அனைவரின் சிந்தை கவரும் சிறப்பான சிறுகதை நேரம்
அனைவரின் சிந்தையையும் கவரும் சிந்திக்க வைக்கும் சிறப்பான சிறுகதை👇👇
சிந்திக்க வைக்கும் சிறுகதை
அந்த காட்டில் ஓநாய்க் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த கூட்டத்தில் இருந்த இரண்டு ஓநாய்கள் அடிக்கடி தற்பெருமை பேசி தங்களுக்குள் சண்டை இடுவதை வழக்கமாய் வைத்திருந்தன. இந்த இரு ஓநாய்களின் போக்கு கூட்டத்தின் தலைவரான முதிய ஓநாய்க்கு மிகவும் கவலை அளித்தது.
காலங்கள் பல நகர்ந்தும் ஓநாய்கள் இரண்டும் திருந்தாததை நினைத்து வருந்திய கூட்டத்தின் தலைவர், ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்த முடிவு செய்தார். இரண்டு ஓநாய்களையும் அழைத்தார். இருவரையும் ஒற்றுமையாய் வேட்டையாடச் செல்லுமாறு கட்டளையிட்டார். தலைவரின் கட்டளையை ஏற்று வேட்டைக்கு புறப்பட்டன இரண்டும்.
வேட்டையாட சென்ற ஓநாய்கள், கண்ணெதிரே இரண்டு குட்டி ஆடுகளைக் கண்டன. ஓநாய்களைக் கண்டு ஆட்டுக்குட்டிகள் பயந்து நடுங்கின. எனினும், ஓநாய்கள் தங்களுக்குள் வாய்ச்சண்டை போட்டுக்கொண்டு வருவதை பார்த்த குட்டி ஆடுகள் அவற்றை சாமர்த்தியமாக சமாளிக்க முடிவு செய்தன.
ஆடுகளை நெருங்கியும் ஓநாய்கள், "தங்களுக்குள் யார் பலசாலி?" என மோதிக்கொள்வதை நிறுத்தவில்லை. மாறாக, அவர்களின் சண்டை அதிகமாகிக் கொண்டே இருந்தது.
ஓநாய்களின் சண்டையை சாதகமாக மாற்ற எண்ணிய ஆட்டுக்குட்டிகள், "எங்களை இரையாக்க, தாங்கள் தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்துங்கள்! நாங்கள் வைக்கும் போட்டியில் வெற்றி பெரும் பலசாலி ஓநாய்க்கு நாங்கள் இருவரும் இரையாவோம்" என்று கூறின.
போட்டியில் வென்று பலசாலி பட்டம் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில், ஆட்டுக்குட்டிகள் கூறிய யோசனையை அருமை என புகழ்ந்து ஏற்றுக்கொண்டன ஓநாய்கள். "போட்டியின் விதிப்படி, 10 மீட்டர் தூரம் ஓடிச்சென்று மீண்டும் திரும்ப வேண்டும். யார் முதலில் இவ்விடத்தை அடைகிறாரோ, அவருக்கு பலசாலி பட்டமும் எங்களை இரையாக்கும் தகுதியும் கொடுக்கப்படும்" என ஆட்டுக்குட்டிகள் கூறின.போட்டியின் விதிகளை மனதார ஏற்றுக்கொண்டன ஓநாய்கள்.
போட்டி தொடங்கியது; ஓட்டம்பிடித்தன ஓநாய்கள். அவை மீண்டும் திரும்புவதற்கு முன், குட்டி ஆடுகள் தப்பித்து விட்டன. மீண்டும் அவ்விடத்தை அடைந்த ஓநாய்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தன. தன் கூட்டத்திடம் திரும்பிய ஓநாய்கள், "எங்களை மன்னித்து விடுங்கள் தலைவரே! ஒற்றுமையின்மை காரணமாக இரண்டு ஆட்டுக்குட்டிகளிடம் தோற்று விட்டோம்" என கூறின. மேலும்,"இனி ஒற்றுமையாய் நடந்து கொள்வோம்" என்றும் உறுதி அளித்தன.
(கதையை எழுதியவர் சுபஶ்ரீ)
மேலும் கதைகளுக்கு, இங்கே தொடவும்...
எங்கள் கதைகள் தங்கள் சிந்தையை கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். கதையை பற்றி கமண்ட் செய்திடுங்கள் மற்றும் பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள்...😊
��������
ReplyDeleteSemma... Union is strength 💯🔥
ReplyDeleteSuper subha shree !!
ReplyDelete