அனைவரையும் நல்வழிப்படுத்தும் சிந்தனைத் துளிகள்
அனைவரையும் சிந்திக்க வைக்கும் மிகச்சிறந்த சிந்தனை துளிகள்👇👇
(1) நன்னெறியை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தால், நன்மைகளை இறைவன் நிச்சயம் அருளுவார்.
(2) நீங்கள் உறுதியான மனதோடு உழைக்கத் தயாராக இருந்தால், உங்களைத் தழுவிய தோல்வியே உங்களிடம் தோற்றுவிடும்.
(3) இனிமையான வாழ்வை அமைக்க இன்றியமையாதது, அனைவரிடமும் வஞ்சகமின்றி அன்போடு நடந்துக் கொள்வதே ஆகும்.
(4) உண்மையான தோல்வி என்பது நீங்கள் முயற்சிக்க தயங்கும் போதுதான் ஏற்படுகிறது.
(5) பார்வையாளராக விமர்சிப்பவரை விட பங்கேற்பாளராக இருப்பவருக்குத்தான் அனுபவம் அதிகம். எனவே, வெற்றி மற்றும் தோல்வி பற்றி வருந்தாமல் வாழ்க்கைத் தரும் போட்டிகளில் பங்கேற்று அனுபவச்சாலியாக மாறிடுங்கள்.
(6) உங்கள் மனதளவில், எவரையும் உங்களுக்கு இணையாக வைத்து ஒப்பிடாதீர்கள். அடுத்தவரோடு ஒப்பிட்டு உங்களுடைய தனித்தன்மையை நீங்களே மறந்துவிடாதீர்கள்.
(7) அனைவருடைய மனதையும் கட்டுப்படுத்த வல்ல வலிமையான ஆயுதம் அன்பு. எனவே, அன்பை சிறந்த முறையில் பயன்படுத்தி உங்களைச் சுற்றி இருப்பவரை நல்வழிப்படுத்துங்கள்.
(8) சில நேரங்களில் சிலரிடம் மௌனம் காப்பதே பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.
(9) கடுஞ்சொற்கள் பேசுபவரிடம் பணிவான சொற்களை பயன்படுத்தி வந்தால், அவருடைய மனமும் மாறிவிடும். ஏனெனில், அன்பின் சக்தி அனைத்தைக் காட்டிலும் வலிமையானது.
(10) சிந்திக்க ஒருபோதும் தயங்காதீர்கள். ஏனெனில், சிந்திப்பதற்கே எல்லைகள் உருவாக்கினால், சாதிப்பது சாத்தியமின்றி போகும்.
அனைவருடைய மனதையும் எங்களது சிந்தனை துளிகள் கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் சிந்தனை துளிகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள்.
பிடித்திருந்தால், சிந்தனை துளிகளை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள் மற்றும் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள்...😄
🤓 super 👌 👌👌👌
ReplyDeleteஅருமை அருமை!!
ReplyDeleteசிறப்பான துளிகள்👍
ReplyDeleteஅருமை 💯🔥
ReplyDelete