வாழ்வுக்கு வளமை சேர்க்க உதவும் சிந்தனை துளிகள்
உயர்ந்த வாழ்வை வாழ பின்பற்ற வேண்டிய சிந்தனை துளிகள்👇👇
(2) அடுத்தவருடன் அனாவசியமான வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கு முன்பு உங்களின் பொன்னான நேரம் வீணாவதை சிந்தனையில் வைத்து கொள்ளுங்கள்.
(3) பிறருடைய குணத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு முன் அவரைப் பற்றி புகழோ பழியோ சொல்லாதீர்கள். ஏனெனில், அது எந்நேரத்திலும் உங்களுக்கு ஆபத்தை தேடி தரலாம்.
(4) யாரேனும் உங்கள் மீது குறைகள் பல கூறி உங்களை திருந்த வலியுறுத்தினால் அதை எண்ணி மனம் கலங்க வேண்டாம். ஆனால், அவர் கூறிய குறைகள் எவருக்கேனும் இடையூறுகள் ஏற்படுத்துவதாக இருப்பின், அறிவுரையை ஏற்று தங்கள் குணங்களை மாற்றிக்கொள்வதே சிறந்ததாகும்.
(5) நீங்கள் அடுத்தவருக்கு நன்மை செய்தால், இறைவன் உங்கள் வாழ்வை நிச்சயமாக உயர்த்துவார்.
(6) உள்ளத்தால் எவருக்கும் துயரம் தராமல் வாழ்ந்து வருபவனின் வாழ்க்கையில் தோல்விகளுக்கு என்றென்றும் இடமில்லை.
(7) எவருடைய மனதையும் காயப்படுத்தி வாழ்வை வாழாதீர். ஏனெனில், அனைத்து உயிருடைய மனங்களையும் புண்படுத்திவிட்டு வாழும் வாழ்க்கையில் துளியும் பயனில்லை.
(8) பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாத மானிடருக்கு அடுத்தவர் தனது உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கவில்லை என நினைத்து வருந்தும் தகுதி கிடையாது.
(9) சாதனை செய்ய வாய்ப்பைத் தேடுவோர் கண்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் தெரியும்.
(10) அன்பு என்ற பெயரில் அதிகாரம் செய்பவரிடம் பழகாதீர். அது உங்கள் வாழ்வில் என்றென்றும் மன தளர்ச்சி ஏற்பட காரணமாக அமையும்.
சிந்தனை துளிகள் அனைத்தும் பயனுள்ள வகையில் அமைந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் சிந்தனை துளிகளை வாசிக்க கீழ் இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிடுங்கள்.
பிரமாதம்!!
ReplyDeleteசிந்திக்க வைக்கும் 🧐🤔 சிந்தனை துளிகள் 😇😇👍
ReplyDeleteஅருமை
ReplyDelete