கார்த்திகை தீபத்திருநாளை மகிழ்வுடன் கொண்டாடுங்கள்
நாளை கார்த்திகைத் தீப திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபத்தை பற்றிய சிறப்புக் கவிதை👇👇
வருகிற கார்த்திகை நன்னிலாளில், அனைத்து சுபமான வளங்களும் அனைவரையும் அடையட்டும், "இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்."
சூரியனும் சந்திரனும் சோதியாய் நின்று,
தன் ஒளியால் தீபங்களை ஒளிர வைத்தது.
மனதில் சூழ்ந்துள்ள காரிருளை அகற்றி,
மனம் மகிழ வைத்தது கார்த்திகை தீபங்கள்.
கார்த்திகை மாத பௌர்ணமியில் ஜொலித்த ஒளி,
நாடு எங்கும் புத்துணர்சியை தந்த ஒளி,
கார்த்திகை தீப ஒளி, கண்களைக் கவர்ந்த ஒளி,
நம்பிக்கையை ஊட்டி மார்க்கத்தை காட்டிய ஒளி.
(கவிதையை எழுதியவர் அனிதா)
தங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் பரிமாறிடுங்கள். மேலும், பல சிறப்புக் கவிதைகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை அணுகவும். கவிதையைப் பற்றிய கருத்துக்களையும் கமண்ட்டாக பகிர்ந்திடுங்கள்...😄
இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஇனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteதிருகார்த்திகை நல்வாழ்த்துக்கள்🎆🔥
ReplyDelete