தூத்துக்குடியின் சிறப்புகள் விளக்கும் சிறந்த விடுகதைகள்
தூத்துக்குடியின் சிறப்புக்களை விளக்கும் விடுகதை நேரம்👇👇
விடை: பாஞ்சாலங்குறிச்சி.
(2) பல்வேறு நாடுகளையும் ஈர்க்கும் உலகப் புகழ்வாய்ந்த சுற்றுலாத்தலம். மேலும், உலகிலேயே மதியமும் மறையுறை நடைபெறும் சிறப்புடைய கிறித்தவ ஆலயம். அது என்ன? _____.
விடை: பனிமய மாதா திருத்தலம்.
(3) தூத்துக்குடிக்கு புகழ் சேர்க்கும் தனித்துவமான இனிப்புவகை என்ன? ______.
விடை: மக்ரூன்.
(4) தூத்துக்குடியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் தான் மஸ்கோத் அல்வா முதன்மையாக செய்யப்பட்டது. அந்த கிராமத்தின் பெயர் என்ன? _____.
விடை: முதலூர்.
(5) தூத்துக்குடியின் அருகே அமைந்துள்ளது இந்த வனவிலங்கு சரணாலயம். தமிழ்நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய வனவிலங்கு சரணாலயம் இது. அது என்ன? _____.
விடை: களக்காடு வனவிலங்கு சரணாலயம்.
(6) தூத்துக்குடியில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த முருகன் கோவில். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுளில், இது ஒன்றே கடற்கரையில் அமையப்பெற்றுள்ளது. அது என்ன? _____.
விடை: திருச்செந்தூர் முருகன் கோயில்.
(7) தமிழக அளவில், சிறப்பு மிகுந்த வகையில் தசராவிழாவைக் கொண்டாடும் தூத்துக்குடியில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க கோவில் எது? _____.
விடை: குலசை முத்தாரம்மன் கோயில்.
(8) தூத்துக்குடியில் உள்ள இத்தலத்தில், சிவபெருமான் பார்வதி தேவிக்கு பிரணவ மந்திரத்தை விளக்கிக் கூறினார். ஆகவே, தூத்துக்குடிக்கு மந்திர நகரம் என்ற பெயர் கிடைத்தது. புகழ் வாய்ந்த இந்த சிவ தலத்தின் பெயர் என்ன?______.
விடை: சங்கர இராமேஸ்வரர் கோவில்.
(9) பிரசித்தி பெற்ற ஒன்பது பெருமாள் கோயில்கள் தூத்துக்குடியில் அமைந்துள்ளது. ஒன்பது திவ்ய தேசங்களாகக் கருதப்படும் இக்கோவில்களின் பிரசித்தி பெற்ற திருப்பெயர் என்ன?_____.
விடை: நவத்திருப்பதி.
(10) இந்தியாவிலுள்ள முக்கிய துறைமுகங்களுள் ஒன்று தூத்துக்குடி துறைமுகம். தமிழகத்தில் உள்ள இரண்டாவது பெரிய துறைமுகம் என்ற சிறப்பு இத்துறைமுகத்தையே சேரும். இத்துறைமுகத்தின் பெயர் என்ன?_______.
விடை: வ.உ.சி. துறைமுகம்.
விடுகதைகள் தங்கள் உள்ளம் கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். மேலும், விடுகதைகளுக்கு கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள லேபிலை அணுகவும். பிடித்திருந்தால், நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் தங்கள் கருத்துக்களை கமண்ட் செய்திடுங்கள்...😃
💪🔥👍
ReplyDeleteதூத்துக்குடியின் சிறப்பை விளக்கும் அருமையான விடுகதைகள்!!!
ReplyDelete