சிறந்த கருத்துக்களை சொல்லும் சிறந்த சிந்தனைகள்
சிந்திக்க வைக்கும் சின்னஞ்சிறு சிந்தனை துளிகளை வாசித்திடுங்கள்👇👇
(1) "வாழ்வில் வளர்ச்சி வேண்டுமாயின், வாய் பேசுவதை விட வளர்ச்சிக்கான முயற்சி மேற்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்."
(2) "ஒருவருடைய பொறுமையை நிர்ணயப்பதில் இந்த சமூகம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. பொறுமை கடைப்பிடிப்பவர், சமூகத்தின் தூண்டலால், கடுமையாக மாறுகின்றனர்."
(3) "அமைதியான முறையில் வாழ்வை வாழ, அனுசரித்து வாழ்வது அவசியம். ஆனால், அனுசரித்து செல்வது மட்டுமே வாழ்வாகிப் போனால், வாழ்வில் அமைதிக்கு வழி இருக்காது."
(4) "வார்த்தைகளை தேர்வு செய்து பயன்படுத்தும் பண்பு இல்லாதவர், தன் வாழ்வை தானே சிக்கலாக்கிக் கொள்வர்."
(5) "எதிரியைப் போல் இருப்பவர்களை விட, ஆபத்தில் உதவாது நண்பனைப் போல் இருப்பவருடன் பழக்கம் கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்."
(6) "உங்கள் மன நிறைவுக்காக, இயன்றவரை அனைவருக்கும் உதவி செய்யுங்கள். ஆனால், அடுத்தவர் குறை கண்டுபிடித்தால், அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்."
(7) "உலகில் உள்ள அனைவரிடமும் எவராலும் நற்பெயர் பெற இயலாது. ஏனெனில், நீங்கள் செய்யும் நன்மைகளை விட, சிலருக்கு உங்களது சிறிய தவறுகளே மிகப்பெரியதாய் தெரியும்."
(8) "அடுத்தவரிடம் புகழும் நற்பெயரும் பெற, உங்கள் தனித்துவத்தை இழந்து விடாதீர்கள்."
(9) "நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் வாழ்வு அமையாமல் போனால், கிடைத்த வாழ்வை நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்."
(10) "வெற்றி பெற முயற்சி செய்வரது கண்கள் அனைத்திலும் வாய்ப்பை பார்க்கிறது. ஆனால், வாய்ப்பு கிடைத்தாலும், முயற்சி செய்ய விரும்பாதவர் அதைப் பொருட்படுத்துவதில்லை."
மேலும் சிறந்த சிந்தனை துளிகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள்...😄
மிக்க நன்றாக இருக்கிறது.
ReplyDelete👌👌
Super
ReplyDelete💯💯💯💯Nice
ReplyDelete