சிறப்பான கருத்துக்கள் பகிரும் மிகச்சிறந்த சிந்தனைகள்
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்👇👇
(1) மனம் கவரும் வகையில் பேசும் அன்னியர் அனைவரிடமும் மனம்விட்டு பேசிவிடாதீர்கள். ஏனெனில், உலகில், நற்செயல்களை விட குற்றங்களே மிக எளிதாக அதிகரித்துக் கொண்டு வருகிறது.
(2) கடினமான சூழ்நிலையை அனைவரும் வாழ்வில் கடந்து வருவது வழக்கம். ஆனால், அதை எதிர்கொள்ளும் விதத்தில் தான் உங்கள் சாமர்த்தியம் உள்ளது.
(3) ஆபத்தான நிலையில் உதவும் நண்பரைப் பெற இயலாவிட்டாலும், ஆபத்தை விளைவிப்பரை நண்பராய் நிச்சயம் வைத்துக் கொள்ளாதீர்கள்.
(4) தொலைவான தூரத்தில் இருந்தாலும், தொலைத்த கடந்த காலத்தை மீண்டும் நினைத்து பார்க்க வைப்பதில்தான் தனித்துவமான நட்பின் தன்னேரில்லாத ஆழம் உள்ளது.
(5) ஊதியம் எதிர்ப்பாராது, உதவிக்கரம் நீட்டுவோரிடம் நன்றி தெரிவித்தல், அனைத்து நற்செயல்களைக் காட்டிலும் மிகச்சிறந்த செயலாகும்.
(6) தன் வெற்றிக்குக் காரணமாக தன்னுடைய விடாமுயற்சியை மட்டுமே சுட்டிக்காட்டும் சிலர், தோல்விக்குக் காரணமாக மற்றவரின் செயல்களையே சுட்டிக்காட்டுவது ஏற்றுக்கொள்ள தகுந்த செயலன்று.
(7) கடுமையான வார்த்தைகளால் ஆலோசனை வழங்குவதை விட, ஊக்குவிக்கும் வகையில் ஆலோசனையை போதிப்பதையே மனம் ஏற்றுக்கொள்ளும். எனவே, நீங்கள் அனைவரிடமும் பேச வேண்டிய விதத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்.
(8) இறைவன் அருளிய இவ்வாழ்க்கை மிகவும் உன்னதமானது. ஆகவே, உன்னதமான வகையில் நேரத்தை வீணாக்காது பயன்படுத்துங்கள்.
(9) கடுமையான குணம் உடையோரிடமும் தொடர்ந்து அன்பை விதைத்திடுங்கள். ஏனெனில், எறும்புகள் பல தொடர்ந்து ஊர்ந்து செல்வதால் கல் தேய்வது போல, அவருடைய இரும்பு மனமும் இளக வாய்ப்பு உள்ளது.
(10) ஒருவருக்கு உலகின் சிறந்த பரிசைக் கொடுக்க விரும்பினால், உலகின் மிக உன்னத பரிசான புன்னகையை பரிசளித்து மகிழுங்கள்.
சிந்தனை துளிகள் அனைத்தும் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும், சிந்தனை துளிகளுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். பிடித்திருந்தால், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் சிந்தனைகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட் செய்ய தவறாதீர்கள்...😄
சிந்தனை துளிகள் சிந்தித்து செயல் பட வைக்கும் சிறப்பான துளிகள்🏆
ReplyDeleteஉண்மை மற்றும் சரியான பாதையை விளக்கும் சிந்தனை துளிகள் மிக மிக அருமையாக இருக்கிறது.
ReplyDelete👌👌👌
Nice
ReplyDelete