மன வலிமையை வலியுறுத்தும் விழிப்புணர்வு கவிதை
"தொட்டிலை ஆட்டும் கை; தொல்லுலகையும் ஆளும் கை" என்பதை பல பெண்கள் நீருபித்துக் கொண்டிருக்கும் நிலையில், சிலரோ, வாழ்வை வாழ மனமின்றி தன்னைத் தானே மாய்த்து வருகின்றனர். துயரங்கள் பல வருத்தினாலும், துணிவான மனதோடு அதை எதிர்த்து நின்றிடுங்கள் எங்களது எளிய கவிதையோடு👇👇
பெண்ணே, துணிந்து நில்!!
பூமிக்கு உயிர் ஊட்டிய அம்மையடி,
உயிர் ஜோதியை சுமக்கும் சக்தியடி,
நாட்டைக் காக்கும் ஜான்சி நீதானடி,
விண்ணுக்குச் சென்ற கல்பனாவும் நீதானடி,
அற்ப பிரச்சனையையோ, அற்ப மனிதர்களையோ கண்டு அஞ்சாதேயடி,
தோல்வியை கண்டு உயிரை மாய்க்காதடி,
பெண்ணே! உன்னுள் இருக்கும் துணிச்சலை உலகிற்கு காட்டிவிடடி.
வருங்கால சந்ததியை காக்கும் பொறுப்பு உள்ளதடி,
உலகமே உன்னை மிரட்டினாலும், நீ எதிர்த்து நில்லடி.
உயர உயர நீ பறந்து உலகத்தையே கைக்குள் பூட்டிவிடடி.
(கவிதையை எழுதியவர் அனிதா)
எங்கள் கவிதைகள் தங்கள் மனம் கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்வதோடு தங்கள் நண்பர்களுடனும் கவிதைகளை பகிர்ந்திடுங்கள்...😊
Good
ReplyDelete