வாழ்வில் உயர வழிகாட்டும் சிறந்த சிந்தனை துளிகள்
சிறந்த சிந்தனைகளை விளக்கும் தலைச்சிறந்த சிந்தனை துளிகள்👇👇
(1) "நீங்கள் நம்பியவர் உங்களை ஏமாற்றினால், தவறு உங்களுடையதே. யாரையும் நம்புவதற்கு முன், அவரது குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்."
(2) "கடினமான நேரத்தில், விதி என கூறிக்கொண்டு கவலையில் ஆழ்ந்து இருப்பதை விட, அடுத்து செய்ய வேண்டியதை எண்ணிப் பார்ப்பதே சிறந்த செயலாகும்."
(3) "உதவும் பண்பு அனைவருக்கும் இருக்க வேண்டியது மிக அவசியம். அதிலும், உதவி தேடுபவரைத் தேடிச்சென்று உதவி செய்வது உன்னதமான செயலாகும்."
(4) "நீங்கள் நம்பியவர் செய்த தீங்கை மறக்க முயற்சி செய்யுங்கள். ஆனால், மீண்டும் எவரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள்."
(5) "தங்களை தாங்களே நம்பவில்லை என்றால், அதைவிட மிகப்பெரிய தோல்வி வேரெதுவும் இல்லை."
(6) "நீங்கள் எதைச் செய்தாலும் சிலர் உங்களிடம் தவறு கண்டுபிடித்துக் கொண்டே இருப்பவர். அத்தகையோரிடம் நற்பெயர் பெற நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்."
(7) "வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் செல்ல விரும்பினால், உங்களைத் தாழ்த்தி பேசுபவர்களை தங்கள் அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள்."
(8) "எவ்வளவு உயர்வான இடத்திற்குச் சென்றாலும், வாழ்வில் அன்பில்லை என்றால் அந்த வாழ்வில் அர்த்தம் இல்லாமல் போய்விடும்."
(9) "பணம் சேர்க்க பல நேரத்தை செலவழிக்கும் சிலர், நல்ல மனங்களின் அன்பைப் பெற தவறிவிடுகின்றனர். ஆனால், அன்பில்லாது வாழும் வாழ்வானது, எவருக்கும் நிம்மதியைத் தர வாய்ப்பில்லை."
(10) "தளராத மனம் இருந்தால், பலப்பல தோல்விகளையும் தளர்த்தி விடலாம் தன்னம்பிக்கையோடு."
மேலும், சிந்தனை துளிகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். சிந்தனை துளிகளை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட் செய்திடுங்கள் மற்றும் பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...😄
Nice
ReplyDeleteVery nice
ReplyDeleteWell said💯🔥
ReplyDelete