விடாமுயற்சி தந்த மனமாற்றத்தை விளக்கும் நீதிக்கதை
விடாமுயற்சி ஏற்படுத்திய மனமாற்றம்:
பவித்ரா மற்றும் பாலனின் செல்லப் புதல்வியின் பெயர் பாவனா. பாவனா மிகச்சிறந்த புத்திசாலி மற்றும் திறமைசாலி. சதுரங்கம் விளையாடுவது மற்றும் ஓவியங்கள் வரைவது போன்றவற்றில் அவளுக்கு நிகர் அவள் மட்டுமே. ஆனால், அவள் மிகவும் சோம்பேறியாக இருந்தாள்.
அவளுடைய சோம்பேறிக் குணம் அவளது திறமைகளை வெளிப்படுத்த தடையாக இருந்து வந்தது. எனவே, அவளது பெற்றோர் அவள் குணத்தினை எண்ணி மிகவும் கவலை அடைந்து வந்தார்.
தன் மகளின் சோம்பேறிக் குணத்தை திருத்தவும் அவளது திறமையின் சிறப்பை உணர்த்தவும் எண்ணிய பெற்றோர் அவளுக்கு சிறிய பாடம் புகட்ட முடிவு செய்தனர். ஆகவே, அவளை மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அந்த இல்லத்தில், ஆண்டுக்கு ஒரு முறை மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விழா நடத்துவது வழக்கம். அந்த விழாவைக் காண்பிக்கவே பாவனாவை அவளது பெற்றோர் அங்கே அழைத்து வந்திருந்தனர்.
விழா தொடங்கியது மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்கள் திறமைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினர். அதில், பார்வையற்ற ஒரு சிறுமி தனது இனிமையான குரலால் பாடல்கள் பாடி பார்வையாளர்களைக் கவர்ந்தாள்.
கூட்டத்தில் இருக்கும் இல்லத்தைச் சார்ந்தோர், அச்சிறுமி பாடிவிட்டு இறங்கியவுடன் அவளை ஆரத்தழுவி பாராட்டு தெரிவித்தனர். அச்சிறுமியை பற்றி விசாரித்த போது, அவளது தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து ஆறு மாதமே ஆன நிலையில், தனது மன தைரியத்தால் அவள் தனது திறமையை வெளிப்படுத்த விழாவில் கலந்து கொண்டது தெரிய வந்தது.
விழாவிலிருந்து வீடு திரும்பிய பாவனாவின் மனதில், அச்சிறுமியின் விடாமுயற்சி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எனவே, அவள் சோம்பலின்றி விடாமுயற்சி செய்து தன் திறமைகளை வெளிப்படுத்த முடிவு செய்தாள்.
நீதி: சோம்பலின்றி விடாமுயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கைவசமாகும்.
(கதையை எழுதியவர் சுபஶ்ரீ)
தங்கள் அனைவருக்கும் எங்கள் கதை பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் பல கதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். தங்கள் கருத்துக்களை கமண்ட் செய்திடுங்கள் மற்றும் கதைகளை தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
விடா முயற்சியின் விஸ்வருப வெற்றி
ReplyDeleteஅருமையான சிறுகதையை தந்தமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteஅருமை!!
ReplyDelete😇👌
ReplyDeleteWell said💯
ReplyDelete