அற்புதமான வாழ்வுக்கு வழிகாட்டும் சிந்தனை துளிகள்
அற்புதமான வாழ்வுக்கு வழிகாட்டும் சிந்தனை துளிகள்:-
(1) "ஆரோக்கியமான சிந்தனை; ஆரோக்கியமான வாழ்க்கை.
(2) "முயன்றால் மண்ணும் பொன்னாகும், முயற்சியே மேன்மை."
(3) "உழைப்பை மறந்தவன் ஜெயத்தை மறக்கிறான்!!"
(4) "காலம் கடந்துவிட்டால் காரியம் சிதறிவிடும்."
(5) "வெளுத்ததெல்லாம் பால் அல்ல."
(6) "கத்தியை தீட்டாதே; புத்தியை தீட்டு."
(7) "பொறுத்தார் பூமி ஆள்வார்."
(8) "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு."
(9) "யோசிக்காமல் முடிவு எடுப்பதும், நீந்த தெரியாமல் கிணற்றுக்குள் குதிப்பதும் ஒன்று."
(10) "கண்ணால் காண்பது எல்லாம் மெய்யல்ல.தீவிர விசாரிப்பதே மெய்."
(11) "பதறிய காரியம் சிதறிப் போகும்."
(12) "பயம் அகம்பாவத்தைத் தரும்; அகம்பாவம் அழிவைத் தரும்."
(13) "தீதும் நன்றும் பிறர் தருவதால் வராது."
(14) "பொய் மெய்யாகாது, மெய் வலிமையானது, பொய் எளிதாக தோற்றுவிடும்."
(15) "தன் கையே தனக்கு உதவி."
(16) "கடின உழைப்புக்கு இணை ஏதுமில்லை."
(17) "தன் வினை தன்னைச் சுடும்."
(18) "செய்வன திருந்தச் செய்."
(19) "சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்."
(20) "நிழலின் அருமை வெயிலில் தெரியும்."
(21) "அமைதி நம்மைக் காக்கும்; ஆங்காரம் நம்மை அழித்து விடும்."
(22) "ஆழம் தெரியாமல் காலை விடாதே."
(23) "தற்பெருமை அழிவைத் தரும்."
(24) "முடியும் வரை முயற்சி செய்! முடியும் வரை அல்ல; நீ நினைத்த செயல் முடியும் வரை!!"
(25) "எதுவும் அறியாதவர் எவருமில்லை; அதுபோல, அனைத்தும் அறிந்தவர் ஒருவரும் இல்லை."
(26) "மூச்சு விடுபவன் எல்லாம் மனிதனல்ல; முயற்சி உடையவனே மனிதன்."
மேலும் சிந்தனை துளிகளை வாசிக்க, கீழே இருக்கும் லேபிலை பயன்படுத்துங்கள். கருத்துக்களை கமண்ட் செய்வதோடு, தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
Comments
Post a Comment
Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.