அனைவரின் மனதையும் கவரும் "மழை" பற்றிய கவிதை
மழையின் வளமையை விளக்கும் சின்னஞ்சிறு சிறப்புக் கவிதை👇👇
மழை
மேளதாளங்கள் முழங்க,
வானிலிருந்து விழுந்த பன்னீர்த்துளி.
நீ பொழிந்தால் உயிர்த்துளி,
நீ இல்லாவிடில் கண்ணீர்த்துளி.
பசுமையின் கடவுள் நீ,
விவசாயியின் உயிர் நீ.
நீ செழித்தால் பூமி செழிக்கும்,
நீ கோபித்தால் அனைத்தும் அழியும்.
உயிர்கள் மீது கோபம் கொள்ளாதே!
அனைவரையும் காத்து அருளிடு!!
(கவிதையை எழுதியவர் அனிதா)
கவிதைகளை பற்றிய கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயக்கம் கொள்ளாதீர்கள் மற்றும் மேலும் கவிதைகளுக்கு, கீழ்காணும் லேபிலை பயன்படுத்துங்கள். கவிதை பிடித்திருந்தால், நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
மிக அருமையான கவிதை.
ReplyDeleteகுட்டி கவிதை மழையின் மகத்துவத்தை உணர்திய கவிதை☔
ReplyDeleteNice🔥
ReplyDelete