அனைவரும் பின்பற்ற வேண்டிய சிந்தனை துளிகள்
வாழ்வை சிறந்த முறையில் வாழ வழிகாட்டும் மிக உயர்ந்த சிந்தனை துளிகள்👇👇
(1) அறம் நிறைந்த வாழ்வை வாழ ஒருவருக்கு அறிவுரை கொடுத்து உதவுவது தவறில்லை. ஆனால், அறத்தை நாமும் கடைப்பிடிக்க தவறுதல் கூடாது.
(2) இதயத்தில் இரக்கம் இல்லையெனில் இறைவன் என்றும் உதவ முன்வர மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(3) நீங்கள் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து நன்மையையும் தீமையையும் பலன்களாக தருபவை சொற்கள்.
(4) உங்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டும் நபரை என்றுமே பகைத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில், பொறாமையின்றி ஊக்கம் தரும் உள்ளம் உள்ளவர் உலகில் மிக குறைவு.
(5) உழைப்பு என்ற விதையை விதைக்காமல் வெற்றி என்ற பழத்தை சுவைக்கச் சிந்திப்பது என்றென்றும் சாத்தியமற்றது.
(6) வாழ்க்கையின் அடுத்த நொடி நிரந்தரமற்றது. எனவே, காலங்கள் கடந்த பின் காத்திருக்கும் கவலைகளை எண்ணி கவலைப்படுவது பயனற்றது.
(7) வசந்தம் வாழ்வில் வேண்டும் என்றால் மனதிலிருந்து வஞ்சகத்தை அகற்றுதல் மிக அவசியமாகும்.
(8) எவரது குணத்தையும் அவர் தோற்றத்தை வைத்து கணக்கிடாதீர்கள். ஏனெனில், பார்ப்பதற்கு அழகாக இருப்பவர்கள் பலரது சிந்தை அழகாக இருப்பது இல்லை.
(9) தனக்கு கிடைத்த தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து வெற்றி பெற முயற்சி செய்பவனுக்கு வெற்றி விரைவில் கிட்டும்.
(10) தான் தோல்வி அடைந்ததற்கு காரணமாக பிறரையும் காலத்தையும் சுட்டிக்காட்டி இகழ்ச்சி மழை பொழியும் எவராலும் வெற்றி என்ற கோட்டையின் வாயிலை எப்போதும் அடைய இயலாது.
சிந்தனை துளிகள் தங்கள் சிந்தையை சிந்திக்க வைத்திருக்கும் என நம்புகிறோம். வாசகர்களே!தங்கள் சிந்தையை கவர்ந்த சிறப்பான சிந்தனை துளிகளை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட் செய்ய தயங்காதீர்கள்.
நன்று.
ReplyDelete💯💯 முற்றிலும் சரியான👌🏻👌🏻😇 மற்றும் உண்மையான சிந்தனை துளிகள் 👍🤓
ReplyDelete