சிறப்பான வாழ்வினை வாழ சிறந்த சிந்தனை துளிகள்
வாழ்வை சிறந்த முறையில் வாழ உதவும் சிறப்பான சிந்தனை துளிகள்👇👇
(1) தோல்வியில் முடிவெடுக்கவும் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ளவும் மனதில் துணிவு வேண்டும். ஏனெனில், மனதில் துணிவு இருந்தால் கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் கையாள இயலும்.
(2) கடந்து சென்ற கடுமையான காலங்களை எண்ணி மனமுடைந்து போவதில் பயனில்லை. எனவே, நிகழ்காலத்தை மகிழ்ச்சியுடன் சிரித்தபடி வாழுங்கள்.
(3) உறுதியற்ற எதிர்கால வாழ்வை எண்ணியெண்ணி, இன்று உங்கள் கையில் இருக்கும் நேரத்தையும் நிகழ்கால வாழ்வையும் வீணாக்கி விடாதீர்கள்.
(4) உலகில் வாழும் அனைத்து உயிர்களிடத்திலும் பேதமின்றி அன்பு காட்டுங்கள். இதைச் செய்தாலே உங்களுக்கு இறையருள் எளிதில் கிட்டும்.
(5) ஒருவரிடம் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை ஏட்டில் எழுதி அழிப்பது போன்று எளிதில் அழிக்க இயலாது. எனவே, அனைவரிடமும் வார்த்தைகளை எப்போதும் சிந்தித்து பயன்படுத்துங்கள்.
(6) நீங்கள் எவரது மனதையும் புண்படுத்தாமல் வாழ விரும்பினால், நாவை நல்வழிப்படுத்த பழகுங்கள். ஏனெனில், நாவை விட எந்த கொடிய ஆயுதத்தாலும் மனதை கொடூரமாக காயப்படுத்த இயலாது.
(7) நீங்கள் நினைப்பது போல, அனைவரும் உங்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என எண்ணுவது உங்கள் பெருந்தவறு. ஏனெனில், உலகிலுள்ள அனைரும் உங்களுக்காக ஒரே குணம் கொண்டவர்களாய் மாற இயலாது.
(8) தோல்விகளுக்கு காரணமாக விதியை பழி சொல்வது துளியும் சரியன்று. ஏனெனில், முடிவெடுத்து செயல்படுவது நீங்கள் தான். உங்கள் விதி அல்ல.
(9) தோல்வியைத் தழுவும் பொழுது அடுத்தவரைச் சுட்டிக்காட்டி இயலாமையை தெரிவித்தால், வெற்றியின் மகிழ்வை கொண்டாடவும் உங்களுக்கு உரிமை இல்லை என நினைவில் கொள்ளுங்கள்.
(10) நீங்கள் பிறரிடம் எதிர்ப்பார்ப்பதற்கு முன் பிறரும் தங்களிடம் அவ்வாறு எதிர்ப்பார்த்தால் எவ்வாறு இருக்கும் என சிந்தித்து பாருங்கள். அப்போது தான் நீங்கள் எதிர்பார்ப்பது தவறு என புரியும்.
உங்கள் வாழ்வை சிறப்பாக வாழ எங்களது சிந்தனை துளிகள் உதவும் என நம்புகிறோம். மேலும் சிந்தனை துளிகளுக்கு, கீழ் கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். பிடித்திருந்தால், சிந்தனைகளை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள்...😃
சரியான சிந்தனை துளிகள்😀👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤩
ReplyDeleteஉண்மையான கருத்தை உரைத்த சிந்தனை துளிகள் சிறப்பு வாய்ந்தது👌👌👌💯
ReplyDeleteமிகச் சிறந்த சிந்தனை துளிகள்!!
ReplyDelete