அவசியம் வாசிக்க வேண்டிய அற்புதமான சிந்தனைகள்
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய அற்புதமான சிந்தனை துளிகள்👇👇
(1)அடுத்தவருடைய வாழ்வை பின்பற்றுவதை விட, உங்கள் திறமைகளை பின்பற்றுங்கள். இதுவே வெற்றிக்கான இரகசியம்!
(2) நமது வாழ்வில் வருகை தரும் துன்பங்கள் தான், நம்மை பக்குவப்படுத்தி எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் தைரியத்தைத் தரும்.
(3) விடாமுயற்சியுடன் தொடர்ச்சியாக உழைக்க மனதைரியம் இருந்தால், மலையளவு துயரம் வந்தாலும், உங்களிடம் தோல்வியை சந்திக்கும்.
(4) உருவத்தை வைத்து, எவருடைய குணத்தையும் முடிவு செய்யாதீர்கள். நினைவில் கொள்ளுங்கள், உருவத்தில் மிகச்சிறிய அச்சாணி தான், பிரம்மாண்டமான தேரை இயக்கக் காரணமாக உள்ளது.
(5) உயர்ச்சியை அடைய நீங்கள் முயற்சி செய்யவில்லை என்றால் கனவுகள் காண்பதில் துளியும் பலனின்றி போகும்.
(6) தளராத முயற்சியும் தவறாத பயிற்சியும் இருந்தால், தவறிய வாய்ப்புகளும் தானே தேடி வரும்.
(7) வெற்றிக்கான வாய்ப்புகள் உங்களிடம் தேடி வராவிட்டால், நீங்களே வாய்ப்பை ஏற்படுத்துங்கள். இதுவே, வெற்றியை நோக்கிய பயணத்தில் நமது முதல் முயற்சி ஆகும்.
(8) வெற்றியை நீங்கள் தேடிச் செல்லாதவரை வெற்றி உங்களைத் தேடி வராது.
(9) எந்த செயலையும் காலம் தாழ்த்தாது நிறைவேற்றுங்கள். ஏனெனில், காலத்தின் அருமை காலம் தவறிய பின்புதான் புரியும். ஆனால், புரிந்தும் பலனற்று போய்விடும்.
(10) தவறு அனைவரின் வாழ்விலும் ஏற்படுவது சகஜம். எனவே, நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்க தவறாதீர்கள். ஆனால், தவறுகளை மன்னிக்க வேண்டும் என எதிர்ப்பார்த்தால், மன்னிப்பு கோரவும் தயாராக இருக்க வேண்டும்.
உங்களுக்கு சிந்தனை துளிகள் பிடித்திருக்கும் என நம்புகிறோம். பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும், தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவு செய்திடுங்கள்...😄
அருமை!!
ReplyDeleteஅருமை !!!
ReplyDeleteநல்ல பதிவு👌
ReplyDeleteஅற்புதமான சிந்தனை துளிகள் 🤩🤩
ReplyDeleteArputham💯🔥
ReplyDelete