உயர்ந்த நெறிகளின் சிறப்பை விளக்கும் சிறுகதை நேரம்
சிறந்த கருத்துக்களை பகிரும் சிறப்பான சின்னஞ்சிறு கதை👇👇
சிறுகதை நேரம்
பாலன் ஒரு திறமையான பட்டதாரி இளைஞன். அவனுக்கு கதைகள் எழுதுவது, கட்டுரை எழுதுவது, ஓவியம் தீட்டுவது மற்றும் பாடல்கள் பாடுவது போன்றவற்றில் ஆர்வம் அதிகம். ஆனால், படிப்பதில் அதிகம் நாட்டமின்றி இருந்தான். பெற்றோரின் வற்புறுத்தலால் பி.காம் படித்துவிட்டு கணக்காளர் (அக்கவுண்ட்டன்ட்) பணிக்காக பல அலுவலகங்களில் விண்ணப்பித்து வந்தான். அவனது கனவு, மிகப்பெரிய எழுத்தாளன் ஆக வேண்டும் என்பதே!
எழுத்தாளர் பதவி அனைவருக்கும் எளிதில் கிடைக்காது. எனவே, அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தற்போதைக்கு ஏதேனும் ஒரு அலுவலகத்தில் கணக்காளர் பணியைத் தேடிக் கொள்வது நல்லது என்று அவனது பெற்றோர் அறிவுரைத்தனர்.
கனவுகளை கரம்பிடிக்க ஏங்கிய அவன் மனம், பெற்றோரின் அறிவுரையை ஏற்று, பணத்தேவையைப் பூர்த்தி செய்ய கணக்காளர் பணியைத் தேடி பலப்பல அலுவலகங்களில் விண்ணப்பித்து வந்தது. ஒருவார காலம் இவ்வாறே கழிந்தது.
மேலும், ஒருவாரத்திற்குப் பின், எதிர்பாராத விதமாக, ஆனந்த செய்தி அலைபேசியில் வந்தது. கணக்காளர் பணிக்கான நேர்காணல் அழைப்பு தான் அது. தங்கையின் படிப்புச் செலவையும் தந்தையின் வேலையிழப்பையும் சமாளிக்க தனது கணக்காளர் பணி அவசியம் என முடிவு செய்துவிட்டு அரைகுறை மனதோடு நேர்காணலுக்கு தயாராகினான் பாலன்.
இரவு முழுவதும் குடும்பச் சூழல், லட்சியம் மற்றும் நேர்காணல் என அனைத்தையும் சிந்தித்து தூக்கமின்றி தவித்தான் அவன். ஆனால், பணத்தேவைக்காக, உறுதியான மனதோடு நேர்காணலுக்கு புறப்பட்டான்.
காலைப்பொழுது விடிந்தது. அவன் நேர்காணலுக்காக அலுவலகத்தை நோக்கி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தான். அவன் அமர்ந்திருந்த இருக்கையின் அருகில், நாற்பது வயதுடைய மதிக்கத்தக்க மனிதர் நின்று பயணம் செய்து வந்தார். அவர் கைகளில் இரண்டு பைகள் வைத்திருந்தார். கூட்ட நெரிசல் காரணமாக, அவர் கையில் இருந்த பையில் ஒன்றை, அமர்ந்திருந்த பாலனிடம் கொடுத்தார். பையை பத்திரமாக வைத்திருந்தான் பாலன்.
திடீரென அந்த நபரைத் தேடிப் பார்த்த போது, அவர் பையை மறந்துவிட்டுச் சென்றதை உணர்ந்தான் அவன். நேர்காணலுக்கு தாமதமாவதையும் உணர்ந்தான் அவன். செய்வதறியாது, பேருந்திலிருந்து இறங்கினான். பையைத் திறந்து பார்த்தான். உள்ளே, கட்டுக்கட்டாய் பணம் இருந்தது.
உடனே, தனது நேர்காணலை பொருட்படுத்தாது, பையை ஒப்படைக்க அருகிலிருந்த காவல் நிலையத்தை அடைந்தான். அங்கே, புகார் தர வந்திருந்த பையின் உரிமையாளரைக் கண்டு, அவரிடம் பையை ஒப்படைத்தான். தனது மகனின் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த பணத்தை திருப்பிக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
பாலன் கணக்காளர் நேர்காணலை விட்டுவிட்டு, பையை ஒப்படைக்க வந்துள்ளதை அறிந்தார் அவர். எனவே, நேர்மைக்கு பரிசாக அவர் பணிபுரியும் இடத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க உதவி செய்தார். அவர் பத்திரிக்கை அலுவலகத்தில் பணி புரிந்து வந்தார். அவனது எழுதும் திறன், பத்திரிக்கை அலுவலகத்தில் மிக எளிதாக எழுத்தாளர் பணியைப் பெற்றுத் தந்தது. அவனுடைய நேர்மை நெறி, நல்ல சம்பளத்தோடு, அவனுடைய கனவையும் கைவசப்படுத்தி தந்தது.
நீதி: நேர்மை நிச்சயம் உயர்ந்த பரிசைத் தரும்.
(கதையை எழுதியவர் சுபஶ்ரீ)
மேலும், கதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள் மற்றும் கதைகளை பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள்...😄
அருமையான கதை!!!!
ReplyDeleteNice story
ReplyDeleteசிறப்பான சிறுகதை👌
ReplyDeleteWell said💯🔥
ReplyDelete