.
(2) கடிவாளம் தரையில் இருக்கும், ஆனால், வானத்தில் உயர உயர பறப்பேன். நான் யார்?_____.
விடை: பட்டம்.
(3) படபட என பேசுவோரை வர்ணிக்க பயன்படுத்தும் எனக்கு உச்சியில் குடுமி இருக்கும். நான் யார்?_____.
விடை: பட்டாசு.
(4) நான் நியாயமாக எடை போடும் உயிரற்றவன். நான் யார்?_____.
விடை: தராசு.
(5) தூங்கும் போது வரும் நான் கண் விழித்தவுடன் ஓடி விடுவேன். நான் யார்?_____.
விடை: கனவு.
(6) வெளிச்சத்தில் எப்போதும் உடன் வரும் நான் இருட்டில் மறைந்து விடுவேன். நான் யார்?_____.
விடை: நிழல்.
(7) தலைப்பாகை அணிந்தவன் உரசினால் எரிந்து விடுவான். அவன் யார்?_____.
விடை: தீக்குச்சி.
(8) அழகிய முத்துக்கள் உடைய அரைசாண் ராணி. அவள் யார்?_____.
விடை: வெண்டைக்காய்.
(9) சலசல என சத்தமிடும் வாய் இல்லாதவன். அவன் யார்?_____.
விடை: கடல்.
(10) அழகான நடனத்துக்கு சொந்தக்காரன்; ஆபத்தான பாம்பையும் ஓட வைப்பான். அவன் யார்?_____.
விடை: மயில்.
மேலும் விடுகதைகளுக்கு, விடுகதை நேரம் என்ற லேபிலை பயன்படுத்துங்கள்.
எங்கள் விடுகதைகள் உங்கள் மனம் கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். விடுகதையை பற்றிய தங்கள் கருத்துக்களை பதிவு செய்வதோடு தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😊
🔥🔥
ReplyDelete