வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் சிந்தனை துளிகள்
வாழ்வில் வளமை பெற வழிகாட்டும் சிந்தனை துளிகள் நேரம்👇👇
(2) உங்களை அவமதித்த நபரிடத்தில் உங்களை நிரூபிக்க நேரத்தை வீண் செய்யாதீர்கள். ஏனெனில், நேரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது.
(3) உதவி புரிய இயலும் தகுதியில் இருந்தால், கண் முன்னே துயரத்தில் தவிப்பவர்க்கு உதவ முன்வாருங்கள். ஏனெனில், ஒருவரின் துயரத்தை தீர்ப்பது இறைத்தொண்டுக்கு சமமாகும்.
(4) உயர்ந்த கனவுகள் காண்பதர்க்கு தகுதி ஒரு தடையில்லை. ஆனால், கனவுகளை கரம்பிடிக்க உங்கள் மனதை தகுதிப்படுத்துதல் அவசியமாகும்.
(5) எழுச்சி மிகுந்த எண்ணங்கள் உங்கள் வாழ்வை ஒளிமயமாக்கும் சிறப்பு கொண்டவை ஆகும். எனவே, வீழ்ச்சியை தழுவினாலும் எண்ணத்தால் எழுச்சியை சிந்திப்பது சிறப்பாகும்.
(6) வாழ்வில் வீழ்ச்சியே இல்லையென்றால், உயர்ச்சியின் சிறப்பை அறிந்துகொள்ள நமக்கு தகுந்த சந்தர்ப்பமே கிடைக்காமல் போய்விடும்.
(7) வாழ்வை வளமாக வாழ்வதற்கு வாழ்வு கற்றுத்தரும் பாடங்களை கற்றுக்கொள்வதே போதும். நம் வாழ்வில் ஏற்படும் அத்துணை நிகழ்வுகளும் நமக்கு ஏதோ ஒன்றை நிச்சயம் கற்பிக்கும்.
(8) வாய்ப்பை தேடி காத்திருப்பவரது கண்களுக்கு மட்டுமே வாய்ப்பானது புலப்படும். கண் முன்பு இருந்தாலும், நீங்கள் தேடாமல் இருக்கும்வரை வாய்ப்பு உங்களுக்கு பயன்படாது.
(9) மனதால் மனிதனாக இருப்பவரின் நட்பை ஒருபோதும் தொலைத்துவிடாதீர்கள். அதே நேரம், மனிதநேயமற்ற மனிதர்களிடமிருந்து விலகி வாழுங்கள்.
(10) பொருளாதார நிலையை உயர்த்த முழு நேரமும் உழைத்து உடல்நலத்தை வீணாக்கிவிடாதீர். உடல்நலம் பேணுதல் மிகவும் அவசியமாகும்.
எங்கள் சிந்தனை துளிகள் உங்கள் சிந்தைக்கு சிறப்பு செய்திருக்கும் என நம்புகிறோம். மேலும் சிந்தனைகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை கமண்ட் செய்யுங்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர தயங்காதீர்கள்...😄
அருமை👏👏👌👌
ReplyDeleteWonderful quotes 🤩🤩🤩🤩🤩🤩🤩
ReplyDeleteஉயர்ந்த வாழ்வுக்கு வழிகாட்டும் சிறப்பான சிந்தனைத்துளிகள்👏
ReplyDeleteSirappana thulikal
ReplyDelete