வளமையான வாழ்வை வசமாக்க உதவும் சிந்தனை துளிகள்
வாழ்வில் உயர்ச்சியை அடைய ஊக்கம் தரும் சிறப்பு வாய்ந்த சிந்தனை துளிகள்👇👇
(1) உங்கள் நற்குணங்களை உங்களது சுற்றத்தார் அங்கீகரிக்காவிட்டாலும் அக்குணத்தை கைவிட்டுவிடாதீர். நினைவில் கொள்ளுங்கள்- இறைவன் உங்கள் நற்குணங்களை நிச்சயம் அங்கீகரிப்பார்.
(2) ஓய்வு எடுத்து கொண்டு பணியாற்றலாம் என எண்ணுவதில் தவறில்லை. ஆனால், ஓய்வு மட்டுமே எடுத்துக்கொண்டு வாழ்வை கழிப்பதால் பணி தானாக நிறைவு பெற்றுவிடாது.
(3) முயற்சி செய்து உயர்ச்சியை அடைந்த பின்னும் அந்த உயர்ச்சியின் சிறப்பை உணர இயலாவிட்டால் முயற்சியின் பலன் கிடைத்தும் பலனற்று போய்விடும்.
(4) துயரத்தில் துணையாக வரும் நண்பர்களை பெற இயலாவிட்டாலும், துயரத்தை ஏற்படுத்துபவரை நண்பராக ஏற்படுத்தாமல் இருப்பதே சாலச்சிறந்த செயலாகும்.
(5) உங்கள் வாழ்க்கையை விட உயர்ந்த ஆசிரியரை நீங்கள் எங்கு தேடினாலும் பெற இயலாது.
(6) தோல்வி அடைந்தால் துயரத்துடன் இருப்பதை நிறுத்துங்கள். ஏனெனில், ஏற்றமும் இறக்கமும் அனைவரின் வாழ்விலும் ஏற்படுவது மிகவும் இயல்பாகும்.
(7) உள்ளமறிந்து ஒருவருக்கும் துயரம் இழைக்காதீர். ஏனெனில், உங்கள் கர்மவினை உங்களை எப்போதும் பின்தொடர்ந்தே வரும்.
(8) தெளிவான மனதுடன் உங்கள் இலக்கை தேர்வு செய்திடுங்கள். ஏனெனில், உங்கள் இலக்கே உங்களை ஊக்கப்படுத்தும் அருமருந்தாகும்.
(9) தகுதிக்கு மீறி சிந்திப்பதை நிறுத்துவது மிகவும் அவசியம். ஆனால், உங்கள் தகுதியை நிர்ணயம் செய்வது உங்கள் சொந்த விருப்பமாகும்.
(10) கடினமான இலக்கையும் எளிமையாக அடைவதற்கு தகுதியாக உங்கள் மனதை தயார் செய்யுங்கள். இதுவே, வெற்றிக்கான தகுதியை பெற நம்மை தகுதிபடுத்தும்.
எங்கள் சிந்தனை துளிகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் சிந்தனைகளுக்கு, கீழே தரப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்தி பயன் பெறுங்கள். பிடித்திருந்தால், நண்பர்களுடனும் பகிர்ந்து மகிழுங்கள்... 😊
பின்பற்ற வேண்டிய சிந்தனை துளிகள்👍
ReplyDeleteWonderful quotes 🤩🤩🤩🤩👍👍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ReplyDeleteமிகச் சிறந்த சிந்தனைகள்.
ReplyDeleteசிறப்பான துளிகள் 🔥
ReplyDelete