வளமிக்க வாழ்வுக்கு வழிகாட்டும் சிந்தனை துளிகள்
(1) ஆயிரம் வார்த்தைகளால் சாதிக்க முடியாதவற்றைக் கூட மௌனம் சில நேரம் சாத்தியமாக்கிவிடும்.
(2) உங்கள் வாழ்க்கையின் நிலையை எண்ணி வருந்தும் முன், 'உங்கள் வாழ்வின் நிலையை மாற்ற நீங்கள் செய்த முயற்சி போதுமானதா?' என சிந்தித்து பாருங்கள்.
(3) கடின உழைப்பும் கலங்காத மன உறுதியும் இருப்பவருக்கு எக்காரியமும் எளிதில் கைகூடும்.
(4) நமக்கு கிடைக்கும் வெற்றிகளுக்கு நமது கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் காரணமாக கூறுகிறோம். ஆனால், நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு நமது தவறுகளைக் காரணமாக கூறும் தைரியம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை.
(5) வறுமை நிலையிலும் வஞ்சகம் இல்லாத மனம் எவரிடத்தில் இருக்கிறதோ, அவரிடத்தில் இறைவன் என்றும் வாசஞ் செய்வார்.
(6) தேர்வு செய்து பயன்படுத்தினால் வாழ்வு என்ற பரீட்சையில் தேர்ச்சி பெற்றுத்தரும் தகுதியுடையவை சொற்கள்.
(7) வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் வெற்றி பெற துடிப்பவரை விட, கிடைக்கும் இடத்தில் வெற்றிக்கான வாய்ப்பை ஏற்படுத்துவரே சாமர்த்தியசாலி.
(8) இன்றைய நவீன யுகத்தில், வாழ்வை வளமையாக வாழ்வதற்கு பணத்தை சேர்க்கும் மக்களை விட, பணத்தின் பின் ஓடி வாழ்வில் நிம்மதியை தொலைத்த மக்களே அதிகமாக உள்ளனர்.
(9) புரட்சிகரமான கருத்துக்களை வன்முறையின்றி மக்களின் சிந்தைக்கு கொண்டுச் செல்லும் சீர்மிகு வீரர்கள் சொற்களே.
(10) இடமும் பொருளும் அறிந்து சூழலுக்கு ஒன்றி வாழ தயாராகினால் வாழ்வில் வசந்தம் என்றென்றும் வீசும்.
சிந்தனை துளிகள் தங்கள் சிந்தையை கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் சிந்தனைகளை வாசிக்க கீழ் இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள்.
உங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள் மற்றும் சிந்தனை துளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...😊
மிகவும் அருமை!!
ReplyDeleteSuper 😃👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ReplyDelete