Posts

Showing posts with the label கதை நேரம்

அவசியம் வாசிக்க வேண்டிய சிக்கனம் பற்றிய சிறுகதை

Image
உயர்ந்த நீதிகள் தந்து அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறுகதை நேரம் 👇👇 சேமிப்பின் தேவை மாலா இளங்கலைப் பட்டதாரி. அவள் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆறு மாதங்களாக வேலை தேடி வந்தாள். பல மாத கடின முயற்சிக்கு பின், ஒரு தனியார் நிறுவனத்தில் அவளது முயற்சிக்கு பலனாக வேலை கிடைத்தது. தனது பணியை பாராட்டும் வகையில் செய்து வந்தாள் அவள்.  அவளது தனித்திறமை பலராலும் பாராட்டப்பட்டது.  இவ்வளவு சாமர்த்தியம் கொண்ட மாலாவிடமும் மிகக் கொடிய பழக்கம் ஒன்று இருந்தது. அந்த தீய குணமானது, அவளை தேவையற்ற செலவுகள் செய்ய ஊக்குவித்தது. சேமிப்பின் சிறப்பை அறியாத அவள், தனது சம்பளப் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்து வந்தாள்.  அழகு சாதனப் பொருட்கள் மீது அவளுக்கு மிகுந்த ஆர்வம். எனவே, அத்தியாவசியமற்ற அழகு சாதனப் பொருட்களுக்காக  தனது சம்பளத்தின் பெரும்பங்கை செலவிட்டு வந்தாள். ஆடம்பரச் செலவிற்காகவும்  பணம் செலவு செய்ய தயங்கவில்லை. அவளது இக்குணத்தால், மாதம் முடிவதற்கு முன்பே அடுத்த மாதத்தின் சம்பளத்தை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள்.  மாலாவிற்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தா...

விடாமுயற்சி தந்த மனமாற்றத்தை விளக்கும் நீதிக்கதை

Image
விடாமுயற்சி ஏற்படுத்திய மனமாற்றம்: பவித்ரா மற்றும் பாலனின் செல்லப் புதல்வியின் பெயர் பாவனா. பாவனா மிகச்சிறந்த புத்திசாலி மற்றும் திறமைசாலி. சதுரங்கம் விளையாடுவது மற்றும் ஓவியங்கள் வரைவது போன்றவற்றில் அவளுக்கு நிகர் அவள் மட்டுமே. ஆனால், அவள் மிகவும் சோம்பேறியாக இருந்தாள்.   அவளுடைய சோம்பேறிக் குணம் அவளது திறமைகளை வெளிப்படுத்த தடையாக இருந்து வந்தது. எனவே, அவளது பெற்றோர் அவள் குணத்தினை எண்ணி மிகவும் கவலை அடைந்து வந்தார்.  தன் மகளின் சோம்பேறிக் குணத்தை திருத்தவும் அவளது திறமையின் சிறப்பை உணர்த்தவும்  எண்ணிய பெற்றோர் அவளுக்கு சிறிய பாடம் புகட்ட முடிவு செய்தனர். ஆகவே, அவளை மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.  அந்த இல்லத்தில், ஆண்டுக்கு ஒரு முறை மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விழா நடத்துவது வழக்கம். அந்த விழாவைக் காண்பிக்கவே பாவனாவை அவளது பெற்றோர் அங்கே அழைத்து வந்திருந்தனர். விழா தொடங்கியது மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்கள் திறமைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினர். அதில், பார்வையற்ற ஒரு சிறுமி தனது இனிமையான குரலால் பாடல...

உயர்ந்த நெறிகளின் சிறப்பை விளக்கும் சிறுகதை நேரம்

சிறந்த கருத்துக்களை பகிரும் சிறப்பான சின்னஞ்சிறு கதை👇👇 சிறுகதை நேரம் பாலன் ஒரு திறமையான பட்டதாரி இளைஞன். அவனுக்கு கதைகள் எழுதுவது, கட்டுரை எழுதுவது,  ஓவியம் தீட்டுவது மற்றும் பாடல்கள் பாடுவது போன்றவற்றில் ஆர்வம் அதிகம். ஆனால், படிப்பதில் அதிகம் நாட்டமின்றி இருந்தான். பெற்றோரின் வற்புறுத்தலால் பி.காம் படித்துவிட்டு கணக்காளர் (அக்கவுண்ட்டன்ட்) பணிக்காக பல அலுவலகங்களில் விண்ணப்பித்து வந்தான். அவனது கனவு, மிகப்பெரிய எழுத்தாளன் ஆக வேண்டும் என்பதே! எழுத்தாளர் பதவி அனைவருக்கும் எளிதில் கிடைக்காது. எனவே, அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தற்போதைக்கு ஏதேனும் ஒரு அலுவலகத்தில் கணக்காளர் பணியைத் தேடிக் கொள்வது நல்லது என்று அவனது பெற்றோர் அறிவுரைத்தனர். கனவுகளை கரம்பிடிக்க ஏங்கிய அவன் மனம், பெற்றோரின் அறிவுரையை ஏற்று, பணத்தேவையைப் பூர்த்தி செய்ய கணக்காளர் பணியைத் தேடி பலப்பல அலுவலகங்களில் விண்ணப்பித்து வந்தது. ஒரு வார காலம் இவ்வாறே கழிந்தது.  மேலும், ஒருவாரத்திற்குப் பின், எதிர்பாராத விதமாக, ஆனந்த செய்தி அலைபேசியில் வந்தது. கணக்காளர் பணிக்கான நேர்காணல் அழைப்பு தான் அது. தங்கையின் படிப்ப...

உழைப்பின்றி ஊதியமில்லை என விளக்கும் சிறுகதை

சிந்திக்க வைக்கும் சிறப்பான கருத்துக்கள் கொண்ட சிறுகதை நேரம்👇👇 உழைப்பின்றி ஊதியமில்லை வரதராஜன் மிகச்சிறந்த உழைப்பாளி. அவர், புத்தக விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். மேலும், கடையில் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில், தையல் பணியில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஐந்தாண்டுகளாக அயராது உழைத்து வரும் வரதராஜனைக் கண்ட சுற்றுவட்டார மக்கள், அவரது உழைப்பைப் போற்றி புகழாரம் சூட்டி வந்தனர். ஆனால், முகிலனின் மனதுக்கு வரதராஜனின் வேலைகள் எதுவும் பாராட்டும் விதத்தில் இருந்ததாகத் தோன்றவில்லை. இவ்வாறு சிந்திக்கும் முகிலன் யார் என அறிவோமோ?, வாருங்கள். வரதராஜன் கடை வைத்திருக்கும் தெருவில் வசித்து வரும் கதிர்-மாலா தம்பதியின் ஒரே மகன் முகிலன். முகிலனின் கனவானது, மிகப்பெரிய தொழிலதிபராக வேண்டும் என்பதுதான். தினமும் கத்தை கத்தையாய் லட்சக்கணக்கில் பணம் சேர்க்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறையாவது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும், உலகமே வியந்து பார்க்கும் விதத்தில் கோடிக்கணக்கான பணம் செலவழித்து மாளிகை போல் வீடு கட்ட வேண்டும், என நீண்டுக்கொண்டே சென்றது அவனது கனவுகள் பட்டியல்.  இவ்வாறு, கனவு ...

அன்பின் சக்தியை விளக்கும் அருமையான கதை நேரம்

அனைவரும் வாசிக்க வேண்டிய, அன்பின் வலிமையை விளக்கும் சிறுகதை நேரம்👇👇 அன்பின் சக்தி ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப்பள்ளியில் கல்வி கற்றாள் லதா. எனவே, ஆறாம் வகுப்பைத் தொடர, அவள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டாள்.  புதிய பள்ளிக்கு சென்ற லதா, அனைவரிடமும் அன்பாகவும் பணிவாகவும் பழகினாள். அவளது அன்பும் சிறந்த பண்பும், சில நாட்களுக்குள்ளே, பள்ளியிலுள்ள பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால், "புதியதாக பள்ளிக்கு வந்தவள், ஒரு மாதத்திற்குள் அனைவரிடமும் நற்பெயர் வாங்கிவிட்டாள்" என்பது, அதே பள்ளியில் பல வருடங்களாக படித்து வந்த சியாமளாவின் மனதில் பொறாமையை ஏற்படுத்தியது. தன் நெருங்கிய நண்பர்களும் அவளுக்கு ஆதரவு கொடுப்பது, அவள் மனதில்  எறிந்து வந்த பொறாமைத்தீ மேலும் வளர எண்ணெய் ஊற்றியது. லதாவின் மீதான அவளது எண்ணத்தை மாற்ற, அவளது தோழிகள் பலமுறை முயற்சி செய்தனர்.  ஆனால், எதுவும் பலன் தரவில்லை. அவளிடம், எவரேனும் லதாவின் நற்குணங்களைப் புகழ்ந்து கூறினால், அவள் வெறுப்போடு அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுவாள். எனவே, அவள் தோழிகள்,  லதாவை பற்றி அவளிடம் பேசுவதை நிறுத்தி கொண்டனர். ஆனால், லதாவின் அன்பை மறுக்க...

பெற்றோரின் அருமையை விளக்கும் சிறுகதை நேரம்

சிறப்பான கருத்தை விளக்கும் சிறுகதை நேரம்👇👇   பாலனுக்கும் நிலாவிற்கும் திருமணமாகி பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டது. இத்தம்பதியினரின் ஒரே மகளின் பெயர் மாலா. பாலன் அரசுக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி நிலா, ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இருவரின் வருமானமும் குடும்பச்செலவுகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருந்தது.  மாலா பிரபலமான தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாள். பெற்றோர் இருவரும் பணிபுரிவதால், மாலாவின் மனம் பாதிக்கக்கூடாது என்பதற்காக,  அத்தம்பதியினர், தங்கள் மகளுடன் நேரம் கழிக்கவும் தவறியது இல்லை. இருவரும் சம்பாதிப்பதால் பணத்தேவையும் குடும்பத்திற்கு இல்லை. எனவே, அத்தம்பதியினர் திருப்தியான வாழ்வு வாழ்ந்து வந்தனர். மாலாவின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தாலும், அவள் தன்னுடன் பயில்பவர்களை தன்னுடன் ஒப்பிட்டு கவலையாக இருப்பாள். அவள் இவ்வாறு எப்போதும் திருப்தியற்ற மனதுடன் இருப்பதை எண்ணி, அவளது பெற்றோர் மிகவும் வருத்தம் அடைந்தனர். மாலாவின் பிறந்தநாளுக்கு ஒருவாரம் மட்டுமே இருந்தது. எனவே, மூவரும் பிறந்தநாள் உடை எடுக்க கடை...

அகம்பாவத்தின் அழிவை விளக்கும் அற்புதமான கதை

  மனம் நெகிழ வைக்கும் அகம்பாவத்தின் அழிவை விளக்கும் சிறப்பான சிறுகதை👇👇 கவிதா படித்து வந்த பள்ளியில் கலைத்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் வகுப்புவாரியாக கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் விருதுகளும் கலைவிழாவில் வழங்கப்படும். சென்ற வருடங்களைப் போன்றே, நடப்பாண்டிற்கான கலைவிழா அறிவிப்புகளை பள்ளி நிர்வாகம் வெளியிட்டது. போட்டிகளில் பங்கேற்க பள்ளிக் குழந்தைகள் அனைவரும் ஆவலோடு தயாராகி வந்தனர். போட்டியில் பங்குபெற பெயரை ஆவலோடு பதிவு செய்தாள் கவிதா. எனினும், அவள் பயிற்சி மேற்கொள்ள தயாராக இல்லை.  கவிதா கலைநயத்தோடு நடனம் ஆடுவதில் கைத்தேர்ந்தவள். அவளுடைய இடைவிடாத பயிற்சியாலும் விடாமுயற்சியாலும்  கடந்த மூன்று வருடங்களாக நாட்டியப்போட்டியில் முதற்பரிசை பெற்று வந்தாள். மேலும், அவளை ஊக்குவிக்க எண்ணிய பள்ளி நிர்வாகம், அவளுக்கு"சிறந்த நடனக் கலைஞர்" என்ற விருதை கடந்தாண்டு வழங்கி கௌரவித்தது. ஆனால், கவிதாவின் மனதில் ஊக்கம் பிறப்பதற்கு பதிலாக மமதையும் அகம்பாவமும் அதிகரித்து விட்டது என்பதே நிதர்சன உண்மை. கவ...

அனைவரின் சிந்தை கவரும் சிறப்பான சிறுகதை நேரம்

 அனைவரின் சிந்தையையும் கவரும் சிந்திக்க வைக்கும் சிறப்பான சிறுகதை👇👇 சிந்திக்க வைக்கும் சிறுகதை அந்த காட்டில் ஓநாய்க் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த கூட்டத்தில் இருந்த இரண்டு ஓநாய்கள் அடிக்கடி  தற்பெருமை பேசி தங்களுக்குள் சண்டை இடுவதை வழக்கமாய் வைத்திருந்தன. இந்த இரு ஓநாய்களின் போக்கு கூட்டத்தின் தலைவரான முதிய ஓநாய்க்கு மிகவும் கவலை அளித்தது. காலங்கள் பல நகர்ந்தும் ஓநாய்கள் இரண்டும் திருந்தாததை நினைத்து வருந்திய கூட்டத்தின் தலைவர், ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்த முடிவு செய்தார். இரண்டு ஓநாய்களையும் அழைத்தார். இருவரையும் ஒற்றுமையாய் வேட்டையாடச் செல்லுமாறு கட்டளையிட்டார். தலைவரின் கட்டளையை ஏற்று வேட்டைக்கு புறப்பட்டன இரண்டும். வேட்டையாட சென்ற ஓநாய்கள், கண்ணெதிரே இரண்டு குட்டி ஆடுகளைக் கண்டன. ஓநாய்களைக் கண்டு ஆட்டுக்குட்டிகள் பயந்து நடுங்கின. எனினும், ஓநாய்கள் தங்களுக்குள் வாய்ச்சண்டை போட்டுக்கொண்டு வருவதை பார்த்த குட்டி ஆடுகள் அவற்றை சாமர்த்தியமாக சமாளிக்க முடிவு செய்தன.  ஆடுகளை நெருங்கியும் ஓநாய்கள், "தங்களுக்குள் யார் பலசாலி?" என மோதிக்கொள்வதை நிறுத்தவில்லை. மாறாக, அ...

மனம் கவரும் தமிழில் சிந்திக்க வைக்கும் கதை நேரம்

மனம் கவரும் எளிய தமிழில் சிந்திக்க வைக்கும் சிறுகதை👇👇 சிந்திக்க வைக்கும் சிறுகதை ஐ.டி.துறையில் ஆர்வமாகப் பணியாற்றி வந்தாள் நவீனா. ஆறுமாதங்களாக சுறுசுறுப்பாக பணியாற்றி வந்த அவளை கொரோனா கால ஊரடங்கு வீட்டிற்குள் முடக்கிவிட்டது. மனதை திடமாய் வைத்துக் கொண்டு, வேலைக்கு திரும்பும் நாளை எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள் அவள். ஊரடங்கு என்று தளர்த்தப்படும்? என்ற ஏக்கத்துடன் செய்தித்தாளை புரட்டிய அவளின் கண்களில் பட்டதோ இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பு தான். சோர்வான மனதோடு செய்தியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவள், அலைபேசியின் அலறல் சத்தம் கேட்டு அதைக்  கையில் எடுத்து பணிவோடு பேசலானாள். எதிர்முனையில் பேசியவர், ஐம்பது சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வேண்டும் என கம்பெனியில் முடிவு செய்ததால் வேலையில் இருந்து நவீனாவை நீக்குவதாக தெரிவித்தார். இது அவளுடைய மனதை மேலும் நோகச் செய்தது. பண தேவைகளை பூர்த்தி செய்யும் வழிகளை எண்ணி மனம் நொந்தபடி சோகமாய் அமர்ந்திருந்தாள் நவீனா. அவள் மனதை திசைதிருப்ப எண்ணி, அவளைக் கடைக்கு அனுப்பினாள் அவளுடைய தாய். கடைக்குச் செல்லும் வழியில், முகக்கவசத்தின் அவசியத்தை விளக்கிக...

அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறிய நீதிக்கதை

அனைவரையும் சிந்திக்க வைத்திடும் சிறப்பான சிறுகதை இதோ👇👇 சிந்திக்க வைக்கும் நீதிக்கதை     கவியரசி கதை, கவிதை, நாவல் போன்றவற்றை படைப்பதில் கைத்தேர்ந்தவள். அவளுடைய படைப்புத் திறனும் எழுத்து நடையும் அவளுக்கு பத்திரிகை ஒன்றில் எழுத்தர் பணியை பரிசளித்தது.  தன் திறமைக்கு கிடைத்த பணியை ஆத்மதிருப்தியுடன் செய்து வந்த கவியரசி பணிக்கு எப்போதும் காலந்தவறாது வருகை புரிவதிலும் கெட்டிக்காரியாக இருந்தாள். அன்றைய தினம் பத்திரிக்கை அலுவலகத்தில் பணியாளர்களை சிறப்பிக்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வருடம் முழுவதும் காலந்தவறாது பணிக்கு சரியான நேரத்திற்கு வந்ததற்காக சிறப்பு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது கவியரசிக்கு. அன்று கவியரசி மனநிறைவோடு வீடு திரும்பினாள். ஓருவாரம் கழிந்த நிலையில் ஒருநாள், தினமும் காலை ஆறு மணிக்கு எழும் அவள் அரைமணி நேரம் தாமதமாக எழுந்துவிட்டாள். அதனால் பதட்டமடைந்து, அனைத்து வேலைகளையும் மிகமிக வேகமாக முடித்துவிட்டு பணிக்குச் செல்வதற்காக ஸ்கூட்டரை நோக்கி ஓடினாள்.  அவள் வீடு நான்காவது மாடியில் இருந்தது. நான்காம் மாடியிலிருந்து கீழே நிற்கும் ஸ்கூட்டரை நோக்கி ஓடியவ...

அனைவரையும் சிந்திக்க செய்யும் சிறப்பான சிறுகதை

  மேகலையின் வாழ்வில் ஒரு நாள்... மேகலையின் குடும்பம் மூன்று பேர் மட்டுமே உடைய மிகச்சிறிய குடும்பம். மேகலையின் குடும்ப உறுப்பினர்கள்- அவள், அவள் கணவர் மற்றும் அவர்களது செல்ல மகள் பானு.  குடும்பத்தின் மீது அதீத அன்பும் அக்கறையும் கொண்டவள் மேகலை. ஆனால், பொதுநலன் என வரும் வேளையில் தனக்கு அவற்றின் மீது அபிப்பிராயம் இல்லை என்று கூறி ஒதுங்கிவிடும் பண்புடையவள். மூன்று வயதே நிரம்பிய பானு பல்வேறு சுட்டிக்குறும்புகள் செய்யும் சுறுசுறுப்பான குழந்தை. பானு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். தோட்டத்திலிருந்த செடிகளுக்கு நீர் பாய்த்துக் கொண்டிருந்த கணவர் குழந்தையை பார்த்துக்கொள்வார் என நினைத்து மேகலை மளிகை கடைக்கு சென்றுவிட்டாள். சிறிது நேரம் கழித்து, கடையில் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் மேகலை. வீடு திரும்பும்போது வழியில் இருந்த தண்ணீர்த் தொட்டியிலிருந்து யாரோ ஒருவருடைய முனகல் சத்தம் வருவதை உணர்ந்தாள் மேகலை. எனினும் வீண் பிரச்சனை வேண்டாம் என ஒதுங்கியபடி வீட்டை அடைந்தாள். வீட்டை அடைந்த மேகலை தன் மகளுக்காக வாங்கிய மிட்டாய்களை கொடுக்க 'பானு' என தோட்டத்தை நோக்...

அனைவரையும் சிந்திக்க வைக்கும் கதை நேரம்

மாற்றம் நம் கையில்... அன்று ஞாயிற்றுக்கிழமை, பள்ளி விடுமுறை எழிலரசிக்கு. வீட்டுப்பாடம் முடித்துவிட்ட எழில், பொழுதைக் கழிப்பதற்காக செய்வதறியாமல் தெருவைப் பார்த்தபடி வீட்டு வாயிலருகில் அமர்ந்திருந்தாள்.  எழிலின் வீட்டிற்கு எதிரில் மளிகை கடை இருந்ததால், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை பார்க்க வேண்டி இருந்தது. கடைக்கு மிட்டாய் வாங்க வரும் குட்டிக் குழந்தைகள் செய்யும் சுட்டிக் குறும்புகளை பார்த்து ரசித்த வண்ணம் அவள் நேரம் கழித்துக் கொண்டிருந்தாள். அப்போது, அந்த கடைக்கு பேசியபடியே இரு பெண்கள் சென்று கொண்டிருந்தனர். சாலையில் ஆங்காங்கே குப்பையாய் கிடப்பதை பற்றி கவலையை தெரிவித்துக் கொண்டிருந்தனர். சாலையை சுத்தம் செய்ய அரசு பொறுப்பேற்காமல் அலட்சியம் காட்டுவதாய் குற்றம் சாட்டியபடி நடந்தவர்கள் கடையை அடைந்தனர். சமூகத்தை மாற்றத் துடிக்கும் அவர்களுடைய பேச்சு எழிலுக்கு மகிழ்வைத் தந்தது. அவர்கள் மீது எழிலுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. கடையில் பொருட்கள் வாங்கியவர்கள், தங்கள் தாகம் தணிப்பதற்காக வாங்கிய தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரை பருகிவிட்டு காலியான பாட்டிலை கசக்கி கீழே வீசியபடி மீண்டும் ப...

அனைவரையும் சிந்திக்க வைத்திடும் சிறுகதை நேரம்

Image
சிந்திக்க வைக்கும் சிறுகதை நேரம் தமிழரசி மென்மையான குணம் கொண்டவள்.  அவள் தன் நண்பர்கள் மீது அக்கறையுடன் இருப்பவள். அவள் தோழி கமலா, அன்று பள்ளிக்கு வந்ததிலிருந்தே மிகவும் சோர்வாக இருந்தாள். தன் தோழியை கவனித்த தமிழரசிக்கு ஏதோ தவறாகத் தோன்றியது. கமலாவிடம் சோர்விற்கான காரணத்தை வினவினாள் தமிழரசி.  தோழியின் கேள்விக்கு, "விரதம் மேற்கொள்வதால், முகம் வாடி இருக்கக்கூடும்" எனக் கூறி சமாளித்தாள் கமலா. இந்த நிலை ஒரு வாரமாக தொடர்ந்த வண்ணம் இருந்தது. கமலா மிகுந்த சோர்வில் ஆழ்ந்திருக்க, தமிழரசி அவளை சாப்பிடுமாறு வற்புறுத்துவாள். ஆனால் விரதம் எனக்கூறி பிடிவாதமாய் உண்ண மறுத்துவிடுவாள் கமலா. அடுத்த வாரம் முழுவதும் யாரிடமும் காரணம் சொல்லாமல் கமலா ஒருவாரமாக பள்ளிக்கு விடுப்பு எடுத்திருந்தாள்.  ஒருவாரமாக கமலா பள்ளிக்கு வராததால் அதிர்ந்து போனாள் தமிழரசி. எ னவே, கமலாவின் வீட்டிற்கு போன் செய்தாள். போன் செய்த அவளுக்கு பலப்பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தது.  கமலா தனக்கு கைப்பேசி வாங்கித்தரும்படி பெற்றோரிடம் பிடிவாதமாய் இருந்ததாக தெரிய வந்தது.  மேலும், ...

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Let everyone celebrate this special day with our patriotic poem

Followers of Our Blog