வாழ்வை வளமாக மாற்ற வழிகாட்டும் சிந்தனை துளிகள்
வாழ்வை வளமாக வாழ வழிகள் விளக்கிடும் சிறந்த சிந்தனை துளிகள்👇👇
(1) நீங்கள் உங்களை அழகாக்க விரும்புகிறீர்களா? அப்படியெனில், உள்ளத்தை அழகாக்குங்கள். ஏனெனில், அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
(2) காலத்தை சிறந்த முறையில் கையாள பழகிவிட்டால், வாழ்வின் பல நேரத்தை வளமாக மாற்ற காலமே பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துவிடும்.
(3) வாழ்வை வீணாக்க விரும்பவில்லை என்றால், அனைவரிடமும் வார்த்தைகளை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள். ஏனெனில், பலருடைய வாழ்வை வார்த்தைகளே பாழாக்கிவிடுகிறது.
(4) வெற்றிக்கான வாய்ப்புகள் கண்ணெதிரே இருந்தாலும், முயற்சி செய்து தேடாவிட்டால் ஒருபோதும் வெற்றி கிடைக்காது. எனவே, முயற்சியின்றி வெற்றியை எதிர்பார்ப்பதில் துளியும் பலனில்லை.
(5) சிரிப்பதற்கு நீங்கள் விரும்பினால் மட்டுமே, சிரிக்க இயலும். நினைவில் கொள்ளுங்கள், சிரிக்கும் அனைவரது வாழ்விலும் கவலை இருக்கிறது.
(6) தினமும் சிறிது நேரம் வாசிப்பதற்கு செலவிடுங்கள். ஏனெனில், வயிற்றுப்பசி தீர்ப்பது போல, அறிவுப்பசியையும் தீர்ப்பது மிகவும் அவசியம்.
(7) அனைவரது திறமைகளும் வித்தியாசமாக இருக்கும் போது, ஒருவரின் பாதையை மட்டுமே பின்பற்றினால் வெற்றி எப்படி கிட்டும்?
(8) உங்கள் மனதைக் காயப்படுத்தியவரை நீங்களும் காயப்படுத்துவதால் அவர் ஏற்படுத்திய வலி தீர்ந்துவிடாது. எனவே, பிடிக்காவிட்டால், அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றுவிடுங்கள்.
(9) வாழ்க்கையில் உங்களுக்கு வரும் பிரச்சனைகள் அனைத்தும் நிச்சயம் சரியாகிவிடும். ஏனெனில், தீர்வு இல்லாத சிக்கலை இறைவன் எவருக்கும் தருவது இல்லை.
(10) பலப்பல தோல்விகளுக்கு பிறகே இறைவன் நமக்கு வெற்றியை அருளுகிறார். ஏனெனில், வெற்றியே எப்போதும் கிடைத்தால், அதன் அருமை அறியப்படாமல் போய்விடும்.
அனைவருக்கும் சிந்தனை துளிகள் பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் சிந்தனைகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள்...😄
👏👏👏👏👏👏👏
ReplyDeleteஅருமையான சிந்தனை துளிகள்