மனம் கவரும் தமிழில் சிந்திக்க வைக்கும் கதை நேரம்
சிந்திக்க வைக்கும் சிறுகதை
ஊரடங்கு என்று தளர்த்தப்படும்? என்ற ஏக்கத்துடன் செய்தித்தாளை புரட்டிய அவளின் கண்களில் பட்டதோ இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பு தான். சோர்வான மனதோடு செய்தியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவள், அலைபேசியின் அலறல் சத்தம் கேட்டு அதைக் கையில் எடுத்து பணிவோடு பேசலானாள்.
எதிர்முனையில் பேசியவர், ஐம்பது சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வேண்டும் என கம்பெனியில் முடிவு செய்ததால் வேலையில் இருந்து நவீனாவை நீக்குவதாக தெரிவித்தார். இது அவளுடைய மனதை மேலும் நோகச் செய்தது.
பண தேவைகளை பூர்த்தி செய்யும் வழிகளை எண்ணி மனம் நொந்தபடி சோகமாய் அமர்ந்திருந்தாள் நவீனா. அவள் மனதை திசைதிருப்ப எண்ணி, அவளைக் கடைக்கு அனுப்பினாள் அவளுடைய தாய். கடைக்குச் செல்லும் வழியில், முகக்கவசத்தின் அவசியத்தை விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்த தன்னார்வலர்கள் மீது கவனம் செலுத்திய அவளுக்கு அற்புதமான யோசனை தோன்றியது.
கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டை நோக்கி விரைந்தாள். முகக்கவசம் தைக்கும் பணியில் தான் ஈடுபட போவதாய் அறிவித்தாள். பள்ளியில் பயின்ற காலத்தில், அவள் ஆர்வமாய் படித்த கலை கைத்தொழில் தொடங்க அவளுக்கு உறுதுணையாக அமைந்தது. பணதேவைகளைத் பூர்த்தி செய்ய தான் படித்த தையற்கலை உதவியதை எண்ணி பெருமிதம் அடைந்தாள் அவள்.
(கதையை எழுதியவர் சுபஸ்ரீ)
Super...
ReplyDelete